வரலாற்றிலே நூற்றாண்டுகள் பல உருண்டோட அர்ச்.இராயப்பரை அடித்தளமாகக் கொண்ட சேசுகிறீஸ்து எழுப்பிய திருச்சபையாக மாறிற்று மாட்டுத் தொழுவம். வியப்பூட்டுவது என்னவென்றால் மாட்டுத் தொழுவத்திற்கு வழி கண்ட அதே இரு வகுப்பினரே இன்றும் திருச்சபைக்கு வழி காண்கின்றனர் ஆயர்களின் வாரிசும், அறிஞரின் வழித்தோன்றலுமே என்றும் புனித வாயில்களில் நுழைவு கொள்கின்றனர். இதையே வேறு விதமாகவும் சொல்லலாம். திருச்சபையில் சிந்திப்போர் சிந்தியா தோர் ஆகிய இரு எதிர் நிலைகளுக்கே இடமிருக்கிறது. தாம் சிந்திப்பதாக எண்ணும் எவருக்கும் அங்கே இடமில்லை
எளிய மக்களும் ஆழ்ந்து சிந்திக்காதவர்களுமே முதலில் திருச்சபையைக் கண்டடைகின்றனர். ஆண் பெண் பாலரில் பெருந்தொகையினருடைய அறியாமை, ஆழ்ந்து அறிந்த அறிவாளரின் நீதிகளைவிட விளக்கமுற்றிருக்கிறது. எளிய உள்ளங்களுக்கு, யூதேயா மலைச்சரிவுகளிலே வாழ்ந்து வந்த ஆயர்களை ஒத்தவர்களுக்கு, அவர்களின் அன்றாட அலுவல்களை முன்னிட்டு படித்தறிய ஓய்வு கிடையாது.
அப்படி அவர்களுக்கு ஓய்வு கிடைத்தாலும், அந்த ஆயர்களைப் போன்றே, வானதூதராலும் சர்வேசுரனின் பிரதிநிதிகளாலும் கற்பிக்கப்படவே விரும்புகின்றனர் சிந்தியாது வாழும் மக்கட் கூட்டத்திற்கு திருச்சபையின் அதிகாரம் ஒன்றே போதுமானது பெற்றோரின் கட்டளைகளை எவ்வளவு அன்போடு சிறுவர் ஏற்றுக்கொள்கின்றனரோ, அவ்வளவு அன்போடு இவர்களும் திருச்சபை வகுக்கும் ஆணையின் வழிநின்று நடப்பர்.
தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆளுடைய காலங்கடந்த பிறப்பை ஏன் தோன்றல் என்றும், மூன்றாம் ஆளுடைய வெளியீட்டை ஏன் ஆவி என்றும் சத்திய திருச்சபை கூற வேண்டுமென்று அறிய இவர்கள் ஆவலுறுவதில்லை. எவ்வாறு சிறுவர் தங்களுடைய பெற்றோர் வாக்களிக்கும் நகராண்மையின் அரசியல் விவரங்களை அறிய விரும்புவதில்லையோ, அவ்வாறே இவர்களும் அப்பத்திலும் இரசத்திலும் அவைகளின் உயிர்ப்பொருள் (substance) நீங்கினாலும் சினைப்பண்புகள் (accidents), எப்படி நீங்காது தனித்து நிற்கக் கூடும் என்று அறிய கவலைப்படுவதில்லை.
இவர்கள் திருச்சபையானது என்ன கற்பிக்கிறது என்ற ஒன்றைமட்டும் அறிய விரும்புகின்றனர்; அது ஒன்றே போதும் கிறீஸ்துவின் பிரதிநிதி என்ன கூறுகின்றார் என்று அறிய விலைகின்றனர்; அவர் கூற்று இவர்களுக்கு முழு அமைதி அளிக்கும்
உலகம் இவர்களை மடையர் என்று கூறலாம்; திருச்சபையில் அறிவிலிகளே நிறைந்துள்ளனர் என்று எள்ளி நகையாடலாம் உண்மையே; நம் திருச்சபையில் கோடி கோடி எளிய உள்ளங்களே உள்ளன. இவர்கள் அதிகாரத்திற்கு அடிபணிந்து நடக்கின்றனர் என்றால் அது ஓர் அதிகாரம் என்பது பற்றியே அன்ற வேறு காரணம் அன்று. இதனால் அவர்கள் மூடர் என்று ஒதுக்க நியாயம் இல்லை. அதற்குப் பொருள் இது ஒன்றே பெத்லகேம் குகையில் கண்டது போல் இன்றும் நம் திருச்சபையில் எளிய ஆயர்கள் மிகுந்துள்ளது
தொடரும்...