“ அருள் நிறைந்தவளே வாழ்க ! ஆண்டவர் உம்முடனே “
லூக்காஸ் 1 : 28
பழைய ஏவாள்- புதிய ஏவாள் ஒப்புமை
ஏவாள் : கடவுளைப்போல ஆக வேண்டும் என்ற ஆசையால் அகங்காரம் கொண்டு மோட்சத்தை இழந்தாள்.
மாதா : கடவுளுக்கு அடிமையாகி தன்னுடைய அளவற்ற தாழ்ச்சியால் இழந்த மோட்சத்தை மீண்டும் நமக்கு பெற்றுத்தந்தார்.
ஏவாள் : விலக்கப்பட்ட கனியைத் தின்று பூமிக்கு பாவத்தைக் கொண்டு வந்தாள்.
மாதா : பாவத்தை அழிக்க மோட்சத்திலிருந்து திவ்ய நற்கருணை என்ற மாற்று கனியைக் உலகிற்கு கொண்டு வந்தார்.
ஏவாள் : கடவுள் கொடுத்த ஆசீரையும் இன்பங்களையும் புறந்தள்ளிவிட்டு சொந்த ஆசையையும், உலக இன்பங்களையும் தேடினாள்.
மாதா : கடவுளின் ஆசையை தன் சொந்த ஆசையாகக் கொண்டு உலக இன்பங்களை புறந்தள்ளிவிட்டு, துன்பங்களை ஏற்றுக்கொண்டு கடவுள் கொடுத்த ஆசீரையும், அவர் கொடுத்த மோட்சத்தையும் மட்டுமே நாடினார்.
ஏவாள் : தானும் கெட்டு பிறரையும் கெடுத்து கடவுளிடமிருந்து பிரித்தாள்.
மாதா : தன்னுடைய அமல உற்பவம் கெடாமல் உலகிற்கு மீட்பரை கொண்டுவந்து தன்னையும், உலகினர் அனைவரையும் கடவுளோடு இனைத்தார்.
ஏவாள் : கடவுளுக்கு கீழ்ப்படியாமல் பிசாசுக்கு கீழ்ப்படிந்தாள்..
மாதா : நித்தியத்திற்கும் கடவுளுக்கு மட்டுமே கீழ்ப்படிந்தார்.
ஏவாள் : தானும், ஆதாமும் சேர்ந்து மக்கள் நரகத்திற்கு செல்ல வழி காட்டினார்கள்.
மாதா : தான், தன் மகனான புதிய ஆதாமான சேசுவோடு சேர்ந்து பாடுகள் பட்டு, வியாகுலங்கள் அனுபவித்து மோட்சத்திற்கு செல்ல வழிகாட்டினார்கள்.
ஏவாள் : அழிவின் தொடக்கமானாள்.
மாதா : நித்திய வாழ்வின் தொடக்கமானார்கள்.
ஏவாள் : பாவத்தோடு பிள்ளைகளைப் பெற்றுப்போட்டாள்.
மாதா : ஆவிக்குரிய பிள்ளைகளைப் பெற்றுப் போடுகிறார்கள்.
ஏவாள் : உயிர் வாழ்வோர் அனைவருக்கும் தாயான தகுதியை அகங்காரத்தால் இழந்தாள்.
மாதா : உயிர் வாழ்வோர் அனைவருக்கும் தாயான தகுதியை தன்னுடைய அளவற்ற தாழ்ச்சியாலும், கீழ்ப்படிதலாலும், பரிசுத்தத்தாலும், கன்னிமை குன்றா பரிசுத்த கற்பாலும், மாசற்ற இருதயத்தாலும் பெற்றார்கள்.
கபரியேல் தூதரின் வாக்குறுதிகள்- ஆனால் நடந்தவைகள் ஒப்புமை கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..
“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..
பரிசுத்த ஆவியானவர் போற்றி !
நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !