“மாட்சிப்படுத்தப்பட்ட குடிகளிடத்தில் நான் வேரூன்றினேன். என் கடவுளின் உரிமை என் உடைமை. புனிதருடைய கூட்டத்தில் என் உறைவிடம்.”
சீராக் 24 : 16
இந்தப் பகுதியை நாம் ஆழமாக சிந்தித்து தியானிக்க வேண்டும்..
“ மாட்சிப்படுத்தப்பட்ட குடிகளிடத்தில் நான் வேரூன்றினேன்..”
மாதாவை நேசிப்பதும், அவரை அன்பு செய்வதும், அவரை தங்கள் தாயாக கொள்வதும், போற்றுவதும் யார்? நாம் தானே.. தூய பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையின் மக்கள்தானே? நாம் நம் தாயிடம் நேசம் வைத்தால் அத்தாய் நம் ஆன்மாக்களில் வேரூன்றுவார்கள்.. அவரை நம் ஆன்மாக்களில் கண்டிப்பாக அனுமதித்தால் இந்த அற்புதம் நிகழும்..
அடுத்து பாருங்கள் “ என் கடவுளின் உரிமை என் உடைமை “ – கடவுளின் உரிமையெல்லாம் நம் தாயின் உடைமையாக இருக்கின்றது.. “ சுதனாகிய சர்வேசுரன் பிதாவின் உரிமை.. அவர் நம் தாயின் மகனாக உடைமையாகவும் இருக்கின்றார்.
பரிசுத்த ஆவியாயானவர் – பிதாவின் உரிமை.. பரிசுத்த தேவமாதாவின் மணவாளராக, ஆலயமாக, உடைமையாகவும் இருக்கின்றார்..
தேவமாதா பிதாவின் உரிமையாக பிரிய மகளாக இருக்கிறார்கள்.. அதே சமையம் நேசபிதாவின் உடைமையாகவும் இருக்கிறார்கள்..
இது எப்பேற்பட்ட மாட்சிக்குரிய மேன்மைக்குரிய புனிதமான ஒரு பேருண்மை.. மற்றும் மறையுண்மை..
தூய தமத்திருத்துவத்திற்கு அடுத்து அவர்களின் உரிமை யார்? அவர்கள்தான் புனிதர்கள்.. அவர்கள் எப்படி இருக்கிறார்களாம்..
“புனிதருடைய கூட்டத்தில் என் உறைவிடம்” அவர்கள் மத்தியில்தான் நம் தேவதாய் வாழ்வார்களாம்.. புனிதத்தின் மத்தியிலும் புனிதர்கள் மத்தியிலும் வாழ்பவர்கள்தான் நம் தாய். புனிதர்கள் நம் நேச பிதாவின் உரிமை அவர்கள் நம் தேவதாயின் உடைமைகளாவும் இருக்கிறார்கள்..
ஆக கடவுளின் உரிமையெல்லாம் நம் நேசத் தாயின் உடைமைகளாகவும் இருக்கிறார்கள்.. இந்த உரிமையையும், இந்த உடைமைகளையும் அவர்களுக்கு கொடுத்தது யார்? நம் நேசபிதா..
அதை அவர்களுக்கு கொடுத்து அவர் அழகுபார்க்க என்ன காரணம் ? மீட்பின் திட்டத்திற்கு தன்னையே ஒரு பலிப்பொருளாக, பலி ஆன்மாவாக தன்னையே அர்ப்பணித்ததுதான் காரணம்..
இது என்ன? மாதாவுக்கு மட்டும் எத்தனை பெருமை..? எத்தனை மகிமை..? எத்தனை மேண்மை? எத்தனை சிறப்பு? எத்தனை கொடைகள் ? எத்தனை விலக்குகள் ?
யாரும் கேள்வி கேட்க முடியாது… கேட்கவும் கூடாது.. ஏன்? கொடுத்தது யார் ? நம் நேச பிதா? அது அவர் விருப்பம்..
ஆக நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.. நம் தேவ தாய் நம் ஆன்மாக்களில் வேரூன்ற அனுமதிப்பதுதான்..
அதற்கு பரிசுத்த ஆவியானவரின் உதவியைக் கேட்க வேண்டும்.. திவ்ய நற்கருணை ஆண்டவரின் உதவியைக் கேட்க வேண்டும்.. நாம் ஜெபிக்க வேண்டும்..
ஜெபிப்பதற்கு முதலில் நம் தாயை நேசிக்க வேண்டும்.. அந்த நேசமே அவர்களை நம் ஆன்மாக்களில் வேரூன்ற நம் இதயத்தை பதப்படுத்தும் காரணியாக இருக்கும்..
நம் தேவமாதா நம் ஆன்மாக்களில் மட்டுமல்ல பிற மத சகோதர சகோதரின் ஆன்மாக்களில் கூட வேரூன்றியிருக்க காரணம் அவர்களும் நம் தாயை நேசிக்கும் அந்த நேசமே..
சரி இப்போது நம் தேவதாயை நம் ஆன்மாக்களில் வேரூன்ற நாம் செய்ய வேண்டிய அடுத்த காரியம் என்ன? ஜெபமாலை ஜெபிப்பதுதான்..
அது அவர்களை நம் ஆன்மாக்களில் வேகமாக வேரூன்ற செய்துவிடும்..அது மாதா செடியை நட்டுவிடும்.. அதுவே அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்க்கும்..
ஆக நம் ஆன்மாக்களில் தேவ தாயை வேரூன்ற அனுமதிப்போம்.. அத்தாய் நம்மை முழுமையாக வளர்த்து நம் ஆன்மாவை வளக்கமாக்கி அதை நம் சேசு சுவாமிக்கு ஏற்றவிதமாக மனமுள்ள மலராக்கி நம்மை சுவாமிக்கு அர்ப்பணிப்பார்கள்..
ஜெபமாலை இராகிணியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே..
ஜெபிப்போம்.. ஜெபிப்போம்.. ஜெபமாலை..
நம் நேசப்பிதா வாழ்த்தப்பெருவாராக !
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !