சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 40

அர்ச். மர்க்கரீத் மரியம்மாள் அடைந்த காட்சிகள் உண்மையா இல்லையா என்று ஆராயும்போது, இத்தகைய அத்தாட்சிகள் இருக்கின்றனவா என்று பார்ப்பது அவசியம்

இவ்விஷயத்தைச் சற்றே பரிசோதித்த பின்னர் நாம் அறிவதென்னவெனில், அர்ச். மர்க்கரீத் மரியம்மாள் தான் பெற்றுக்கொண்ட வரங்களை, சிரேஷ்ட தாயார் கட்டளையினிமித்தம் ஒரு பிரதியில் எழுதி வைத்தார்கள் என்பதே. அப்பிரதி அவர்களால் கைப்பட எழுதப்பட்ட உண்மையான சாசனமென ஒட்டோ நகர மேற்றிராணியாரின் பிரதிநிதியால் அங்கீகரிக்கப் பட்டு இன்று வரைக்கும் பாரே ல மோனியால் கன்னியர் மடத்தில் வணக்கத்துடன் காப்பாற்றப்பட்டு வருகிறது. அதில் சேசுநாதர் அவர்களுக்களித்த சகல வரங்களும் காணப்படுவது நன்றி, திரு இருதய பக்திக்குரிய சகல காரியங்களும் குறிக்கப் பட்டிருக்கின்றன 

இப்பிரதி புனிதையால் எழுதியதேயாயினும், அதில் திரு இருதய பக்தியைக் குறித்து உரைக்கப்படுவது உண்மையென நாம் அறிவதெப்படி? அவர் மற்றவர்களை ஏமாற்ற நினைக்க வில்லை என்று நாம் எவ்வாறு நம்புவது? ஒருவேளை அவரே வீண் தோற்றத்தினாலோ, அல்லது பசாசின் தந்திரத்தினாலோ மோசம் போயிருக்கலாம்” என நமது விரோதிகள் மறுக்கக் கூடும். 

ஆனால் புனிதையின் சரித்திர ஆசிரியர்கள் அனைவரும் ஒருசேர, அவர்களுடைய புத்தியையும், பக்தியையும் புகழ்ந்தேற்றி அவர்களை உத்தமியெனப் பாராட்டியிருக்கையில், அவர் பொய் பேசினார்கள் என்று கருதுவதே அப்பண்டம். அவர்களே நமது ஜென்ம சத்துருவின் மாய்கையாலோ அல்லது வீண் தோற்றத்தாலோ ஏமாற்றப்பட்டாராகள் என்று சிந்திப்பதோ அடாத துரோகம். 

சகலத்திலும் சர்வ விமரிசையுடன் நடந்த அந்தப் புண்ணியவதி எவ்வாறு இக்காரியத்தில் மோசம் போகக்கூடாது? சேசுநாதருடன் அன்னியோன்னிய பந்தனத்தில் அமைந்திருந்த அம்மாது, எப்படிப் பசாசின் வலையில் சிக்குண்டு, அத்தனை ஆண்டுகளாக பேயினத்தால் நடப்பிக்கப்படக்கூடும் ஆதலால் உண்மையை விரும்பும் அனைவரும், அர்ச். மர்க்ரீத் மரியம்மாளின் திரு இருதய பக்தியைக் குறித்து எழுதிய அனைத்தும் மெய்யென ஏற்றுக்கொள்ள வேண்டும்

நாம் துவக்கத்தில் கூறியவண்ணம் அர்ச். மர்க்கரீத் மரியம்மாளுக்கு நமதாண்டவர் அளித்த காட்சிகள் உண்மையென ஸ்தாபிப்பதற்கு இரண்டாம் அத்தாட்சி, விமரிசையுள்ள சரித்திர ஆசிரியர்கள் இயற்றியுள்ள நூல்கள். சேசுநாதரின் பரிசுத்த பத்தினியின் புண்ணியங்களைக் கண்ணாறக் கண்டு அவர்களுடைய உள்ளத்தில் பற்றியெரிந்த தேவசிநேக அக்கினி யைத் தாங்களே பரீட்சித்து, திரு இருதயப் பக்தியைக் குறித்து அவர்கள் உரைத்த இனிய போதகங்களை இன்புறக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த கன்னியர், குருக்கள் அனைவரும் தக்க காரணமில்லை என்றால், அவர்களது படிப்பினைகளைக் கையேற்று கொண்டிருப்பார்களா?

தொடரும்...