நமது ஆண்டவர் தமது தாயாரின் வியாகுலங்களின் மீது பக்தி கொண்டிருக்கிறவர்களுக்கு வழங்கும் வாக்குறுதிகள் மிகவும் பெரியவை. அர்ச். அல்போன்ஸ் லிகோரியார் மரியாயின் வியாகுலங்களைப் பற்றித் தம்முடைய பிரசங் கத்தில் கூறுவதாவது: “இது அர்ச். ஹங்கேரி எலிசபெத் அம்மாளுக்கு வெளிப்படுத்தப்பட்டது. மாதா மோட்சத் திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, சில வருடங்கள் கழித்து ஆண்டவரின் பிரியமான சீடரான அர்ச். அருளப் பருக்கு மாதாவை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது. இந்த ஆவல் உடனே நிறைவேறியது. அவரது இனிய தாயார் தன் திவ்விய குமாரனோடு அவருக்குத் தோன்றினார்கள். மாதா தன் வியாகுலத்தின்மீது பக்தி கொண்டவர்களுக்காக சில விசேஷ வரப்பிரசாதங்களைத் தன் திருமகனிடம் கேட்பதை அருளப்பர் கேட்டார். நம் ஆண்டவரும் கீழ்க்கண்ட நான்கு வரப்பிரசாதங்களை வாக்குறுதிகளாக வழங்கினார்:
1. யார் யாரெல்லாம் தம் மோட்ச அன்னையின் வியாகுலங்களை பக்தியுடன் நினைவுகூர்கிறார்களோ, அவர்கள் தங்கள் மரணத்திற்கு முன்பாகத் தங்கள் பாவங்களுக்கு உத்தம மனஸ்தாபத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.
2. நமது ஆண்டவரே அவர்களது துன்பங்களிலும் விசேஷ மாக மரணவேளையிலும் அவர்களைப் பாதுகாப்பார்.
3. தமது திருப்பாடுகளின் ஞாபகத்தை அவர்கள் மீது பதியச் செய்து, அதற்காக மோட்சத்திலும் அவர்களுக்கு சம்பாவனை அளிப்பார்.
4. அந்த பக்தியுள்ள ஊழியர்களைத் தம் திருத்தாயாரின் கரங்களில் ஒப்படைத்து, மாதாவின் விருப்பப்படியே அவர்கள் மாதாவழியாக எல்லாவிதவரப்பிரசாதங்களையும் பெறச் செய்வார்.
இவை மட்டுமல்ல, இன்னும் பல பெரிய வரப்பிர சாதங்கள் வியாகுல அன்னை பக்தி மூலம் பெறப்படுகின்றன என்று சங். ஃபேபர் சுவாமி கூறுகிறார்.
இந்த பக்தி குறிப்பிட்டுச் சொல்லும்படியான அந்தரங்க அர்ச்சியசிஷ்டதனத்துடன் தொடர்புள்ளதாக இருக்கிறது.
உலக இன்பங்களில் உள்ள வெறுமையை அது வெளிப் படுத்துகிறது. உலகத்தன்மை மாதாவின் வியாகுலங்களின்மீது பக்தி கொண்டுள்ள ஆன்மாக்களை ஒன்றும் செய்ய முடியாது. இந்த பக்தி முயற்சியை அது சிறிதளவு கூட பாதிக்காது.
இந்த பக்தி, சேசுவும், மாதாவும் பாவத்தால் கொள்ளும் துயரத்தில் ஒரு நிலையான பங்கை நாமும் பெற்றுக்கொள்ளச் செய்கிறது.
இந்த பக்தி நமது எண்ணங்களை சிலுவையில் அறையுண் டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருக்கு நெருக்கமாக இருக்கச் செய்கிறது.
அது நம் ஆன்மாக்களுக்கு சிலுவையின் உணர்வைத் தருகிறது. நம் சொந்தத் துன்பங்களைக் கடவுளின் திருச்சித்தத் திற்கு அமைந்த மனதோடு தாங்கிக் கொள்ள நமக்கு பலம் தருகிறது.
இந்த பக்தி, சேசுவின் விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை முழுவதும் மூடி, நமது இரட்சகரின் திரு இருதயத்தின் ஆழங்களுக்குள் நம்மை நேரடியாக இட்டுச் செல்கிறது.
யாரெல்லாம் இந்த வியாகுலத் தாயின் மீது தங்கள் வாழ்நாளில் கனிந்த அன்பு நிறைந்தவர்களாக இருக்கிறார் களோ, அவர்கள் எல்லோரும் இதைத் தாங்கள் முன்குறிக்கப் பட்டிருப்பதன் மிக நிச்சயமான அடையாளமாகக் கருதலாம்.