“அவர்கள் நாக்கோனின் களத்திற்கு வந்த போது மாடுகள் மிரண்டு பேழையைக் கீழே சாய்த்துப் போட்டன. இதைக் கண்ட ஓசா அதைத் தன் கையால் தாங்கினான்.
அப்பொழுது ஆண்டவருக்கு ஓசாவின் மேல் கோபம் மூண்டது. அவனுடைய துணிவை முன்னிட்டு அவர் அவனை வீழ்த்தினார். ஓசா பேழையின் பக்கத்திலேயே விழுந்து இறந்தான்.”
2 சாமுவேல் 6 : 6-7
தாவீது ஏன் உடன்படிக்கைப் பேழையை தன் இல்லத்தில் ஏற்றுக்கொள்ள தயங்கினார்..?
மேலே உள்ள நிகழ்ச்சிதான்..
தகுதியற்ற யாரும் ஆண்டவருடைய உடன்படிக்கையை பேழையைத் தொட முடியாது என்பதை விட தொடக்கூடாது என்பதே சரி..
ஏனென்றால் அதில் கடவுளின் பிரசன்னம் இருந்தது..
கடவுளுடைய பேழையைத் தூக்கவும், கடவுளுக்கு தகனப்பலிக்களை நிறை வேற்றவும் குருக்களும் அதற்கென தேர்ந்துகொண்டவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டார்கள்…
பழைய உடன்படிக்கையில் இருந்ததெல்லாம் ஒரு முறை மீண்டும் நினைத்துப்பாருங்கள்..
பத்து கட்டளைகளை உள்ளடக்கிய கற்பலகை, ஆரோனின் துளிர்த்த கோல், மன்னா.. இதில் ஆண்டவரின் பிரசன்னம் இருந்தது..
ஆண்டவரின் பிரசன்னம் இருந்த உயிரற்ற பேழைக்கே ஆண்டவர் இத்தகைய மகத்துவத்தையும், பாதுகாப்பையும் கொடுத்திருந்தார் என்றால், உயிருள்ள ஆண்டவரே பத்து மாதங்கள் தங்கிய புதிய உயிருள்ள உடன்படிக்கையான தேவ மாதாவுக்கு கடவுள் எத்தகைய மகத்துவத்தையும், மகிமையையும், பாதுகாப்பையும் கொடுத்திருப்பார்..
அதே போல அங்கு ஆண்டவரின் பிரசன்னத்திற்கே இத்தகையை தூய்மை ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்க சொன்னார் என்றால்..
கடவுள் தங்கி வாசம் செய்த ஆலயமான தேவமாதாவுக்கு எத்தகையை, பரிசுத்தத்தையும், ஆசீரையும் கொடுத்திருப்பார்..
இந்த உடன்படிக்கைப் பேழை ஒப்பீடே போதும்…
தேவ மாதா யார் என்று மூவுலகிற்கும் பறை சாற்ற..
“ நாம் பரிசுத்தராயிருப்பது போல நீங்களும் பரிசுத்தராயிருங்கள் “ என்று தேவ பிதா நம்மிடம் கேட்கும் போது அவர் தங்கி வாசம் செய்த உன்னத ஆலயத்தை எத்தகைய பரிசுத்தத்தால் நிரப்பியிருப்பார்..
மாதாவை பார்த்து பார்த்தல்லவோ படைத்திருப்பார்… கடவுள் தனக்கு தேவையான அனைத்தையும் அதில் பொழிந்திருப்பார்.. நிரப்பியிருப்பார்.. அவர் சவுரீகமாக, நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்க.. அப்படி இருந்து இந்த உலகில் மீட்புத்திட்டத்தை நிறை வேற்ற மாதாவை எப்படியெல்லாம் அழகாக, மாட்சியாக, ஒளியாக படைத்திருப்பார்..
இந்த உலகில் படைக்கப்பட்ட ஆண்களில் இயேசு சுவாமி ஒருவர்தான் அழகு என்பதுபோல்.. உலகில் படைக்கப்பட்ட பெண்களில் எல்லாம் அழகு நம் பரிசுத்த தேவமாதாதானே… புற அழகு இரண்டாவது.. முதலில் அவர்களின் ஆன்மா எத்தகைய அதி பரிசுத்த, மகிமையுடைத்தானதாய் படைக்கப்பட்டிருக்கும்…
தேவ யார் என்பதை பைபிளே சொல்ல வேண்டாம்… புனிதர்களும் சொல்ல வேண்டாம்..
ஏன் நம் சொந்த அறிவுக்கு தெரியாதா என்ன?
கடவுள் ஒரு மனித படைப்பிடம் தோன்றுகிறார்.. அவர் திரு உதிரத்தில் உதிக்கிறார்.. திருவயிற்றில் தங்குகிறார்.. அவர் மடியில் பிறக்கிறார்.. அவரால் பாலூட்டப்படுகிறார்… உணவூட்டப்படுகிறார்.. வளர்க்கப்படுகிறார்.. பேணப்படுகிறார்..பாதுகாக்கப்படுகிறார்..
என்றால் அவர் எப்படிப்பட்டவராக இருக்க முடியும்…?
அதைப் போல புனித சூசையப்பர் கடவுளை தூக்கி வைக்கிறார், அவருக்கு உணவு கொடுக்கிறார்.. அவரைக் காப்பாற்றுகிறார், அவரை வளர்க்கிறார், அவருக்கு கற்றுக் கொடுக்கிறார்.. என்றால்
மாதாவுக்கு பிறகு அதி பரிசுத்தராக, மேன்மை, மகிமை பொருந்தியவராக புனித சூசையப்பர் அல்லவா இருக்கிறார்..
கடவுள் தான் யாரிடம் உருவாக வேண்டும்… எங்கே இருக்கவேண்டும்.. யார் யாருக்கு மத்தியில் இருக்க வேண்டும்.. அப்படியானால் அப்பேற்பட்டவர்களின் புனிதத்துவமும், பரிசுத்தமும், தூய்மையும் எந்த அளவு இருக்க அவர் வைத்திருப்பார்..
இதை மனித அறிவால் கண்டுபிடிக்க முடியுமா?
மாதா அமல உற்பவி என்று ஆதியாகமம், திருவெளிப்பாடு இன்னும் பைபிளில் எத்தனையோ இடத்தில் சொல்லப்பட வேண்டாம்..
கடவுள் மாதாவிடம் உதித்தார் என்ற ஒன்றே போதும் மாதா யார் என்று சொல்ல..
எப்படி ஒரு சிறு பயம் கூட இல்லாமல்.. கடவுளின் உயிருள்ள உடன்படிக்கைப் பேழையை சிலர் விமர்சிக்கிறார்கள்.. அவர்கள் பின்னால் செம்மறி ஆட்டைப் போல் தலையை ஆட்டிக்கொண்டு செல்கிறார்கள்..
ஆபத்து காத்திருக்கிறது.. அவர்களின் முதுகுக்கு பின்னாலே..
பைபிளில் அது இருக்கிறதா? இது இருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு ஒரே பதில்…
எது இருந்தாலும் இல்லாவிட்டாலும்… எங்களுக்கு தேவையில்லை..
“மாதாவிடம் கடவுள் உதித்தார்” “ மரியம்மாவிடம் இயேசு உதித்தார் “
இது மட்டுமே எங்களுக்கு போதும்… போதும்… போதும்..
“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..
பரிசுத்த ஆவியானவர் போற்றி !
நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !