வினா-விடைகள் 401 முதல் 450 வரை.

401. இஞ்ஞாசியார் போப்டிக்ட் சபையை எதனுடன் இணைக்க முயற்சி எடுத்தார்?

கத்தோலிக்கத் திரு அவையோடு. 

402. இஞ்ஞாசியார் திருத்தந்தையை எதிர்ப்பவர்கள் யாரை எதிர்ப்பது போலாகும் என்றார்?

கிறிஸ்துவை. 

403. இயேசுசபையில் சேர்ந்த முதல் செர்மானியர் யார்?

பீட்டர் கனிசியுஸ். 

404. சீர்திருத்தச் சபையாளர்கள் நிறைந்திருந்த செர்மனிக்கு பேர் மறைப்பணியாற்ற இஞ்ஞாசியார் யார் யாரை அனுப்பி வைத்தார்?

பீட்டர் ஃபேபர், போபடில்லா மற்றும் கிளாஜே. 

405. ஜெர்மனியில் சீர்திருத்தவாதிகளின் சீற்றத்தை அடக்க யாரை அனுப்புமாறு திருத்தந்தை மூன்றாம் பவுல் இஞ்ஞாசியாரைக் கேட்டுக்கொண்டார்?

மீட்டர் கனிசியுஸ். 

406. இயேசுசபை நவதுறவிகள், மாணவர்களின் பாதுகாவலர் யார்?

தூய ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா சே.ச (1550 - 1568) 

407. பிரேசிலுக்கு இஞ்ஞாசியாரால் அனுப்பிவைக்கப்பட்டு "பிரேசில் நாட்டின் அப்போஸ்தலர்" என்றழைக்கப்படும் பெருமைக்கு உயர்ந்த வர் யார்? 

ஜோசப் அங்கியற்றா.

408. எந்தெந்த நாடுகளுக்கு இஞ்ஞாசியார் நடுநிலையாளர் பலரை அனுப்பி சிக்கல்களைத் தீர்க்க முயன்றார்?

இங்கிலாந்து, அயர்லாந்து. 

409. இஞ்ஞாசியார் காலையில் வழக்கமாக எழுகின்ற நேரம் யாது?

4:30. 

410. இஞ்ஞாசியார் காலையில் வழக்கமாக எத்தனை மணி நேரம் தியானம் செய்வார்?

இரண்டு மணி நேரம். 

411. இஞ்ஞாசியாரின் திருப்பலி எவ்வளவு நேரம் நீடிக்கும்?

இரண்டு மணி நேரம். 

412. இஞ்ஞாசியார் திருப்பலியை யாருக்கு ஒப்புக்கொடுப்பார்?

மூவொரு கடவுள். 

413. இஞ்ஞாசியார் திருப்பலி செலுத்துவதற்கு அதிகநேரம் எடுத்துக்கொள்ள காரணம் என்ன?

இறையனுபவம் வெகுநேரம் நீடித்ததால். 

414. எந்த இறையனுபவத்தை நினைத்து திருப்பலியின்போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இஞ்ஞாசியார் கண்ணீர் வடித்தார்?

லா ஸ்போர்ட்டாவில் கிடைத்த இறையனுபவம். 

415. இஞ்ஞாசியார் ஒவ்வொரு நாளும் திருப்பலிக்குப் பிறகு எதற்கு முக்கியத்துவம் அளித்தார்?

ஆன்ம ஆய்வு. 

416. இயேசுசபைத் தோழர்களுக்கு உரோமையில் தங்கிப் பணியாற்ற இடம் கேட்டவர் யார்?

பங்குத்தந்தை பீட்டர் கொடாச்சியோ. 

417. எந்தச் செயலை சபைக்கு அடித்தளம் இடுவது போன்றதென நடால் அடிகள் கருதினார்?

இஞ்ஞாசியாரிடம் அவர் வாழ்வுக் கதையைப் பெறுவது. 

418. இஞ்ஞாசியாரின் சுய வரலாறு அவர் வாழ்வின் எப்பகுதியை மட்டுமே கூறுகிறது? 

திருப்பயணப்பகுதி.

419. எவருடைய கட்டாய வேண்டுதலினால் இஞ்ஞாசியார் தன் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார்? 

இஞ்ஞாசியாரின் நண்பர்கள். 

420. எந்தெந்த திருத்தந்தையரின் மறைவினால் தம் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் பணியை இஞ்ஞாசியார் நிறுத்திவைத்தார்? 

திருத்தந்தை மூன்றாம் ஜூலியஸ், திருத்தந்தை மார்செல்லஸ்.

421. தே காமராவிடம் எந்தெந்த காரணங்களுக்காக இஞ்ஞாசியார் சினந்துகொண்டு தன் கதையைக் கூறுவதை நிறுத்தினார்?

காலம் தவறியமை, ஒழுங்கு கட்டளையை மீறியமை. 

422. தே காமரா எந்த இடத்தில் இஞ்ஞாசியாரின் வாழ்க்கைவரலாற்றை எழுதி முடித்தார்?

ஜெனோவா. 

423. இஞ்ஞாசியாரின் தனிச்செயலர் யார்?

இவோன் அல்போன்சோ டிபொலாங்கோ. 

424. இஞ்ஞாசியார் சுயசரிதை எப்போது எழுதப்பட்டது?

1553 ஆகஸ்டு, செப்டம்பர் & 1555 மார்ச், அக்டோபர். 

425. இஞ்ஞாசியாரின் சுயசரிதையை அவர் சொல்லச் சொல்லக் கேட்டு எழுதியவர் யார்?

அருட்தந்தை. லூயிஸ் கொன்சாலஸ் தேகாமரா. 

426. இஞ்ஞாசியார் எந்த மொழியில் கூறியது சுயசரிதையாக எழுதப்பட்டது?

ஸ்பானிய மொழி. 

427. இஞ்ஞாசியார் தம் சுயசரிதையில் எத்தனை ஆண்டுகளில் நடந்ததைமட்டும் கூறியுள்ளார்?

18 ஆண்டுகள். 

428. இஞ்ஞாசியார் தன்னை எவ்வாறு கருதி தம் சுயசரிதையைக் கூறினார்? 

திருப்பயணி. 

429. இஞ்ஞாசியாருக்கு இறைமகன் இயேசுவை எவ்வாறு காணும் வரம் அருளப்பட்டிருந்தது? 

கதிரவன்.

430. உரோமையில் இருந்தபோது இஞ்ஞாசியார் வழிதவறிய பெண்களுக்கு ஆற்றிய உதவி யாது? 

வழி தவறிய பெண்களை மனந்திருப்பி பாதுகாப்பான மடங்களில் சேர்த்தார். 

431. இஞ்ஞாசியாரின் எச்செயல் யூதர்களை மனந்திரும்பச் செய்தது?

யூத மக்களுக்கான சட்டங்கள் அநீதியானவை என்று வாதாடியதால். 

432. இயேசுசபைத் தலைவராக இஞ்ஞாசியார் தெரிந்து கொள்ளப்பட்ட போது அதை ஏற்க மறுத்த இஞ்ஞாசியாரிடம் லெயினஸ் என்ன சொல்லி சம்மதிக்க வைத்தார்? 

"இந்தத் தலைமைப் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிடில் சபையையே கலைத்துவிடலாம். நீங்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதே தேவ திருவுளம்."

433. இஞ்ஞாசியார் இயேசுசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

ஜெரோம் நடால். 

434. கடும்காய்ச்சலால் அவதியுற்ற போபடில்லாவிற்குப் பதிலாக சவேரியார் இந்தியா புறப்படும்போது அவருடைய சிறிய கைப்பையில் இஞ்ஞாசியார் எதைப்பார்த்தார்? என்ன கேட்டார்? 

ஒரே ஒரு சட்டை மட்டும் இருப்பதைப்பார்த்து "இது மட்டும் போதுமா?"  என்று கேட்டார். 

435. இந்தியாவில் மறைப்பணியாற்றிய சவேரியார் இறந்த செய்தி எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இஞ்ஞாசியாருக்குத் தெரிய வந்தது?

3 ஆண்டுகள். 

436. உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது இஞ்ஞாசியார் இயேசு சபையின் தலைமைப் பொறுப்பை யாரிடம் ஒப்படைத்தார்?

கறீஸ்டோபால் தெ மட்ரீட் மற்றும் அவரது செயலர் பொலாங்கோ . 

437. இஞ்ஞாசியார் தாம் நோயுற்ற காலத்தில் திருத்தந்தையின் ஆசிரைப் பெற்றுவர யாரை அனுப்பினார்?

செயலர் பொலாங்கோ . 

438. இஞ்ஞாசியார் இறக்கும் வேளையில் அவருக்கு ஆசிர் வழங்கிய க திருத்தந்தை யார்? 

திருத்தந்தை நான்காம் பவுல். 

439. இஞ்ஞாசியார் எப்போது உயிர்நீத்தார்? அவருடைய உடலை எந்த ஆலயத்தில் மக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர்?

31.07.1556, வழித்துணைமாதா ஆலயம். 

440. இஞ்ஞாசியார் இறந்தபின் அவருடைய உடல் ஆலயத்தில் எத்தனை நாட்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது? 

2 நாட்கள்.

441. இஞ்ஞாசியார் இறக்கும்போது இயேசுசபை பரவியிருந்த நாடுகள் எத்தனை?

20.

442. இஞ்ஞாசியார் இறக்கும்போது இயேசுசபை உறுப்பினர்கள் எத்தனை பேர்?

1000 பேர். 

443. இயேசு சபையின் இரண்டாவது தலைவர் யார்? 

இது தன் தந்தை டியேகோ லெயினஸ். 

444. இயேசுசபைத் தலைவராக லெயினஸ் பணியேற்றபோது துணைத்தலைவராகப் பொறுப்பேற்றவர் யார்? 

சால்மரோன்.

445. இயேசுசபையின் மூன்றாவது தலைவராகப் பொறுப்பு வகித்த அரசப் பிரதிநிதி யார்?

ஸ்பெயின் நாட்டுக் கோமகன் போர்ஜியா. 

446. இயேசுசபை ஆவணக்காப்பகத்தில் இஞ்ஞாசியாரின் சுயசரிதை எத்தனை ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டது?

150. 

447. இஞ்ஞாசியாரின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதல் நூலாக எழுதி வெளியிட்டவர் யார்?

ரிபடி நேரா. 

448. இஞ்ஞாசியாருக்கு அருளாளர் பட்டம் சூட்டப்பெற்றது எப்போது?

27.07.1609 

449. இஞ்ஞாசியாருக்கு அருளாளர் பட்டம் சூட்டியவர் யார்?

திருத்தந்தை ஐந்தாம் பவுல். 

450. இஞ்ஞாசியாருக்கு புனிதர் பட்டம் சூட்டிய ஆண்டு எது? புனிதர் பட்டம் சூட்டிய திருத்தந்தை யார்?

12.03.1622, திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியார்.