451. மாணவர்கள், கத்தோலிக்க இளைஞர்களின் பாதுகாவலராகப் போற்றப்படும் இயேசுசபை குரு யார்?
தூய அலோசியஸ் கொன்சாகா சே.ச. (1568 - 1591)
452. இஞ்ஞாசியாரின் சுயசரிதை நூலை இலத்தீனில் மொழிபெயர்த்தவர் யார்?
அனிபால்.
453. இஞ்ஞாசியாரின் சுயசரிதை நூல் எந்த ஆண்டு புனிதர்கள் வரிசையில் வெளியானது?
1731.
454. லொயோலா மாளிகையில் இஞ்ஞாசியாருக்கு ஆலயம் கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டு எது?
1888.
455. தூய இஞ்ஞாசியாரின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
சூலை - 31.
456. 1906இல் 'சேசுசபை ஸ்தாபகன் அர்ச்.லொயோலா இஞ்ஞாசியார் ஜீவிய சரித்திரம்' என்னும் நூலை எழுதியவர் யார்?
அருட்பணி வி.மரிய இஞ்ஞாசியார் சே.ச.
457. இஞ்ஞாசியார் எழுதிய கடிதங்களின் இதுவரை கிடைக்கப்பெற்றவை எத்தனை?
6814 கடிதங்கள்.
இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சிகள்
458. இஞ்ஞாசியார் பெற்ற இறையனுபவங்களைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள எழுதப்பட்ட நூல் யாது?
ஆன்மிகப் பயிற்சிகள்.
459. இஞ்ஞாசியார் வகுத்த ஆன்மிகப் பயிற்சிகளின் மொத்த கால அளவு எவ்வளவு?
30 நாட்கள்.
460. ஆன்மிகப் பயிற்சிகளின் மொத்த கால அளவு எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?
நான்கு வாரங்களாக நான்கு கட்டங்களாக.
461. முதல்வாரப் பயிற்சியின் மையப்பொருள் யாது?
மூலக்கோட்பாடு-அடிப்படை நெறி
462. தனது கடந்தகால வாழ்வை அலசி ஆராய்ந்து பார்க்கவும், சிந்தனையில் தெளிவுபெறவும் பயிற்சியளிக்கப்படும் வாரம் எது?
முதல் வாரம்.
463. இரண்டாவது வாரப்பயிற்சியின் கருப்பொருள் யாது?
கிறிஸ்து இயேசுவை முழுமையாக அறிந்துகொள்ள முயலுதல்.
464. இஞ்ஞாசியார் எந்தப் புனிதரைப்போல இயேசுவிற்காக அரிய பெரிய செயல்களைச் செய்யும் ஆவல் கொண்டார்?
ஓனுபிரியஸ்.
465. பிறருடன் சரியானவகையில் தொடர்பு கொள்வதற்கு அவசியமான பண்பாக இஞ்ஞாசியார் குறிப்பிடுவது யாது?
புறப்பொருள் மெய்ம்மை .
466. மானுட வாழ்வு முழுவளர்ச்சி அடைய உதவும் இரு கோட்பாடுகளாக இஞ்ஞாசியார் கூறுவன யாவை?
மூலக்கோட்பாடு. அடிப்படைநெறி.
467. இறைவனுக்கு அதிக விருப்பமானதும் அதிக மகிமையைத் தரக்கூடியதுமாக இஞ்ஞாசியார் எதனைக் குறிப்பிடுகிறார்?
உள்மன விடுதலை.
468. பொது ஆன்ம ஆய்வு செய்யும் வகையில் உள்ள குறிப்புகளின் எண்ணிக்கை எத்தனை?
ஐந்து.
469. தான் பெற்ற நல்வரங்களுக்காக கடவுளுக்கு நன்றி கூறுதல் ஆன்மிகப்பயிற்சிகளில் எந்தக் குறிப்பாக இடம்பெற்றுள்ளது?
முதல் குறிப்பு.
470. தன் பாவங்களை அறியவும் அவற்றினின்று தன்னை விடுவிக்கவும் இறைவனிடம் வேண்டுவது எந்தக் குறிப்பில் இடம்பெற்றுள்ளது?
இரண்டாவது குறிப்பு.
471. எண்ணங்கள், சொற்கள், செயல்கள் வரிசைமுறையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் குறிப்பு எது?
மூன்றாம் குறிப்பு.
472. தன் குற்றங்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்பது எந்தக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது?
நான்காம் குறிப்பு.
473. இறையருளால் சீர்திருத்த உறுதி பூணுவதும் நிறைவில் இறை இயேசு கற்பித்த செபம் சொல்லுதலும் இடம்பெற்ற குறிப்பு யாது?
ஐந்தாம் குறிப்பு.
474. இஞ்ஞாசியார் பயன்படுத்திய இரண்டு முக்கிய செபமுறைகள் யாவை?
சிந்தனைத்தியானம் (Meditation), காட்சித்தியானம் (Contemplation).
475. ஆன்மீகப் பயிற்சியில் ஆன்மாவின் ஆற்றல்களைக் குறிக்கப் பயன்படும் சொற்கள் யாவை?
நினைவு, அறிவு, மனது.
476 தவத்தின் வகைகளாக இஞ்ஞாசியார் குறிப்பிடுவன யாவை?
உள்தவம், வெளித்தவம்.
477. உள்தவத்தின் வகைகளைக் கூறும்போது முதல்வகை எதைப் பற்றியது?
478. இரண்டாவதுவகை உள்தவம் எதைப்பற்றியது?
உறக்கம்.
479. மூன்றாவதுவகை உள்தவம் எதைப்பற்றியது?
உடலை வதைத்தல்.
480. தவத்தின் நோக்கமாக இஞ்ஞாசியார் கூறுவது யாது?
நோயை உண்டாக்காமல் உடலுக்கு வேதனை வருவிப்பது.
481. வெளித்தவம் புரிதலின் மூன்று முக்கிய பலன்கள் யாவை?
பாவங்களுக்குப் பரிகாரம் தேடுதல், தன்னை வெல்லுதல், அருட்கொடை பெறுதல்.
482. எப்பயிற்சியால் இயேசுவின் சீடர்கள் அன்றாட வாழ்வின் கர்மயோகிகள் ஆகிறார்கள்?
தியானம்-அர்ப்பணம் என்ற இறை ஒன்றிப்புப் பயிற்சி.
483. முதல்வாரப் பயிற்சியின் முதற்கனி யாது?
தீமையை விலக்க இறையருள் தேவையை உணர்தல்.
484. முதல்வாரப் பயிற்சியின் இரண்டாவது கனி யாது?
இறைவனைச் சரணடைதல். ஊதாரிப் பிள்ளை போல் விண்ணகத் தந்தையின் மடியில் விழுதல்.
485. முதல்வாரப் பயிற்சியின் மூன்றாவது கனி யாது?
கிறிஸ்துவிற்காகத் தான் செய்தது, செய்யப்போவது என்னவென அறிந்து தெளிதல்.
486. இஞ்ஞாசியார் பாவத்தை எதற்கு ஒப்பிடுகிறார்?
தீய ஊற்றிலிருந்து வெளிப்படும் துர்நாற்றம்.
487. முதல்வாரப் பயிற்சிக்கும் இரண்டாம் வாரப் பயிற்சிக்கும் பாலமாக அமையும் தியானம் யாது?
கிறிஸ்துவின் அரசாட்சி.
488. Trabajo, Trabajar என்ற ஸ்பானியச் சொற்களுக்கான பொருள்கள் யாவை?
கடின உழைப்பு. பாடுபடும் துயரம்.
489. ஆன்மீகப் பயிற்சிகளின் கருவூலம் அடங்கியிருக்கும் தியான வாரம் எது?
இரண்டாம் வாரம்.
490. இரண்டாம் வாரத் தியானத்தை எத்தனை பகுதிகளாகப் பிரிக்கலாம்?
மூன்று.
491. இரண்டாம் வாரத் தியானத்தில் முதற்பகுதியில் தியானிக்கப்படுபவை எவை?
இயேசு மனுவுரு எடுத்தல், அவரது குழந்தைப்பருவம்.
492. இரண்டாம் வாரத் தியானத்தில் இரண்டாம் பகுதியில் கதியானிக்கப்படுபவை எவை?
தேர்வுக்காக ஆயத்தம் செய்யும் வகையில் முன்னுரைபோல அமையும் தியானங்கள்.
493. இரண்டாம் வாரத் தியானத்தில் மூன்றாம் பகுதியில் தியானிக்கப்படுபவை எவை?
இயேசுவின் வாழ்வும் தேர்தல் முயற்சியும்.
494.12 நாட்கள் இரண்டாம் வாரத்திற்கு ஒதுக்கப்பட்டால் 3 நாட்கள் எதைச் சார்ந்த தியானமாக இருக்கும்?
இயேசுவின் பிறப்பும் மறைந்த வாழ்வும்.
495. தேர்விற்கு ஆயத்தப் பயிற்சி மேற்கொள்ள ஒதுக்கப்படும் காலம் எவ்வளவு?
ஒரு நாள்.
496. இரண்டாம் வாரத் தியானத்தில் அலுவலில் ஈடுபடுபவர்கள் யாவர்?
பயிற்சியளிப்பவர், பயிற்சி பெறுபவர், தூய ஆவியானவர்.
497. அறிவுக்கு ஒளிதரும் தியானம் என்று அழைக்கப்படுவது யாது?
இருவிருதுக்கொடிகள்.
498. மன உறுதியைச் சோதிக்கும் பயிற்சியாகக் கருதப்படும் தியானம் எது?
மூவகை மனிதர்.
499. சிலுவை வழியிலே செல்வதற்கு வேண்டிய அன்பு இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கும் தியானம் எது?
மூவகைத் தாழ்ச்சி.
500. ஆன்மிகப் பயிற்சியின் சிகரங்கள் என்று போற்றப்படும் தியானங்கள் யாவை?
இருவிருதுக்கொடிகள், மூவகை மனிதர்கள், மூவகைத் தாழ்ச்சி.