திருப்பலி செபங்கள் மக்களுக்கு கிறிஸ்து உண்மைகளை மனதில் ஆழமாய்ப் பதிக்கும் நல் உபதேசமா கவும் பயன்படுகின்றன.
கத்தோலிக்க திருச்சபை போதிக்கும் சத்தியங்கள் அனைத்தும் பரம இரகசியங்கள், கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு, அவருடைய போதனை, அவருடைய பரிசுத்த கன்னித்தாய், புனித அப்போஸ்தலர்கள், மற்றும் அர்ச்சியசிஷ்டவர்களைப் பற்றிய உண்மைகள் முதலிய யாவும் மொழியழகுடனும், கருத்துச் செறிவோடும் திருப் பணி செபங்கள், கீதங்கள், சடங்குகளில் உரைக்கப்பட்டிருக்கின்றன.
அவைகளைக் கேட்டும், செய்தி பங்குகொள்ளும் கிறீஸ்தவர்களின் இருதயங்களில் விசுவாசம், நம்பிக்கை தேவசிநேகம் என்னும் புண்ணியங்கள் வளராமல் இருக்க முடியாது. படித்தவர்களும், பாமரரும் புரிந்துகொள்ளக் கூடிய எளிய முறையில் அவைகள் அமைந்திருக்கின்றன
எனினும் அவைகளைக் கேட்காமலும், காணாமலும் இருந்தால் அறிந்துகொள்வது இயலாத காரியம். ஆதலால் திருப்பணியில் பங்கு கொள்வது அவசியம். கத்தோலிக்க மக்களின் தினசரி வாழ்க்கையிலும் திருநாள் கொண்டாட்டங்களிலும் திருப்பணி ஆராதனை முதலிடம் பெற வேண்டும்
கிறிஸ்து நாதர் தமது திரு மரணத்தால் மனுக்குலத்தை மீட்டார். அத்துடன் அளவற்ற பேறுபலன்களையும் மானிடருக்காக அடைந்தார்.
அம்மரணமே மக்களின் சிறந்த தெய்வ வழிபாடாகவும், வரப்பிரசாத ஊற்றாகவும் இருக்கும்படி தேவாராதனைச் சிகரமாக நற்கருணைப் பலியையும், வரப் பிரசாதப் பெருக்கின் வாய்க்கால்களாக தேவதிரவிய அனுமானங்களையும் ஏற்படுத்தினார்.
அவைகளைப் பிரமாணிக்க மாய் நிறைவேற்றி வரும் கத்தோலிக்கத் திருச்சபை அருமையான ஜெபங்கள், கீதங்கள், சடங்குகளால் அலங்கரித்திருக் கிறது.
திவ்விய இஸ்பிரீத்துசாந்துவின் (பரிசுத்த ஆவியானவர்) உதவியால் அந்த செபங்களும், சடங்குகளும் உண்டாக்கப்பட்டிருக்கிறது. திவ்விய பலிபூசை, தேவதிரவிய அநுமானங்களின் கருத்தை குருவும், விசுவாசிகளும் உணர்ந்து, அவைகளைப் பக்தியுடன் நிறைவேற்றவும், பெறவும் இச்செபங்கள் உதவுகின்றன
தொடரும்...