இயேசு சுவாமியின்பால் நம்மை ஈர்க்கிறது!
இயேசு சுவாமியின் வாழ்க்கை, பாடுகள், மகிமையை சிந்திக்க வைக்கிறது!
நம்மை புண்ணியங்களால் நிரப்புகிறது.
பாவத்தின் மீது வெறுப்புகொள்ளச்செய்கிறது.
தேவ மாதாவின் துணையை உணரச் செய்கிறது.
ஆபத்துகளில் நின்று நம்மை பாதுகாக்கிறது.
நமக்கு ஆன்ம சோதனை தந்து பாவத்தில் விழத்தாட்டுகிற பிசாசுகளை விரட்டுகிறது.
சாத்தானை ஜெயிக்க நமக்கு வலிமை தருகிறது.
குடும்பங்களில் சாமாதானத்தை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் மற்றும் உலக சமாதானத்தைப் பெற்றுத்தருகிறது.
எண்ணற்ற பேருபலன்களை பெற்றுத்தருகிறது.
நமது தேவைகளை கடவுளிடமிருந்து பெற்றுத்தருகிறது.
கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவை அதிகமாக்குகிறது.
நம் ஆன்மாவை சுத்தமாக்குகிறது.
இயேசுவின் அன்பில் நம்மைபற்றியெரியச்செய்கிறது.
மாதாவின் பாதுகாப்பையும், அடைக்கலத்தையும் நம் மரண நேரம் வரையிலும் பெற்றுத்தருகிறது.
நம்மை மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு வழியாகத் திகழ்கிறது.
தமதிருத்துவத்தின் மகிமையை பறைசாற்றுகிறது.
மூவொரு கடவுளால் அதிகமாக விரும்பப்படுகிறது.
எச்சோதனைகளிலுதிருந்தும் நமக்கு வெற்றி தருகிறது.
நமக்கு நல்ல ஒரு ஆன்ம வழிகாட்டியாக திகழ்கிறது.
பகைமையை வேரறுக்கிறது.
கணவன்- மனைவி, நண்பர்களுக்குள் உள்ள பூசல்களை/கருத்து வேறுபாடுகளை சரி செய்கிறது.
நம்முடைய தவறுகளைத் திருத்துகிறது.
நம்முடைய தவறுகளுக்கும், குற்ற உணர்வுகளுக்கும் நம்மை பரிகாரம் செய்யத் தூண்டுகிறது.
நாம் வேலை செய்யும் இடத்தில் வருகின்ற பிரச்சனைகளை சரி செய்து நம்மை பாதுகாக்கிறது.
நம்முடைய பயணங்களில் நம்மை பாதுகாக்கிறது.
நமக்கு அக மகிழ்ச்சியைத் தருகிறது.
தவறான முடிவுகளை எடுக்கவிடாமல் நம்மைத் தடுக்கிறது.
மனக்குழப்பத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
கடவுளோடு நம்மை இனைக்கிறது.
எப்போதும் நம்முடைய எல்லா செயல்களிலும் கடவுளை நமக்கு நினைவுபடுத்துகிறது..
தவறான முடிவுகளை எடுக்கவிடாமல் நம்மைத் தடுக்கிறது.
மனக்குழப்பத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
நாம் செய்யும் தொழில் முய₹₹ற்சிகளில் நமக்கு சரியான வழிகாட்டியாக இருக்கிறது.
கல்வி/வேலை/தொழில் இவற்றில் நம்மை சரியான முடிவுகளை எடுக்கவைக்கிறது.
நம்மை இயேசு சுவாமியின் கரம் பற்றி நடக்க நம்மை பயிற்சிவிக்கிறது.
நம்முடைய சொந்த அறிவுக்குப் பதிலாக கடவுளின் ஞானத்தை நமக்குப் பெற்றுத் தருகிறது.
நமக்கு சரியான வாழ்க்கைத் துணையைப் பெற்றுத்தருகிறது.
நமக்கு கடவுளுடைய தேவ திரவிய அனுமானங்களை தேவையான சமையங்களில் பெற்றுத்தருகிறது.
நம் மரண சமையத்தில் மாதாவின் துணையையும்,பாதுகாப்பையும் பெற்றுத் தருகின்றது.
துர் மரணத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றது.
நல் மரணத்தைப் பெற்றுத்தருகின்றது.
நம்மை எப்போதும் மகிழ்ச்சியாக வைக்கிறது.
நம்மை எல்லாவித பயத்திலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
துறவிகளை துறவு நிலையிலும், இல்லறத்தோர்களை அவர்கள் நிலையிலும் எப்போதும் மகிழ்ச்சியாக கடவுளோடு இனைந்து வாழ பயணம் செய்ய உதவுகிறது.
ஆகவே ஜெபம் செய்வோம்; தினம் ஜெபமாலை சொல்வோம்: கிடைக்கும் நேரங்களில் எல்லாம் சொல்வோம்; பத்து பத்து மணிகளாகக்கூட சொல்வோம்; பாவத்திற்காக பரிகாரம் புரிவோம்; கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்துவோம்; வெற்றி பெறுவோம்; நித்திய மோட்ச ஆனந்த சந்தோசத்தைப் பெறுவோம்;
நமதன்னை நம் தேவைகளையெல்லாம் நமதாண்டவரிடம் பெற்றுத்தருவார்கள், ஆமென்
இயேசுவின் திருரத்தம் ஜெயம்; இயேசுவுகே புகழ் : மரியாயே வாழ்க !