“ஞானத்தோடு வாழ்கிறவனுக்கு அன்பு செய்வதை விட வேறெவனுக்கும் கடவுள் மிகுதியாய் அன்பு செய்வதில்லை”.
ஞான ஆகமம் 7 : 28
எகிப்து தேசத்தை நோக்கி ஒரு சிறிய கல்வாரிப் பயணம் தொடர்கிறது..
வாழ்க்கையில் துன்பம் அனுபவித்தைப் பார்த்திருக்கிறோம்..
ஆனால் துன்பங்களே வாழ்க்கையாகிப் போனவர்களைப் பார்த்திருக்கிறீர்கள்..
அவர்கள் சேசு, மரி, சூசை தாங்கிய திருக்குடும்பம்..
நம் வாழ்க்கையில் சிறு துன்பங்கள் வந்தாலும் , “ இந்த கடவுளுக்கு கண் இல்லையா? காது இல்லையா? “ என்று கேட்பதோடல்லமல் இன்னொரு கேள்வியையும் சேர்த்து கேட்போம்.. அதுதான் கொடுமை..
“ நான் என்ன தப்பு செய்தேன்.. கடவுள் எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பங்கள், சோதனைகள் வருகின்றன?”
ஏன்னா நாம எல்லோரும் புனிதர்களாச்சே.. நமக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாதே..
இங்கே பாருங்கள்.. கடவுள், கடவுளின் தாயார், கடவுளின் வளர்ப்பு தகப்பனார் கடவுளைக் காப்பாற்ற கடவுளோடு ஓடுகிறார்கள் அந்நிய தேசத்திற்கு..
கரடு முரடான பாதை, மழை, வெயில், குளிர், பனி, வெட்டவெளி நெடுந்தூர பயணம்.. பசி.. பட்டினி.. மாதா பச்சை உடம்பு, சேசு பச்சிளம் பாலகன்.. சூசையப்பர் அவர்களோடு நடக்க வேண்டும், அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.. அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்.. இந்த பயணம் கண்டிப்பாக இரண்டு மாதங்களாவது நீடித்திருக்க வேண்டும்..எப்பேர்பட்ட கொடுமையான மற்றும் கடுமையாக இருந்திருக்க வேண்டும்..
அவர்கள் முனுமுனுத்தார்களா? இல்லையே? அதை அப்படியே நம்முடைய பாவத்திற்கு பரிகாரமாக ஒப்புக்கொடுத்தார்கள்..
ஏன் அவர்களுக்கே.. இந்த நிலைமை.. ஏன்னென்றால் மனுக்குலத்தின் பாவம் ஒரு பாவக்கடல்.. சமுத்திரம்..
நாம் நினைப்பதுபோல நம்முடைய பாவத்திற்காக சேசு சுவாமி கல்வாரியில் மட்டும் பரிகாரம் செய்யவில்லை.. அவருடைய 33 வயது வாழ்க்கையே பரிகாரம்.. அதோடு மாதாவின் பரிகாரமும், சூசையப்பரின் பரிகாரமும் சேர்கிறது..
அந்நிய தேசத்தில் அகதிகளாக போய் சேருகிறார்கள்.. கடவுளும், கடவுளின் பெற்றோரும்..
அங்கு எங்கே வீடு தேடுவார்கள்.. எங்கே குடியிருப்பார்கள்? தெரியாத நாடு.. புரியாத மொழி.. அங்கே புனித சூசையப்பர் எங்கே வேலை தேடுவார்.. அவர் டாக்டரோ.. இன்ஜினியரோ அல்ல.. சாதாரண தச்சுத் தொழிலாளி..
7 ஆண்டுகள் அங்கே திருக்குடும்பம் இருந்தது என்கிறது.. கடவுள் மனிதனின் காவியம் மற்றும் பாரம்பரியம்..
எரோது இறந்தவுடன்.. மீண்டும் “சொந்த நாட்டுக்கு அழைத்துச் செல் “ என்று சூசையப்பருக்கு மீண்டும் கடவுளின் கட்டளை..
மீண்டும் திருக்குடும்பம் திரும்புகிறது.. 7 வயது சிறுவன் இயேசுவோடு..
மீண்டும் வீடு தேட வேண்டும்.. வேலை தேட வேண்டும்.. மாதாவையும், சேசுவையும் காப்பாற்ற வேண்டும்.. புனித சூசையப்பருக்குத்தான் எவ்வளவு கஷ்ட்டங்கள்.. முனுமுனுதாரா அவர்..
நம் சேசு சுவாமியின் நற்செய்தி பணி மற்றும் கல்வாரிக்கு சில ஆண்டுகளுக்கு முன்தான் புனித சூசையப்பர் மரிக்கிறார்… ஏற்கனவே நமக்காக, மீட்புக்காக ஒரு கல்வாரியை அனுபவித்த பின்..
அவர் நோய்வாய்பட்டு மரிக்க காரணம் அவரின் கடினமான உழைப்பு..
திருக்குடும்பத்திற்கு சோறு போடுவதிலும் அவருக்கு பல சிக்கல்.. தொழில் நன்றாக இருந்தால் ஏழைகளுக்கு தானம்.. சரியாக இல்லையென்றால் பசி.. பட்டினி... வீட்டிலும் வறுமை..
துன்பங்களுக்கு மத்தியில்தான் இந்த முதல் துறவற சபையான திருக்குடும்பத்தின் வாழ்க்கை..
மாதாவுக்கும், சூசையப்பருக்கும் வராத முனுமுனுப்பு நமக்கு ஏன் வருகிறது?
சரி..
ஆண்டவர், மாதாவைப் பார்த்து “யார் ஏன் தாய்? “ என்று கேட்டு விட்டாராம்…
இது அவர்களுக்கு பெரிய இடையூராக இருக்கிறதாம்..
இந்த சம்பவத்தைப் பற்றி சற்று விரிவாக பார்க்க வேண்டும்.
இந்த சம்பவம் இரண்டு நற்செய்தியில் இருக்கிறது.. அதன் தொடர்பை பார்க்கலாமா?
கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..
“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே..
ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..
பரிசுத்த ஆவியானவர் போற்றி !
நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !