மேற்கூறிய திவ்வியமான மாற்றங்கள் காணப்பட்ட அர்ச். ஞானப்பிரகாசியாரின் குடும்பத்தைப்பற்றிச் சில வார்த் தைகள் சொல்வோம். ஒரு நாள் அர்ச். பாஸ்ஸி மரிய மதலேன் அம்மாள் பரவசமானபோது, அர்ச். ஞானப்பிரகாசியார் மோட்சத்தில் அடைந்து சுகிக்கும் உன்னதப் பதவியைப் பார்த்துப் பிரமித்தார். ஆனால் அவர் கண்ட காட்சியை மற்றவர்களுக்கு அவர் விரும்பியபடி எடுத்து விவரிக்க முடியாதவராக இருந்தார், ஆனலும் ஒரு விஷயத்தை அவர் வெளிப்படுத்தினாள். அதாவது அர்ச்.ஞானப்பிரகாசியார் சேசுவின் திரு இருதயத்தை நோக்கி சொல்லிய மனவல்யச் செபங்களும் செய்த சிநேக முயற்சிகளே அவருக்கு மோட்ச பாக்கியத்தை அடைந்து தந்தது என்பதே
அர்ச். ஞானப்பிரகாசியார் மாந்துவா நகரப் பிரபுவின் மகன். சேசுவின் திரு இருதயத்திற்கும், நம் இரட்சணியத்திற்காகச் சிந்தப்பட்ட திரு இரத்தத்திற்கும் இவர் காட்டிய விஷேசப் பக்தி, பாரம்பரியமாய் அவருடைய குடும்பத்தில் இருந்து வந்தது அதற்குக் காரணத்தைக் கேளுங்கள். நம் திவ்விய கர்த்தரின் திருவிலாவை ஈட்டியால் குத்தித் திறந்த லோஞ்ஜினுஸ் என்னும் தளகர்த்தன் மனந்திரும்பியபோது, திருவிலாக் காயத்திலிருந்து வழிந்தோடி. பூமியை நனைத்த திவ்விய இரத்தத் துளிகளைப் பக்தி வணக்கத்தோடு சேர்த்துப் பத்திரப்படுத்தினார்.
சில நாட்களில் மாந்துவா பட்டணத்திற்குத் தமது சேனையோடு ஊரை விட்டுச் செல்ல அவருக்கு உத்தரவிடப் பட்டதும், அவரும் விலை மதிக்கப்படாத இந்த அர்ச்சியசிஷ்ட பண்டத்தைத் தம்மோடு கொண்டுபோனார். மாந்துவா நகர முதல் கிறீஸ்தவர்கள் இந்த அர்ச்சியசிஷ்ட பண்டத்திற்கு மிகுந்த மரியாதை வணக்கத்தோடு ஆராதனை செய்து வந்தனர் லோஞ்ஜினுஸ் மேற்றிராணியாராகி அர்ச்சியசிஷ்டவராக மரித்த போது, அவருடைய சரீரம் அடக்கம் செய்யப்பட்ட கோவிலில் நமதாண்டவருடைய திரு இரத்தத் துளிகளையும் பத்திரப்படுத்தினர்.
சிறிது காலம் சென்றதும், மாந்துவா நகரப் பிரபுக்கள் அர்ச். லோஞ்ஜினுஸ் அடக்கம் செய்யப்பட்டிருந்த சிறு கோவிலை ஒரு நேர்த்தியான ஆலயமாக மாற்றினர். அதில் பாதுகாக்கப்பட்டிருந்த திரு இரத்தத் துளிகளுக்கு இன்னும் அதிகமதிகமாக சங்கை செய்துவந்தனர். மேற்கூறிய பிரபுக்களில் ஒருவராகிய வின்சென்ட் கொன்ஸாகா என்பவர் அக்காலத்தில் இருந்த பாப்பானவரிடமிருந்து இந்தத் திரு இரத்தத்தில் சில துளிகளை என்றும் தம் நெஞ்சில் அணிந்து கொள்ள அனுமதி பெற்றார்
அர்ச். ஞானப்பிரகாசியார் இந்த உத்தமப் பிரபுவின் வம்சத்தைச் சேர்ந்தவரானதால், சேசுவின் திரு இருதயத்தின் மீது விசேஷ பக்தி வைத்திருந்தார். இப்பக்தியில் மற்றவர்கள் பழகிவர சில சமயங்களில் காட்சிகளின் மூலமாய் அறிவித்தார் ஒரு முறை உரோமையில் இருந்த சேசு சபை மடத்தில் ஒரு நவசந்நியாசி சாகும் நிலையில் இருந்தார். அர்ச். ஞானப் பிரகாசியார் ஜோதி ஒளி, அழகு பூண்டவராய்த் தரிசனமாகி மரண அவஸ்தையில் இருந்தவரைப் பார்த்து: “எது உமக்குத் தேவை? சரீர ஆரோக்கியமா, மரணமா”என்று கேட்டார் அந்த நவசந்நியாசி, “சர்வேசுரனுடைய சித்தம் நிறைவேறட்டும் என மொழிந்தார்.
இதைக் கேட்டதும் அர்ச். ஞானப்பிரகா சியார் சொல்வார்: “தேவ சித்தத்தைத் தவிர வேறொன்றையும் விரும்பவில்லையாதலால் நீர் சுகமடைவதே சர்வேசுரனுடைய திருச்சித்தம் என அறிவீராக. சர்வேசுரன் உமக்குக் கொடுத்து இருக்கும் மீதியான காலத்தில், புண்ணிய வாழ்வைக் கைப்பற்ற முயலுவதுமல்லாமல், சேசுவின் திரு இருதயப் பக்தியைப் பரப்புவதற்கு எல்லா விதத்திலும் முயற்சி செய்யும். மோட்ச வாசிகளுக்கு இப்பக்திமுயற்சி மிகுந்த பிரியத்தை உண்டு பண்ணுகிறது” இந்த சந்தோஷச் செய்திகளை வெளியிட்ட பின் அர்ச். ஞானப்பிரகாசியார் மறைந்து போனார். சந்நியாசியோ முழுவதும் சுகமாகி, தம் ஜீவிய காலம் முழுவதும் சேசுவின் திரு இருதய பக்தியைப் பரப்புவதில் செலவிட்டார்
தொடரும்...