“ உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம் “ – ஆதியாகமம் 3 : 15
ஒரு ஜென்மப் பகை..
பகை என்றால் போர் உண்டு..
போர் என்றால் படைகள் உண்டு..
படைகள் இருந்தால் தலைவர்கள் உண்டு..
தலைவர்கள் என்றால் இரண்டு தலைவர்கள்..
இரண்டு படைகள் இரண்டு தலைவர்கள்..
ஒரு படைக்கு தலைவன் பசாசு..
இன்னொரு படைக்கு தலைமை மாதா.. தலைவர் கடவுள்..
தலைமை என்றால் யார் ? அவர்தான் தளபதி..
தலைமை மாதா.. தளபதியும்.. மாதா.. பிசாசோடு சண்டை போடுவதும் மாதா.. ஆனால் தலைவர் மட்டும் கடவுள்.. வித்தியாசமாக இருக்கிறதா?
ஏனென்றால் ஒரு புறம் பிசாசு மறுபுறம் கடவுள் நின்றால் ஒரு அரசன் பசாசு இன்னொரு அரசர் கடவுள் என்றாகிவிடும், கடவுள் பிசாசை தனக்கு சரிசமாக வைத்து விட்டார் என்று அர்த்தமாகிவிடும்.. பிசாசு எப்படியும் தோற்கத்தான் செய்யும்.. ஆனால் சந்தோசமாக தோற்று விடும்..
அதனால்தான் கடவுள் அவனை எதிர்த்துப் போர் செய்ய தன் தளபதியான மாதாவை கடவுள் சார்பாக தலைமை ஏற்க வைத்துள்ளார்.. இதுவே கடவுளுடைய திட்டம்.. ஆனால் மாதாவை ஜெயிக்க வைப்பது கடவுள்.
இப்போது பாருங்கள்..
கடவுள் ஆதியாகமத்தில் ஆரம்பித்து வைத்த பகை.. ஒரு ஜென்மப்பகை.. திருவெளிப்பாட்டிலும் தொடர்கிறது.. அது இன்று வரை நீடிக்கிறது..
சண்டை போடும் இந்த இருவர்களைப் பற்றி திருவெளிப்பாடு தெள்ளந்தெளிவாக சொல்லுகிறது.. அதிகாரம் 12: 1 முதல் மூன்று முடிய..
பெண்ணும், பறவை நாகமும் என்ற தலைப்பில்..
“ விண்ணகத்தில் அரியதோர் அறிகுறி தோன்றியது. பெண்ணொருத்தி காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள். நிலவின் மீது நின்று கொண்டிருந்தாள்; தலையில் பன்னிரு விண்மீன்களை முடியாகச் சூடியிருந்தாள் “ திருவெளிப்பாடு 12 : 1-2
“ வேறொரு அருங்குறியும் விண்ணகத்தில் தோன்றியது. இதோ நெருப்புமயமான ஒரு பெரிய பறவைநாகம் தோன்றியது. அதற்கு ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் இருந்தன “ திருவெளிப்பாடு 12 : 3
இப்படி தொடர்கின்ற சண்டை… மேலும் வலுப்பெறுகிறது..
13-ம் வசனத்தில்..
“ தான் மண்மீது வீழ்த்தப்பட்டதைக் கண்டதும் பறவை நாகம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அப்பெண்ணைத் துரத்திச் சென்றது “
15-ம் வசனத்தில்
“அப்பெண்ணை வெள்ளம் அடித்துச் செல்லும் பொருட்டு அவள் பின்னால் பறவைநாகம் தன் வாயினின்று ஆறுபோல் தண்ணீர் பாயச் செய்தது”
இப்படி தொடர்கின்ற சண்டையில் ஒரு கட்டத்தில் மாதாவை அதால் ஜெயிக்க முடியாது என்று கண்டு.. மாதாவைப் பழிவாங்க அவரது எஞ்சிய மாதாவின் பிள்ளைகளிடம் போருக்கு செல்லுகிறது..
“ ஆகவே பறவை நாகம் பெண் மீது சினம் கொண்டு, எஞ்சிய அவள் பிள்ளைகளோடு போர் தொடுக்கச் சென்றது “
இந்த இடத்தில் கொஞ்சம் நிப்பாட்டுவோம்..
உடனே நம்ம ஆளுங்களுக்கு அப்படியே புல்லரித்து… வீரம் பொங்கி.. உணர்ச்சி பொங்கி..
“ ஏய் நாங்கதாண்டா அது “ “மாதாவின் எஞ்சிய பிள்ளைகள் நாங்கதாண்டா அது “ என்று மார்தட்டுவார்கள்.. ஆனால் அவர்கள் ஜெபமாலை சொல்வார்களா?.. இல்லை என்றால் அவர்கள் கண்டிபாக மாதாவின் எஞ்சிய பிள்ளைகள் அல்ல..
ஆனால் அவர்கள் ஜெபமாலை சொல்லும் பிள்ளைகள் என்றால் கண்டிப்பாக நாம் மார்பை தட்டி.. வீரம் பொங்க.. உணர்ச்சி பொங்க.. காலரை தூக்கிக்கொண்டு சொல்லலாம்.. கத்தோலிக்கர்களாகிய நாம் “ நாங்கதாண்டா ! மாதாவின் எஞ்சிய பிள்ளைகள்.. எவன்டா வர்ரான்.. வாங்கடா.. ஒரு கை பார்ப்போம் “ என்று,
தப்பரையைத் தூக்கி கொண்டு யார் வந்தாலும்.. பைபிள் வசனத்திற்கு அர்த்தம் சொல்லும் அறிவாளி அவன்தான் நினைத்துக் கொண்டு யார் வந்தாலும்..
அதே போல் ஏதாவது பிரச்சனை.. குழப்பம்.. துன்பம்.. வேதனை.. சோதனை, பாவத்தைக் தூக்கிக்கொண்டு பிசாசு வந்தாலும்..
நாம் தைரியமாக நின்று போர் செய்யலாம்.. போரில் வெற்றியும் பெறலாம்.. இது நம் வெற்றி அல்ல நம் சார்பாக போரிட்ட மாதாவின் வெற்றி.. முடிவாக அது கடவுளின் வெற்றி..
சரி இப்போது யாருக்கும் யாருக்கும் போர் நடக்கிறது..
பிசாசுக்கும் மாதாவின் பிள்ளைகளான நமக்கும் போர் நடக்கிறது..
அந்த போரில் மாதாவின் பிள்ளைகளான நம் சார்பில் மாதாவே பறவை நாகத்தோடு போர் செய்து கொண்டிருக்கிறார்கள்..
நாம் ஜெபமாலை செய்ய செய்ய மாதாவின் வல்லமை கூடி சீக்கிரம் வெற்றி வந்துவிடும்..
ஜெபமாலை சொல்லும் மாதாவின் பிள்ளைகள் நல்லவர்களாகவும், கடவுளின் கட்டளைகளை கடைப்பிடிக்கும் கடவுள் பிள்ளைகளாகவும் இருக்க வேண்டும் என்கிறது 12- அதிகாரத்தின் கடைசி வசனங்கள்..
“ அவர்கள் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசு தந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள் “
தொடர்ச்சி கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில் பார்க்கலாம்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !