சண்டை ஓய்வதில்லை..
மாதாவோடு பசாசு கொண்ட பகையைப் பார்த்தோம் இப்போது அது சேசுவோடு கொண்ட பகையையும் பார்ப்போம்..
உலகம் முடியும் வரை அந்த ஜென்மப்பகையும் நிற்கப் போவதில்லை… போரும் முடியப்போவதில்லை… சண்டையும் ஓயப்போவதில்லை..
இயேசு ஆண்டவரின் பிறப்பே ஒரு போராட்டத்தில் ஆரம்பமானது… அதன் பின் சிமியோனின் தீர்க்க தரிசனம் ஒரு போராட்டம்..
அதன் பிறகு ஆண்டவரைத் தூக்கிக்கொண்டு எகிப்திற்கு ஓட்டம்.. அது ஒரு போராட்டம்.. ஏழ்மை.. வறுமை என்று ஒரு போராட்டம்.. 40 நாட்கள் தவம் ஒரு போராட்டம் அதன் நிறைவு ஒரு போராட்டம்..
மனிதர்கள் மத்தியில் கடவுள் வாழ்க்கை ஒரு போராட்டம்..
நற்செய்திப்பணி ஒரு போராட்டம்…
பாவிகள் மத்தியில் கடவுள் அது ஒரு போராட்டம்..
கூட இருப்பவனே துரோகியாக மாறுவான் என்று தெரிந்தும் அவனோடு நட்பு பாரட்ட வேண்டும்.. அதுவும் ஒரு போராட்டம்..
யாருக்காக அவர் வந்தாரோ அவர்களே அவரை குதர்க்கமாக கேள்வி கேட்கவும்.. அவரைப் பிடித்து தள்ளிவிடவும் கல்லால் எரிய முயற்சி செய்யவும்.. மன நெருக்கடி கொடுத்தல் இவைகளுக்கு மத்தியிலும் நற்செய்திப்பணி அது ஒரு போராட்டம்..
கடைசியில் கைது, அடி, உதை, சாட்டையடி, கிண்டல், கேலி, நிந்தனைகள், சிலுவைப் பயணம் ஒரு போராட்டம்.
சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் வரை தொடர்ந்து..போராட்டம்..
போராட்டம்… போராட்டம்.. கடைசி வரை போராட்டம்..
அந்த ஜென்மப்பகையால் பிறப்பிலிருந்து மரணம் வரை அலகையோடு போராடியவர்கள்..
நம் சேசுவும், தேவமாதாவும்தான்.. அதனால்தான் நம் தேவமாதா இணை மீட்பராக இருக்கிறார்கள்..
பகை இருக்கும் வரை போர் இருக்கும்.. போர் இருக்கும் வரை சண்டையிருக்கும்.. நம் வாழ்க்கையின் முடிவு வரை மாதாவோடு சேர்ந்து அலகையோடு சண்டை போட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டும்.. அலகையோடு பகை நமக்குப் பெருமை..
அதுதான் நமக்கு பாதுகாப்பு..
ஒரு விஷயத்தில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. மாதாவைக் குறித்து அவதூறுகள் யார் சொன்னாலும்,
“அப்பெண்ணை வெள்ளம் அடித்துச் செல்லும் பொருட்டு அவள் பின்னால் பறவைநாகம் தன் வாயினின்று ஆறுபோல் தண்ணீர் பாயச் செய்தது”
ஆனால் 16-ம் வசனம் போல் நாம் மாதாவிற்கு துணை நிற்க வேண்டும்.. மாதாவை விட்டு ஒரு பிரியாத பிள்ளைகளாக இருக்க வேண்டும்..
“ ஆனால் நிலம் அப்பெண்ணுக்கு துணை நின்றது “
நாம் சாகும்வரை கத்தோலிக்க கிரிஸ்தவர்களாக இருக்க வேண்டும் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் மாதாவின் பிள்ளைகளாக.. ஜெபமாலை ஜெபித்து மாதா பிசாசை ஒழித்துக் கட்ட மாதாவுக்கு உதவும் பிள்ளைகளாக.. பிள்ளைகளுக்கு உணவு தரும் தாயாக மாதா நம்மை கவனித்துக்கொண்டாலும் அந்த தாய்க்கு ஜெபமாலை என்ற உணவு ஊட்டும் பிள்ளைகளாக நாம் இருக்க வேண்டும்..
அப்போதுதான் அந்த ஜென்மப்பகை.. நிரந்தர பகை.. பிசாசோடு கொண்டுள்ள பகையும், போரும் நாம் சாகும் வரை தொடரும்.. அது தொடரவும் வேண்டும்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !