பாத்திமா சிறுமிகளின் வேதசாட்சியம்
கொஞ்சநேரம் வரை யாரும் சிறையில் இருப்பதாக யாருக்கும் நினைவில்லை. இசையின் வசப்பட்டு எல்லோரும் மகிழ்ந்திருந்தபோது, திடீரென்று சிறைக்கதவு திறந்தது. ஒரு போலீஸ் உள்ளே நுழைந்தான். “ வாருங்கள் இங்கே “ என்று கூறினான்.
குழந்தைகள் மூவரும் ஆர்ட்டுரோவின் முன் நின்று கொண்டிருந்தனர். அவர் முகம் எரிந்து போயிருந்தது.
“ அந்த இரகசியம் என்ன? சீக்கிரம் சொல்லுங்கள்” என்று வெடித்தார் ஆட்சித் தலைவர்.
“ ஏன் சொல்ல மாட்டீர்களோ.. பேசவும்மாட்டீர்களோ? என்ன தைரியம் ”என்றார் மீண்டும்.
குழந்தைகள் மூவரும் பயந்து கொண்டே வாய்திறவாமல் நின்றார்கள். இரகசியத்தை சொல்ல முடியாது. என்ன பதில் சொல்வது.. அவர்களுக்கு ஒன்றும் தோன்றவில்லை. தேவ அன்னையின் நினைவு தவிர அவர்களால் வேறு எதுவும் நினைக்கவும் முடியவில்லை. அந்த அம்மா சொல்லக்கூடாது என்றார்கள்தானே?... இவரிடம் எப்படிச் சொல்வது….?
“ சரி உங்களை காப்பாற்ற நினைத்தேன். நீங்கள் நகர ஆட்சிக்கு கீழ்ப்படிய மாட்டீர்கள் இல்லையா? உயிரோடு உங்களை கொதிக்கும் எண்ணெய் கொப்பறையில் போடுகிறேன் “ என்று கோபத்துடன் கூறிய ஆர்ட்டுரோ,
“ யார் அங்கே “ என்று கர்ஜித்தார். உடனே கதவு திறந்தது. கோரமான முகத்துடனும், அரக்க தோற்றத்தையுமுடைய பயங்கர மனிதன் ஒருவன் வந்தான்.
“ என்னாங்க? ” என்று ஆரோசிகமான கடுங்குரலில் கேட்டான்.
“ எண்ணெய் கொதித்து விட்டதா என்ன? “
“ ஆமா, நல்லா கொதிக்குது.”
“ குமிழி விட்டுக்கொதிக்கிறதா?”
“ அப்படியே கொதித்து இளகிப்போய் நிற்குது “
“ இவளைக் கொண்டு போடு உள்ளே “ என்று ஜஸிந்தாவைக் காட்டினார் ஆர்ட்டுரோ..
அந்த பயங்கர மனிதன் ஜஸிந்தாவைப் பிடித்தான். அவள் மற்ற இருவரிடமும் ஒரு வார்த்தை பேசக்கூட சமையம் கொடுக்காமல் அவளைத் தூக்கி சென்றான்.
வந்து விடுமோ என்று பயந்த வேதசாட்சிய நேரம் திடீரென வந்து விட்டது. லூசியா உள்ள துடிக்க ஜெசிந்தாவுக்காக ஜெபித்தாள். தன் தங்கை எண்ணெயில் விழுந்து செத்தாலும் அந்த இரகசியத்தை மட்டும் சொல்லிவிடக் கூடாது என்று அவளுக்காக ஒரு அருள் நிறை மந்திரம் சொன்னான். இதற்குள் ஜெசிந்தா எண்ணெயில் வெந்து இறந்திருப்பாள்! அவள் செத்தால் நாமும் அப்படியே சாவோம் என்றே இருவரும் எண்ணினார்கள்.
“ லூசியா, இவர்கள் நம்மைக் கொன்றால் கொள்ளட்டும் நாம் நேரே மோட்சம் சென்று விடலாம் “ என்றான் பிரான்சிஸ் மெதுவான குரலில். அந்தக்கதவு மீண்டும் திறந்தது. அப்பயங்கர உருவம் வந்து,
“ அது பொறிஞ்சி செத்துவிட்டதுங்க. அடுத்ததைக் கொண்டு போகட்டுமா? “ என்றான் ஒருவித கோர இளிப்புடன் கூறியபடி பிரான்சிஸை முரட்டுத்தனமாய் இழுத்துக்கொண்டு சென்றான் அம்மனிதன்.
லூசியா மட்டும் நின்று கொண்டிருந்தாள். ஆர்ட்டுரோ அவளை வெறுப்புடன் நோக்கி,
“ அடுத்து நீதான் தெறிகிறதா பிள்ளை? அந்த இரகசியத்தை இப்போதாவது சொல்லிவிடு” என்றாள்.
லூசியா உறுதியுடன்:
“ சொல்ல மாட்டேன், சாகிறேன் “ என்றாள்.
“ அப்படியா? அப்போ சாகு! ”
இதற்குள் அப்பயங்கர மனிதன் லூசியாவையும் இழுத்துச் சென்றான். இழுத்துச் சென்ற அவன், ஓர் அறையைத் திறந்து, லூசியாவை உள்ளே தள்ளிவிட்டுப் போய்விட்டான்! அங்கே நின்றார்கள் பிரான்சிஸூம், ஜெசிந்தாவும்! மூவரும் ஒருவரை ஒருவன் கட்டிக்கொண்டு மகிழ்ச்சியால் நிறைந்து போனார்கள். தன்னைத் தவிர மற்ற இருவரும் எண்ணெய் கொப்பறையில் இறந்து விட்டதாக எண்ணிய அவர்கள் மூவருக்கும் இது பெரிய ஆறுதலாயிருந்தது. ஆர்ட்டுரோ இப்படி ஒரு நாடகம் நடத்தியது அப்போதுதான் குழந்தைகள் அறிந்தார்கள்.
மரணத்திற்கும் அஞ்சாத திடம் இச்சிறுவர்களுக்கு எப்படி வந்தது என்று ஆர்ட்டுரோவால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
நன்றி : பாத்திமா காட்சிகள் நூல், பாத்திமா காட்சிகள் மற்றும் சிறந்த கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க தொடர்புக்கு, மாதா அப்போஸ்தலர்கள் சபை, ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில் தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983, சகோ. ஜேசுராஜ் : 9894398144.
சிந்தனை : நாம் எத்தனையோ பெரிய பெரிய புனிதர்களின் வேத சாட்சியத்தைப் பார்த்துள்ளோம். ஆனால் 10, 9, 7 வயது நிரம்பிய இந்த சிறுமிகளின் வேத சாட்சியத்தை பார்த்ததுண்டா.. உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கிறது, பாவிகளுக்காக தங்கள் அனைத்து துன்பங்களையும் பரிகாரமாக மாற்றியது. மரணத்தின் விழும்பிற்கே சென்ற இந்த பிஞ்சுக்குழந்தைகளின் மன உறுதியையும், அவர்கள் கடவுள் மேல் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையையும், விசுவாசத்தையும் என்னவென்று சொல்வது.
அந்த சூழ்நிலையிலும் மாதாவையும், மாதா சொல்லியவைகளையுமே நினைத்துக் கொண்டிருந்தார்களென்றால் மாதாவின் மேல் நாம் கொண்டுள்ள பக்தியும் அன்பும் என்னதான் செய்யாது.. நமக்கு என்னதான் பெற்றுத்தராது..? அதே போல் அவர்கள் அந்த சூழ்நிலையும் ஜெபமாலை ஜெபித்து கைதிகளை மனந்திருப்பி.. அவர்களையும் கடவுளால் பாதுகாக்க வைத்து ஜெபமாலையின் வல்லமையும் நிரூபித்து விட்டார்கள்..
நம்முடைய விசுவாச வாழ்க்கையை இந்த பிஞ்சுக் குழந்தைகளுடன் ஒப்பிட முடியுமா? அவர்கள் எங்கே… நாம் எங்கே… நாமும் அந்த குழந்தைகளைப் போல் என்ன நடந்தாலும்… எது நடந்தாலும்.. நம்முடைய விசுவாசத்தை தளர விடாமல் ஜெபத்தில் உறுதியாக இருப்போமா?.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !