“தவக்காலத்தில் கத்தோலிக்கர்கள் ஒரு சந்தி சுத்த போசனம் கடைபிடிப்பார்கள், ஒறுத்தல் முயற்சிகள் செய்வார்கள் (சி.எஸ்.ஐ கிறிஸ்தவர்கள் மற்ற கிறிஸ்தவர்களும் தவக்காலத்தை கடைபிடிக்கிறார்கள்) ஆனால் நாங்கள் செய்ய மாட்டோம்.. அந்த காலங்களில் நாங்கள் கறி சாப்பிடுவோம்.. ஏன் திருமனம் கூட செய்வோம்…”
அதற்கு நீங்கள் கூறும் காரணங்கள்…
“ ஆண்டவர் ஒரு முறை பாடுபட்டு உயிர்த்து எல்லோரையும் மீட்டுவிட்டார்.. அதனால் இனி சிலுவைகள் இல்லை… பாடுகள் இல்லை.. அதனால் நாங்கள் அந்த காலங்களிலும் கூட நாங்கள் சந்தோசமாக ஜாலியாகத்தான் இருப்போம்..
பைபிள் வசனங்களுக்கு அதிகமாக விளக்கம் கொடுக்கும் நீங்கள் கீலே உள்ள ஆண்டவருடைய நேரடியான வார்த்தைகளுக்கு என்ன விளக்கம் கொடுப்பீர்கள்…
14 அப்பொழுது அருளப்பருடைய சீடர்கள் அவரிடம் வந்து, "நாங்களும் பரிசேயரும் அடிக்கடி நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?" என்றார்கள்.
15 இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்குமளவும், அவன் தோழர்கள் துக்கம் கொண்டாடலாமா ? மணமகன் அவர்களை விட்டுப் பிரியும் நாள் வரும்; அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள். மத்தேயு 9 : 14-15
அதாவது ஆண்டவருடைய பாடுகளுக்கு பின்பு அவருடைய சீடர்கள் நோன்பு இருப்பார்கள்.. நோன்பு என்பது பழைய ஏற்பாட்டிலும் இருந்தது புதிய ஏற்பாட்டிலும் இருக்கிறது… ஆனால் நீங்கள் எந்த ஏற்பாட்டில் இருக்கிறீர்கள்..
நோன்பு எதற்காக செய்யப்பட்டது… தங்களுடைய பாவங்களுக்கு பரிகாரமாக்… மேலும் கடவுளுடைய கோபத்தை அமர்த்துவதற்காக…
நாங்கள் பாவிகள் .. நோன்பு இருக்கிறோம்… நீங்கள் பாவமே செய்ததில்லையா.. அதனால் உங்களுக்கு நோன்பு தேவையில்லையா??
“தன் சிலுவையை ஏற்றுக்கொண்டு, என்னைப் பின்செல்லாதவன் எனக்கு ஏற்றவன் அல்லன்”. மத்தேயு 10 : 38
“பின் இயேசு தம் சீடரை நோக்கி, "என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும். மத்தேயு 16 : 24 & மாற்கு 8 : 34-35
ஆண்டவரைப் பின் செல்ல வேண்டுமானால் தன்னுடைய சிலுவையைச் சுமந்துதான் ஆக வேண்டும்.. ஆண்டவரிடைய சிலுவைப் பாடுகளைத் தியானிக்காமல் நம்முடைய சிலுவைகளை எப்படி சுமக்க முடியும்.. ன் நமக்கு எப்படி சக்தி கிடைக்கும்? அதிலும் லூக்காஸில் ஒரு படி மேலே போய் நாள்தோறும் சுமக்க கட்டளையிடுகிறார்.
அவர்கள் எல்லாரையும் பார்த்து, "என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.
மேலும் சொல்லுகிறார் தம்முடைய சிலுவையை சுமக்காதவன் ஆண்டவருடைய சீடனாக இருக்க முடியாது என்றும் சொல்லுகிறார்..
“தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது.” லூக்காஸ் 14: 27
இந்த வசனங்களுக்கெல்லம் என்ன அர்த்தம்…
தன் சிலுவை அதாவது நம்முடைய பாடுகள் அதாவது ஆண்டவருடைய சிலுவை ரொம்ப பாரமானது வேதனை மிக்கது அதை நம்மை அவர் சுமக்க சொல்லவில்லை… நம்முடைய சிலுவைகளைத்தான் சொல்லுகிறார்..
22 அதற்கு இயேசு, "நீங்கள் கேட்பது என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் கிண்ணத்தில் நீங்களும் குடிக்கமுடியுமா ?" என்று கேட்டார். அவர்களோ, "முடியும்" என்றனர்.
23 அதற்கு அவர், "ஆம், நான் குடிக்கப்போகும் கிண்ணத்தில் நீங்களும் குடிப்பீர்கள்; ஆனால் என் வலப்பக்கமோ, என் இடப்பக்கமோ அமர அருளுவது என்னுடையதன்று. யாருக்கு என் தந்தை ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அது கிடைக்கும்" என்றார். மத்தேயு 20 : 22-23
அது என்ன கிண்ணம் .. துன்பக்கிண்ணம் ஆண்டவரே சாட்சி சொல்கிறார் அவர் சீடரான புனித யாகப்பரையும், அருளப்பரையும் பார்த்து “ நீங்கள் என் துன்பக்கிண்ணத்தில் குடிப்பீர்கள்..” அவர்கள் மட்டுமா குடித்தார்கள் ஒருவரைத்தவிர மற்ற அனைத்து சீடர்களும் குடித்தார்கள்.. ஆதிக்கிறிஸ்தவர்கள் 60 லட்சம் பேர் குடித்திருக்கிறார்கள்…
எங்களுக்கு சிலுவை வேண்டாம்… கஷ்ட்டங்கள் வேண்டாம்… எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும்…
இந்த தவக்காலத்தை கத்தோலிக்க திருச்சபை ஏன் கொடுத்துள்ளது…?
ஏந்த பாவமும் செய்யாத பரிசுத்த தேவன் நம் பாவங்களுக்காக சொல்லொன்னா இன்னல்கள் அனுபவித்தார்… அவர் பாவி போல நடத்தப்பட்டார்… அடிக்கப்பட்டார்.. நொறுக்கப்பட்டார்… அவமானப்படுத்தப்பட்டார்… அறையப்பட்டார்… இவ்வளவும் எதற்காக.. யாருக்காக… நமக்காக அல்லவா… நாம் செய்யும் பாவத்திற்கு பரிகாரமாக நம்மையல்லவா சிலுவையில் அறைய வேண்டும்…
நமக்காக பாடுபட்டு திருஇரத்தம் சிந்தி நம்மை மீட்ட அந்த தெய்வீக திருப்பாடுகளை நான் நினைக்கமாட்டேன்… தியானிக்க மாட்டேன் என்று சொன்னால்…
பாடுகள் வேண்டாம் என்று சொன்ன இராயப்பருக்கு (பேதுரு) ஆண்டவர் கொடுத்த மறுமொழி என்ன தெறியுமா?
“ போ பின்னாலே சாத்தானே ! “
அது போல ஆண்டவர் அடிக்கடி சொல்லிய வார்த்தை அதிலும் அவர் அப்போஸ்தலர்களை அழைக்கும் போது,
“ என்னைப் பின் செல் “
இதற்கு நீங்கள் என்ன விளக்கம் கொடுப்பீர்கள்???
ஆண்டவருடைய பாடுகளில் பங்கெடுக்கவில்லையென்றால் அன்று பாதம் கழுவும் சடங்கில் ஆண்டவர் சொல்லிய வார்த்தைதான் நம் செவியில் விழும்..
“ உனக்கு என்னோடு பங்கில்லை… “
அப்புறம் என்ன ?
“ நாங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டோம்… நீங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டீர்களா? “
நன்றாக நினைவில் வைத்துங்கொள்ளுங்கள்… அது யாராக இருந்தாலும் கத்தோலிக்கராக இருந்தாலும், பிரிவினை சபையினராக இருந்தாலும் சாகும் வரை தெறியாது… “ நாம் இரட்சிக்கப்பட்டு விட்டோமா? என்று… ஏதோ ஆண்டவர் கருணையால் நாம் கிறிஸ்தவர்களாக பிறந்திருக்கிறோம்…
ஞானஸ்தானத்தில் (திருமுழுக்கு) கழுவப்படுவது நம் ஜென்மப்பாவமே… கடைசிவரை நல்லவராய் வாழாமல் யாரும் மோட்சம் போக முடியாது. ஆன்மாவுக்கு எதிரான சோதனை சாகும் வரை கூட வரும்..
ஆகையினால் மனம் மாற ஆண்டவருடைய திருப்பாடுகள் தேவை… தவம் தேவை.. ஒறுத்தல் முயற்சிகள் தேவை… சிலுவை தேவை…
இது உங்கள் மேல் உள்ள அக்கரையினால் சொல்லுகிறோம்…
இதற்கும் வழக்கம்போல் விளக்கம் கொடுக்கனும் என்று நினைத்தால் கொடுத்துக்கொள்ளுங்கள்…
ஆண்டவருக்கு அறிவாளிகள் தேவையில்லை…பரிசேயர்கள் தேவையில்லை…
தாழ்ச்சியுள்ள பாவிகளும்… ஆயக்காரர்களும் போதும்… அந்த தாழ்ச்சியே அவர்களை மீட்டுவிடும்… என்னை நான் பாவி என்று சொல்ல ஒருபோதும் தயங்க மாட்டேன் மாட்டோம்…
திருப்பலியில் கூட “ என் பாவமே… என் பாவமே… என் பெரும் பாவமே என்றுதான் மன்றாடுகிறோம்…
நாம் இரத்தம் சிந்த வேண்டாம் தவமாவது செய்யலாம் அல்லவா?
கேட்க செவியுள்ளோர் கேட்கட்டும்…
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !