படைத்தவருக்கு இல்லாத உரிமையா என்ன?

“நாம் தண்டிக்கப்படுவது முறையே “ லூக்காஸ் 23: 41

கடவுளால் வீட்டுச்சிறையில் இருக்கும் நம் சிந்தனைக்கு….

அன்று,

அனைத்தையும் படைத்தார்.. எல்லாவற்றையும் நல்லது என்று கண்டார்..

கடைசியில் மனிதனை படைத்தார்… அதுவும் நல்லது என்றுதான் கண்டார்..

ஒரு கட்டத்தில் மனிதனைப் படைத்ததை நினைத்து வேதனை அடைந்தார்..

அது அப்படியே இன்றும் பொறுந்துவதைப் பாருங்கள்.. ஆதியாகமம் (தொடக்க நூல்) 6: 5-7

“மண்ணுலகில் மனிதருடைய அக்கிரமம் பெருகினதையும், அவர்கள் எண்ணமெல்லாம் எப்போதும் தீமையையே நாடியிருந்ததையும் கண்டு, கடவுள், இவ்வுலகில் மனிதனைப் படைத்து குறித்து வருந்தினார்.

அப்போது அவர் மனம் நொந்து: நாம் படைத்த மனித இனத்தைப் பூமியில் இல்லாதபடி அழித்து விடுவோம்;

மனிதன் முதல் மிருகங்கள் வரையிலும், ஊர்வன முதல் வானத்துப் பறவைகள் வரையிலும், எல்லாவற்றையும் அழித்தொழிப்போம்; ஏனென்றால், அவற்றைப் படைத்ததை நினைத்து வருந்துகிறோம் என்றார் “

பாருங்கள் முதலில் நல்லது என்று கண்டவர் இப்போது வருந்துகிறார்..

ஒரு முறை எல்லாவற்றையும் அழித்தார்.. அதன் பின்பு மனம் வருந்தி தான் இதுபோல் இனி செய்வதில்லை என்று வாக்குக் கொடுத்தார்..

அதன் பின்பும் வருடங்கள் உருள மேலும் மக்களின் பாவம் அதிகரித்துக் கொண்டே போனது…

இறைவாகினர்களோடு.. பேசி.. கண்டித்து மக்களைத் திருத்தியும் வந்தால்

பின் ஒரு கட்டத்தில் தன் ஒரே பேரான மகனை அனுப்பி.. உலக மக்களின் ஒட்டு மொத்தப்பாவத்திற்காக.. அவரைப் பரிகாரம் செய்யவைத்து… அதாவது நம்முடைய பாவங்களுக்கு  நாம் என்ன என்ன தண்டனை அனுபவிக்க வேண்டுமோ அதை அனைத்தையும் தன் மகனை செய்யவைத்து தன் மக்களை மீட்டு இந்த மனித இனத்தின் மீது தான் கொண்டிருந்த எல்லையற்ற அன்பைக் காண்பித்தார்..

அதன் பின் உலகம் உருப்பட ஆரம்பித்தது.. எட்டுத்திசையிலும் கிறிஸ்தவம் பரவியது.. ஆண்டவரின் சிலுவை வழியில் பின் சென்ற அவர் அப்போஸ்தலர்கள், புனிதர்கள், ஆதிக்கிறிஸ்தவர்கள் தங்கள் குருதி சிந்தி.. இன்னுயிரைக்  கொடுத்து கிறிஸ்தவத்தை வளர்த்தார்கள்.. கிறிஸ்தவம் தழைத்தோங்கியது..

அதன் பின் இரத்தம் சிந்த வேண்டிய தேவைகள் இல்லாமல் போனது.. புனிதர்கள்( ஆண், பெண்) கடுமையான தவம், ஜெபம், பரித்தியாகங்கள் செய்து கிறிஸ்தவத்தை வளர்த்தார்கள் ( கிறிஸ்தவத்தின் பொற்காலம் பதிமூன்றாம் நூற்றாண்டு சுவாமி நாதர், புனித அந்தோணியார் வாழ்ந்த காலம்..)

இந்தியாவிலும் இரத்தத்தை சிந்தி இன்னுயிரைக்கொடுத்து கிறிஸ்தவம் வளர்ந்ததையும் நினைவு கொள்க..

13- நுற்றாண்டு.. 17-ம் நூற்றாண்டு.. பதினெட்டாம் நூற்றண்டுவரை ஓரளவு நன்றாகவே போனது..

மக்கள் மாறினார்கள் கிறிஸ்தவம் தழைத்தது.. நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது..

ஆனால் ஒரு கட்டத்தில் மீண்டும் மனிதன் பழைய பாவ நிலைக்குத் திரும்பினான்.. அதிலேயே தொடர்ந்தான்.. அதிலேயே உருண்டான்..பிரண்டான்.. புனிதர்களை அனுப்பி அவர்களைப் பின்பற்றி புனித வாழ்வுவாழ அழைத்தார்.. 

அவர் கடைசியாக தன் பிரிய மகளை அனுப்பி குறிப்பாக 18 மற்றும் 19-ம் நூற்றாண்டில் அனுப்பி செய்ய வேண்டிய செயலையும் சொல்லி உலகை எச்சரித்தார்..

சலேத் மாதா, லூர்து மாதா, பாத்திமா மாதா பிரபலமானர்கள் ஆனால் அவர்கள் சொல்லிய செய்தி பிரபலமாகவில்லை.. கடைசிக் கிறிஸ்தவன் வரை செல்லவில்லை.. முக்கியமாக அன்னையின் செய்திகள் புறக்கணிக்கப்பட்டது..

பாவங்கள் தொடர்ந்தன.. மனிதன் பாவம் செய்வதும்.. மீண்டும் மனம்திரும்புவதும் புதிதல்ல..

ஆனால் தவம் செய்யவும், பரிகாரம் செய்யவும் ஆள் இல்லாமல் போனதுதான் பரிதாபம்.. ஆண்டவரின் சிலுவையை சுமக்க ஆள் இல்லை.. அவரின் பாடுகளோடு இனைய, பாடுகளை பகிர பலி ஆன்மாக்கள் இல்லாமல் போனது. ( கடைசியாக பாத்திமா சிறுமிகள், தந்தை பியோ, அன்னை தெரசா மற்றும் ஒரு சிலரைத் தவிர..)

ஓருகால கட்டத்தில் தவமும், பரிகாரமும் வற்றத்துவங்கிய போது.. ஜெபமும் வற்றத் தொடங்கியது.. குறிப்பாக கத்தோலிக்க குடும்பங்கள் குடும்ப ஜெபமாலையை நிறுத்தியே விட்டது.. அதிலும் பாரம்பரிய பக்தி உத்தரிய பக்தியுமில்லாமல் போனது..

கத்தோலிக்க திருச்சபையில் புற்றீசல்கள் போல பிரிவினை சபைகள் தளை தூக்கியது.. மக்கள் சிலுவைகளை மறந்து நோய்கள் தீர வேண்டும், ஆசீர்வாதம், சந்தோசம் மட்டும் போதும் என்று ஆனார்கள்.. நாமும் அவர்களைப்போல மக்கள் எங்கே வெளியே ஓடிவிடுவார்களோ என்று பயந்து அவர்களைப் போல ஜெபிக்க ஆரம்பித்துவிட்டோம்..

பரித்தியாகங்கள் தவ முயற்சி, சிலுவைகள் இல்லாமல் போய்விட்டது..

பிரிவினை சபையினரையோ.. அவர்கள் ஜெபிப்பதைபோல் நாம் ஜெபிப்பது தவறு என்று சொல்ல வரவில்லை.. ஆனால் நமக்குத்தேவையான உலகைக்காப்பாற்ற தேவையான உணவுகள் இல்லாமல் போனது பரிதாபம்..

இன்று.. 

உலகைப் பார்ர்த்தார்; எதுவுமே நல்லது இல்லை என்று கண்டார்.. 

நினிவே நகரத்தைப் பார்க்கும் போது இருந்த நிலையை விட ரொம்ப மோசமாக உலகம் இருந்ததைக் கண்டார்..

இதயத்தில் இருந்து கொண்டு அழைத்தார்.. யாரும் அவர் குரலைக் கேட்கவில்லை.. கத்தினார்.. கதறினார்.. கெஞ்சியும் பார்த்தார்.. நாம் உலகத்தோடு ஒட்டிப்போய்விட்டதால் நம் காதுகள் மந்தமாகிவிட்டது.. இதயம் அவருக்கு மட்டும் இரும்பாகிப்போனது. அவர் குரலை சட்டை செய்யவில்லை.. உலகம் நவீனத்தை நோக்கியே நகன்றதே தவிர அவர் குரல் கேட்கப்படவில்லை..

பொறுமை இழந்த கடவுள் சிறிது கோபம் கொண்டார்.. 

சிறிது சிறிதாக பாடம் புகட்ட ஆரம்பித்தார்..

ஒரு முறை ஆகாயத்தை அடைத்தார்… இன்னொரு முறை ஆகாயத்தை அடைக்காமல் விட்டுவிட்டார்..

அப்போதும் திருந்தவில்லை… பால் பொங்குவதுபோல் கடலை உலகம் முழுவதும் பொங்க வைத்து மிரட்டிப் பார்த்தார்.. மனிதன் அசரவில்லை.

களியாட்டங்களும், கலாச்சார சீரழிவுகளும் தொடர்ந்தன. நாங்கள் சரியாகத்தான் இருக்கிறோம்.. என்று சொல்லிக்கொண்டு சரியில்லாததை செய்வதையே தொடர்ந்தான்..

உலகம் முழுவதும் கடவுளின் குரல் மறுக்கப்பட்டது.. கடவுளை நினைக்க ஒருகட்டத்தில் மறந்தே போனான்.. அப்படியே நினைத்தாலும் தன் சுய நலத்திற்காகவே தேடினான்..காணதகுறைக்கு நாத்தீகம் வேறு..

நவீனம்… விஞ்ஞானம்.. அறிவியல்.. ஆராய்ச்சி… என்று எதை எதையோ செய்தான். ஏன் கடவுள் தடுக்கும் விசயங்கள்.. தடைசெய்த விசயங்களை செய்வதிலும் மகிழ்ச்சி கண்டான்.. இயற்கைக்கு மாறான விசயங்களையும்.. அருவறுப்பான விசயங்களையும் கூட செய்ய துணியவில்லை..

மனிதன் கடவுளின் சாயலையும், பாவனையும் மறந்தான்.. குறிப்பாக பிறரையும். தன்னோடு இருப்பவர்களையும் நேசிக்க மறந்தான் ( அதனால் சமூக இடைவெளி அனுசரிக்கப்படுகிறது)…

சிறு சிறு உணர்த்துதல்களுக்கும், சிறிய சிறிய அழிவுகளுக்கும் மனிதன் செவிசாய்க்காமல் தன் வழியிலேயே தொடர்ந்ததால் இந்த நிலைமை..

மூன்றாம் உலகப்போரை அனுப்பியிருக்கலாம்.. ஆனால் பாதிப்பு மிகக்கொடூரமாக இருந்திருக்கும்… இப்போதாவது நாம் சிந்திக்கவாவது நேரம் இருக்கிறது.. பிறரை நேசிக்க மறந்ததால் தனியாக இருந்தாவது  நம்மால் யோசிக்க முடியும்.. ஏன் இந்த நிலை என்று..

அன்று நினிவே மக்கள் செய்ததை நாம் செய்யாமல் போனதால் அதிலும் கொஞ்சம் இரக்கப்பட்டு அவரே நம்மை செய்ய வைத்துவிட்டார்..

ஆம் நம்மை வீட்டுச்சிறையில் அடைத்துவிட்டார்..  நாமாகவே இப்போது தவம் செய்ய வைத்துவிட்டார்..

அட்லீஸ்ட் இப்பவாவது இந்த சூழ்நிலைகளை ஒப்புக்கொடுத்து அன்று அந்த நல்ல கள்ளன் சொல்லியதைப் போல் “ நாம் தண்டிக்கப்படுவது முறையே “ என்று ஏற்றுக்கொண்டு தவம் செய்து, பரிகாரம் செய்து குடும்ப ஜெபமாலை செய்து தடை நீங்கியதும் தகுதியான உள்ளத்தோடு, ஒழுக்கமாக, பயபக்தியோடு திருப்பலியில் பங்கு பெற்றால் எல்லாம் சரியாகிவிடும்..

அன்று அணைத்த.. இப்போது அடிக்கும்… இன்றே நம்மை மீண்டும் அணைக்கத்துடிக்கும் நம் பரிசுத்த கடவுள் ரொம்பவே இரக்கமுள்ளவர்.. எளிதில் இரங்குபவர்.. தன் மூச்சை நமக்கு கொடுத்தவர்.. ஒரே மூச்சில் இந்த நோயை உலகை விட்டே அனுப்ப வல்லவர்..

ஆனால் இப்போதாவது.. (இதுவும் அவரின் இரக்கத்தின் பொறுட்டே நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது ) நாம் அவரிடம் திரும்பினால் தப்பித்துக்கொள்ளலாம்..

இது அவன் பாவி.. இவன் பாவி என்று சொல்ல அல்ல நான் பாவி என்று சொல்லவே இந்த பதிவு..

“என் பாவமே.. என் பாவமே… என் பெரும் பாவமே..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !