புனித பிரான்சிஸ் சவேரியார் வாழ்க்கைச் சுவடுகள்

பிறப்பு : 07.04.1506, ஸ்பெயின் நாட்டில் நவார் மாவட்டம். 

பெற்றோர் : யூவான் தெ யாசு

டோனா மரியா தெ அஸ்பில்குவேட்டா. 

உடன்பிறந்தோர் : சகோதரர்கள் இருவர், சகோதரிகள் இருவர். 

1525 : பாரீசு பல்கலைக் கழகத்திற்கு கல்வி பயிலச் சென்றார். 

15.03.1530 - முதுகலைப் பட்டம் பெற்றார். 

1530 - 1534 - கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அக்காலத்தில்தான் லொயோலா இஞ்ஞாசியாரின் நட்பு கிடைத்தது. 'ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அவனுக்கு என்ன பயன்?' என்ற இறை இயேசுவின் வார்த்தைகளை அடிக்கடி இஞ்ஞாசியார் தனக்கு அறிவுறுத்தியதால் உலகம் போற்றும் பேராசிரியராகத் திகழ வேண்டும் என்ற தன் கனவை மாற்றி இஞ்ஞாசியாரின் கொள்கைகளுடன் தம்மை இணைத்துக் கொண்டார். 

15.08.1534 : மறைசாட்சி மலை ஆலயத்தில் பீட்டர்ஃபேபர் நிகழ்த்திய திருப்பலியில் இஞ்ஞாசியார் மற்றும் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து மூன்று வார்த்தைப்பாடுகளை ஏற்றார். 

1534 - 36 - இறையியல் பயின்றார். 

24.06.1537 - வெனிஸ் நகரில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

30.09.1537 - முதல் திருப்பலி நிறைவேற்றினார்.

1537: நிக்கோலஸ் போபடில்லாவுடன் சேர்ந்து பொலோஞ்ஞாவிற்குச் சென்றார். 

1538: வெனிஸ் நகரிலிருந்து எருசலேமிற்கு எந்தக் கப்பலும் புறப்படாததால் உரோமிற்குச் சென்று திருத்தந்தை மூன்றாம் பவுலைச் சந்தித்தார். 

1538 - திருத்தந்தை அறிவுறுத்தியபடி டாமசோ நகர் புனித லாரன்சின் ஆலயத்தில் பணியாற்றினார். 

1539 புனித பார்பரா கல்லூரி முதல்வர் தே கூவெயா மூலம் இயேசுசபை தோழர்களைக் கேள்விப்பட்ட போர்த்துக்கல் மன்னர் இந்தியாவிற்கு ஆறுபேரை அனுப்பிவைக்க இஞ்ஞாசியாரைப் பணிக்கும்படி திருத்தந்தையிடம் தூதனுப்பினார். தம் நண்பர்கள் சைமன் ரொட்ரீகுவசையும் நிக்கோலஸ் போபடில்லாவையும் இந்தியாவிற்கு அனுப்ப இஞ்ஞாசியார் முடிவெடுத்தார். ரொட்ரீகுவஸ் லிஸ்பன் புறப்பட்டுச் செல்ல நிக்கோலஸ் போபடில்லா கடும் காய்ச்சலால் அவதியுற்றதால் அவருக்குப் பதில் தம் உற்ற தோழரான சவேரியார்

இஞ்ஞாசியார் அனுப்பிவைக்க முடிவெடுத்தார். 

1540 இஞ்ஞாசியாரின் கட்டளையை மனமுவந்து ஏற்று இஞ்ஞாசியாரைப் பிரிய மனமின்றி உரோமிலிருந்து புறப்பட்டு லிஸ்பன் சென்றார். 

06.05.1542 - இந்தியாவில் மறைப்பணியாற்ற பையில் ஒரேயொரு காத்சட்டையும் பிரிவியரி என்னும் தமக்குப் பிடித்தமான பால் செபப்புத்தகத்தோடும் கோவா வந்தடைந்தார். 

1543 - கன்னியாகுமரி மாவட்டத்திலும் தமிழக கடற்கரையோர கிராமங்களிலும் மணியடித்தபடி சென்று மக்களைக்கூட்டி மறைபரப்புப் பணியாற்றினார். ஆலந்தழை. பெரியதாழை, கூடுதாழை, திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினம், தாளம்புளி, புன்னைக்காயல், பழையகாயல், காயல்பட்டினம், கொம்புத்துறை, தூத்துக்குடி ஊர்களில் கோவாவில் செய்ததைப்போல தெருத்தெருவாக மணியடித்தபடி சென்று சிறார்களையும், பெரியவர்களையும் ஒன்றுசேர்த்து திருமறையைப் போதித்தார். பணித்தளங்கள் அதிகரித்ததால் நான்கு கற்ற வேதியர்களைப் பணியிலமர்த்தி மறைபரப்பினார். நான்கு மாதங்களுக்குப் பின் மணப்பாட்டிற்குச் சென்று குகையில் தங்கி தவவாழ்வு மேற்கொண்டார், பின்வைப்பார், வேப்பார். வேர்க்காடு போன்ற பணவர்களிலும் மறைப்பணியாற்றினார். கொள்ளையடிப்பால் பாதிக்கப்பட்ட கிறித்தவ மக்களுக்குத் துணைநின்று பாதுகாத்தார். திருவிதாங்கூர் அரசர்ன் இசைவுடன் குளச்சல், முட்டம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட ஊர்களில் காக திருமறையைப் பரப்பினார். 1545 | - மைனப்பூர் தூய தோமையார் ஆயைம் சென்று எலிரோ எனும் நண்பரின் துணையுடன் மலேயா சென்றார். தன் 1547 - 49 - - மீண்டும் இந்தியாவில் மறைப் பணியாற்றினார். 1549-51 --- - ஜப்பான் நாட்டில் மறைப்பணி 

1552 - கோவாவில் மீண்டும் மறைப்பணிட 

1552 ஏப்ரல் - கோவாவிலிருந்து வணிகக் கப்பலில் ஏறி சீனாவிற்குப் பறப்பட்டுச் சென்றார். 

03.121552 - சான்சியன் தீவில் கடும் குளிர் காய்ச்சலால் உயிர்துறந்தார். 

22.03.1553 - சான்சியன் தீவில் அடக்கம் செய்யப்பட்ட சவேரியார் திருவுடலைச் சுமந்த சவப்பெட்டியை அவரது தோழர் அந்தோனியோ மலேயாவிற்கும் பின் கோவாவிற்கும் கொண்டுவந்து சேர்த்தார். தாயக் அழியாமலிருந்த அவரது உடல் தூய பவுல் 250 வருத்தப்பாக்கு கல்லூரி ஆலயத்தில் திருப்பீடத்தின் முன் அடக்கம் செய்யப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை - இறைமக்களின் வணக்கத்திற்காக சவேரியாரின் தருவுடல் பார்வைக்கு வைக்கப்படுகிறது. 

25.10.1619 - திருத்தந்தை ஐந்தாம் பவுல் சவேரியாருக்கு அருளாளர் பட்டம் சூட்டினார்.

12.03.1622 - திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியார் சவேரியாருக்கு புனிதர் பட்டம் சூட்டினார்.

வாழ்வியல் விருதுவாக்கு : மேன்மை (மாஸ்ஸிமோ) 

புகழ்மொழிகள் : இரண்டாம் பவுலடியார், பெரியதகப்பன் 

பாதுகாவலர் - : மறைபரப்பு நாடுகள், இந்தியா