கிருபை தயாபத்தின் மாதாவே, கிறீஸ்தவர்களுடைய சகாயமே, தேவ பராமரிப்பின் கொடைகளை உத்தம பிரமாணிக்கத்தோடு பகிர்ந்தளிக்கிறவர்களே, சகல வரப்பிர சாதங்களுடையவும் பொக்கிஷதாரியே, மெய்யான பக்தி யோடு உம்மைத் தேடி வந்த எவனும் உம்மால் தேற்றப் படாமல் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும். இதனால், உமது கனிவுள்ள தயவிரக்கத்தையும், உமது மகா தாராள முள்ள பராமரிப்பையும் நம்பிக்கொண்டு, தேவரீர் என் ஜெபத்தைக் கேட்டருளும்படியாக, அடியேன் உமக்கு முன்பாகப் பணிந்து நிற்கிறேன்.
என் சகல ஞான, இலௌகீகத் தேவைகளுக்கும் அவசிய மான வரப்பிரசாதங்களை எதிர்காலத்தில் எனக்குப் பெற்றுத் தந்தருளும்.
பரிசுத்த திருச்சபையையும், பரிசுத்த பாப்பரசரையும், பாவிகளின் மனந்திரும்புதலையும், கத்தோலிக்கத் திருச் சபையின் பரம்புதலையும், நமதாண்டவரால் தெரிந்து கொள்ளப்பட்டு, இப்போது உத்தரிக்கிற ஸ்தலத்தின் சுத்திகரிக்கிற சுவாலைகளில் துன்புறும் ஆத்துமங்கள் விரைவில் நித்தியப் பேரின்பத்தால் தேற்றப்படும்படி, அந்த ஆத்துமங்களையும் உம்முடைய நேசமுள்ள தாய்ககுரிய இருதயத்திடம் பக்தியார்வத்தோடு ஒப்புக்கொடுக்கிறேன். - ஆமென்.