கண்ணீர் ஜெபமாலை (மாதா உலகில் இருக்கும்போதும், பல்வேறு காட்சி களிலும், மற்றும் சுரூபங்களிலும் சிந்தும் கண்ணீர்களுக்குப் பரிகாரமாக)
ஜெபமாலையின் பாடுபட்ட சுரூபத்தில்:
சிலுவையில் அறையப்பட்ட சேசுவே! உமது பாதத்தடியில் சாஷ்டாங்க மாக விழுந்து, உமது துயரம் நிறைந்த சிலுவைப் பாதையில் அனுதாப வேதனையுடன் உம்மைப் பின்சென்ற உம்முடைய தாயின் கண்ணீர்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். நல்லவ ரான ஆண்டவரே, உம் மிகப் புனித அன்னையின் கண்ணீர்கள் எங்களுக்குத் தரும் பாடங்களை நாங்கள் எங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, அதனால் பூவுலகில் உமது திருச்சித்தத்தை நிறைவேற்றவும் மோட்சத்தில் நித்தியத்திற்கும் உம்மைப் புகழ்ந்து துதிக்கவும் தகுதி பெற்றவர்களாகும்படி செய்தருள் வீராக. ஆமென்.
பெரிய மணிகளில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக.
சிறிய மணிகளில்:
முதல்வர்: சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து,
துணைவர்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
(இப்படி 7 மணி செபமாக ஏழு முறை சொல்லவும்)