திருப்பலிதானே இல்லை.. மக்களாவது தனித்தனியாக, உரிய இடைவெளிவிட்டு மாஸ்க் அணிந்தாவது நம் தெய்வீக நற்கருணை ஆண்டவரை சந்தித்து அவர் முன்பாக முழங்காலில் நின்று ஒரு ஜெபமாலையாவது சொல்லி வரலாமே.. அட்லீஸ் அன்பியங்கள் ஒவ்வொன்றாக அனைத்து பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றி ஆலயம் சென்று நற்கருணை ஆண்டவரை சந்திக்க அன்பியத் தலைவர்கள் முயற்சி எடுக்கலாமே... நிறைய ஆலயங்கள் பக்கத்திலியே இருக்கிறது..
ஆண்டவரை சந்தித்து ஜெபிப்பதன் மூலமாக அடுத்தவாராமாவது நம் எல்லாருக்கும் திருப்பலி கிடைக்க அவர் ஆவன செய்வாரே.. ஆலயம் மூடப்பட்டு இருக்கக் கூடாது.. நம் ஆண்டவர் தனித்திருக்கக் கூடாது..
“ இதோ உலகம் முடியும் வரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன் “ மத்தேயு 28: 20
என்றுதானே சொல்லியிருக்கிறார். உங்களை விட்டு நான் தனியே இருக்கிறேன் என்று சொல்லவில்லையே..
குடும்பம் குடும்பமாக அல்லது அன்பியம் அன்பியமாக.. ஆலயம் சென்று நாளை ஆண்டவரை சந்தித்து ஆளுக்கு/குடும்பத்திற்கு/அன்பியத்திற்கு ஒரு ஜெபமாலை ஜெபித்தால் நன்றாக இருக்குமே.. நிறைய பலன் கிடைக்குமே.. இந்த கொரோனாவிலிருந்து விடுதலைக் கிடைக்குமே.. நம் பிதாவின் கோபத்தை குறைக்கலாமே... அவரின் எல்லையற்ற இரக்கத்தை நாடலாமே..
அவர் படைத்த மக்கள்தானே நாம்... அவர் இருக்கும் இடத்தைத்தானே செல்கிறோம்.. அவர் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும்தானே இருக்கிறோம்.. அவர் நமக்கு எந்த தீங்கும் வர விடமாட்டார்.. நம்மைப் பாதுகாப்பார்.. அனைத்து தீங்கிலிருந்தும் பாதுகாப்பார்...
ஆகவே பங்குத்தந்தையர்கள் அனுமதியோடு... நம் தெய்வீக நற்கருணை ஆண்டவரை சந்தித்து ஜெபமாலை சொல்லி அடுத்த ஒரு வாரத்திற்கு நமக்கு தேவையான வரங்களை, ஆசீரை, வலிமையை, பொறுமையை, திடத்தை வாங்கி வருவோம்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !