“ இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும் “ என்றாள்.
லூக்காஸ் 1 : 38
முதல் அமல உற்பவ பெண் ஏவாள்..
தன்னுடைய சாயாலாகவும், பாவனையாகவும் படைத்து தன் உயிர் மூச்சை ஊதி ஆதாமையும், ஏவாளையும் படைத்தார்.. கடவுள்.
மிகப்பெரிய அழகான எழில் நிறைந்த தோட்டம்.. அந்த தோட்டம் முழுவதையுமே அவர்களிடம் ஒப்படைத்தார் கடவுள். அது மட்டுமல்ல அதில் உள்ள அனைத்து விலங்குகள், பறவைகள், ஊர்வன என்று எல்லா உயிரனங்களை ஆளவும் அதிகாரம் கொடுத்தார். அவர்கள் உண்பதற்கு தேவையான அனைத்து விதமான சுவையில் பழங்கள், இலைகள், காய்கள் என்று தேவையான அனைத்தையும் கொடுத்தார்.. அவர்கள் குளித்து மகிழ அழகழகான நீர் வீழ்ச்சிகளை கொடுத்தார்..
அந்த தோட்டத்திற்கு பெயர் ‘ இன்ப வனம் ‘. அந்த இன்ப வனம் எப்படிப்பட்டதாய் இருந்தது? சந்தோசமும், ஜாலியும் நிறைந்ததாய் இருந்தது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விசயம் அந்த ஜாலி மகிழ்ச்சி எப்படிப்பட்டதாய் இருந்தது என்றால் அசுத்தமும், பாவமும் இல்லாததுமாய் இருந்தது. ஏனென்றால் அதுவரை உலகில் பாவம் நுழையவில்லை. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விசயம். பாவம் மட்டும்தான் மகிழ்ச்சி கொடுப்பதில்லை. பாவம் இல்லாமலும் மகிழ்ச்சியாக ஜாலியாக இருக்கலாம்..
சரி இன்பவனத்தில் இருந்த இன்பங்கள் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்.. ? ஒரே வார்த்தையில் சொல்வதனால் அந்த இன்பங்கள் அனைத்தும் தூய்மை நிறைந்ததாக இருந்திருக்கும்.. அது கடவுளால் அங்கிகரிக்கப்பட்டதாக இருந்திருக்கும்.. அந்த இன்பங்கள் முடிவில்லாத தொடர் இன்பங்களாக இருந்திருக்கும்..
பாவத்தால் வரக்கூடிய மகிழ்ச்சி மிகவும் தற்காலிகமானது.. அது முடிந்ததும் உடனே பயம் பற்றிக்கொள்ளும்.. அல்லது மனது உறுத்தும்..அல்லது குறைந்த பட்சம் கொஞ்ச நேரமாவது மனம் நிம்மதி இல்லாமல் இருக்கும்..
ஆனால் இன்ப வனத்தில் இருந்த இன்பம் அப்படிப்பட்டதல்ல.. நிரந்தரமானது.. தொடர்வது ஒரு சீரியல் போல.. அவர்களுக்கு கவலை, கண்ணீர், கஷ்ட்டங்கள் என்றால் என்னவென்றே தெரியாது..
மாலை நேரத்தில் கடவுளே அவர்களை அழைத்து அவர்களோடு பேசிக்கொண்டு உலாவுவார்.. அவர்களுக்கு ஏதாவது குறை இருக்கிறதா? அசவுகரீகங்கள் இருக்கிறதா? என்று கேட்பார்.. அப்படி ஏதுவும் வசதி குறைவாக இருந்தால் அதை உடனே சரி செய்வார்..
ஆதி காலத்தில் ஆதிப் பெற்றோர்கள் எப்படி இருந்திருப்பார்கள்..
நினைத்துப் பார்த்தால் நமக்கே பொறாமையாக இருக்கிறது அவர்கள் இருந்த நிலமையை நினைத்துப்பார்த்தால்..
அந்த அப்பேர்பட்ட அளவில்லாத இன்பத்தை, முடிவில்லாத மகிழ்ச்சியை அவர்கள் இழக்க காரணமாக இருந்தது என்ன?
அதற்கு முன்..
கடவுள் எல்லாவற்றையும் அவர்களுக்கு கொடுத்திருந்தாலும்..
யாராலும் எளிதில் பின்பற்றக் கூடிய சிறிய அன்புக்கட்டளை கொடுத்திருந்தார்..
பறவைகள், விலங்குகள், அனைத்து உயிரனங்களையும் மனிதர்களுக்குக் கீழ்ப்படுத்திய கடவுள், தான் படைத்த புதிய இனமான மனித இனம் தனக்குக் கீழ்ப்படிகிறதா என்று பரிசோதிக்க அவர்களுக்கு இந்த எளிய கட்டளையைக் கொடுத்தார்..
உயிரனங்கள் அவர்களுக்கு கீழ்ப்படியும்போது அவைகளுக்கு ஆசி கிடைக்கிறது..
மனிதர்கள் கடவுளுக்கு கீழ்ப்படியும்போது அவர்களுக்கு கடவுளிடமிருந்து ஏராளமான ஆசீர்வாதம் கிடைக்கிறது..
இதை ஒரு கட்டளை என்ற பெரிய வார்த்தை கூட சொல்ல வேண்டியதில்லை.. ஒரு சிறிய கட்டுப்பாடு என்று சொல்லலாம்.. ஆனால் அதைக் கூட அவர்களால் கடைப்பிடிக்க முடியவில்லை..
அதற்குக் காரணம் என்ன?
1. பேராசை
2. நம்பிக்கையின்மை.
3. கீழ்ப்படியாமை.
4. பிரமானிக்கமின்மை.
பேராசை :
கடவுள் கொடுத்த எல்லாவற்றையும் நாம் அனுபவிக்கிறோம்.. ஏன் நாம் கடவுள் நமக்குக் கொடுத்தாத அதையும் சேர்த்து அனுபவிக்கக் கூடாது..
நம்பிக்கையின்மை :
நன்மைகள் மட்டுமே நிறைந்த அன்புருவான கடவுள் நமக்கு நன்மைகள் மட்டுமேதான் தருவார் என்பதை நம்பாத தன்மை..
கீழ்ப்படியாமை :
இதுதான் மிக மிக ஆபத்தான குணம்.. இதை அவர்களால் எப்படி செய்ய முடிந்தது?
இன்ப வனத்தையும், அதில் மனிதர்களின் மகிழ்ச்சியையும், முக்கியமாக அவர்கள் கடவுளோடு இருந்த நெருக்கத்தையும் கண்ட சாத்தான் பொறாமை அடைந்தான்..
மேலே உள்ள இரண்டு குணங்களையும் ஏவாளிடம் கண்ட பிசாசு பாம்பு உருவில் வந்து அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இன்ப வனத்திற்கு ஆப்பு வைத்தது..
மேலே உள்ள இரண்டு குணங்கள் ஏவாளுக்கு ஒருவேளை இல்லாமல் இருந்திருந்திருந்தால் பாம்பிடம் தப்பியிருப்பாள்.. ஆனால் அவள் மாட்டிக்கொண்டாள்.. ஏன்?
ஓரே வார்த்தையில் பாம்பின் வாயை அடைத்திருக்கலாம்.. என்ன வார்த்தை அது?
ஏவாளால் செய்ய முடியாததை மாதா செய்து சாதித்து காட்டியது எப்படி?
ஏவாள் பரிட்சையில் முதல் கேள்வியிலேயே பெயிலாகி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டாள்..
ஆனால் மாதா ஒவ்வொரு கேள்விக்கும் சரியாக விடையளித்து பசாசை கடைக்கோடி இடத்திற்கு தள்ளிவிட்டார்கள்..
அதன் இரகசியம் என்ன? கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..
“ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..
பரிசுத்த ஆவியானவர் போற்றி !
நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !
இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க !