“நாமே உன் கடவுள் “
கடவுள் மனது வைக்காமல் இது நம்மை வீட்டு நீங்காது..
கடவுளின் பாரமான கரங்கள் திரும்ப மேலே எழாமல் எதுவும் சரியாகாதாது..
வாட்ஸ் அப்பில் தேவையில்லாத, விநோதமான பகிர்வுகளை பகிராதீர்கள்.. பார்க்காதீர்கள்.. அதில் நேரத்தை செலவழிகாதீர்கள்.. ஏற்கனவே பீதியில் இருப்பவர்கள் மேலும் குளப்பமும், மேலும் பீதியும் அடையக்கூடும்.. அடிப்படை உண்மையில்லாத தகவல்களும் பறிமாறப்படுகிறது..
இப்போது தேவையானது ஒன்றே ஒன்றுதான்.. ஜெபம்.. எவ்வளவு அதிகமாக ஜெபிக்க வேண்டுமோ அவ்வளவு அதிகமாக ஜெபித்தால் சீக்கிரமே இந்த வைரஸ் காணாமல் போய்விடும்..
காலை ஒரு ஜெபமாலை, இரவு ஒரு ஜெபமாலை, மதியம் 3.00 மணி இறையிரக்க ஜெபமாலை. தினமும் இயேசுவின் திருஇருதயத்திற்கு நம் குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபம், மேலும் இயேசுவின் திருஇருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கும் ஜெபத்தை சொல்ல வேண்டும்..
பொழுது போகவில்லை என்றால் டி.வி பாருங்கள்.. தேவையற்ற காரியங்களில் ஈடுபடவும் வேண்டாம்.. அதில் மனதை செலுத்தவும் வேண்டாம்..
ஒரே கடவுள்.. உயிருள்ள கடவுள்.. அது நம் கடவுள்.. நம் அருகிலேயே இருக்கும் கடவுள் நமக்குள்ளேயே இருக்கும் கடவுள்.. அவரால் முடியாதது என்று எதுவும் இல்லை..
“ஏனெனில் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை “ லூக் 1: 37
வேடிக்கை பார்க்கும் நேரம் அல்ல இது.. விநோதமாக பொழுது போக்கும் நேரமல்ல.. இன்னும் பத்து நாட்களுக்குள் கட்டுக்குள் வரவில்லையென்றால்.. ஊரடங்கு தொடர்ந்தால் என்னவாகும்.. ? நமக்கு தெறிந்து சில விசயங்கள் நடக்கின்றன.. இதை பயன்படுத்தி தெறியாத விசயங்கள் எத்தனை நடக்குமோ?
நாம் தானே தவறு செய்தோம்.. நாம்தானே கடவுளை விட்டு தொலைதூரம் சென்றோம்.. நாம்தானே அவரைத் தேட வேண்டும்.. அழைக்க வேண்டும்.. குடும்பமாக உட்கார்ந்து கூவி அழைக்க வேண்டும்.. நாம் இருக்கும் சூழ் நிலைகளை ஒப்புக்கொடுப்போம்.. வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதால் ஏற்படும் அலுப்பு, சலிப்புகளை ஒப்புக்கொடுப்போம்.. முழு மனதோடு அவரைத் தேடுவோம்.. நாடுவோம்..ஜெபிப்போம்..
இந்த உலகில் எவனும் பெரியவனல்ல நிரூபித்திருக்கிறார்.. எதுவும் நிரந்தரமல்ல என்றும் நிரூபித்திருக்கிறார்.. மூவுலகையும் ஆட்சி செய்பவர் நாம்தான் என்று நிரூபித்திருக்கிறார்.. மீண்டும் சொல்கிறார் “ நாமே உன் கடவுள்..”
எவ்வளவு சீக்கிரத்தில் உலகையே புரட்டி போட்டுவிட்டார்.. எத்தனை நாடுகள் தாங்கள்தான் வல்லரசுகள் என்று கொக்கரித்தன.. போலீஸ் நாடுகள் எல்லாம் பூலீஸாகி விட்டதே. இதுவரை யாராலாவது.. எதையாவது செய்ய முடிந்ததா? தடுக்கவும், ஒளியவும்தான் முடிகிறதே தவிர விடை எங்கே..?
"விழிப்பாயிருங்கள்; ஏனெனில், எப்போது உங்கள் ஆண்டவர் வருவார் என்று உங்களுக்குத் தெரியாது.”
“திருடன் இன்ன சாமத்தில் வருவான் என்று வீட்டுத்தலைவனுக்குத் தெரிந்தால் அவன் விழிப்பாயிருந்து வீட்டில் கன்னம்வைக்க விடமாட்டான் அன்றோ ?”
“இதை உணர்ந்து நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்.” மத்தேயு 24 : 42-44
நாளையே நம் ஆண்டவர் நம்முன்னால் வந்து நின்று அழைத்தால் நாம் செல்ல தயாராக இருக்கிறோமா? நம் ஆன்மா எப்படி இருக்கிறது..? நாம் உலக விசயத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோமே தவிர ஆன்மா விசயத்தில் அக்கறைப்படுவதும் இல்லை.. அலட்டிக்கொள்வதும் இல்லை.. நிலை வாழ்வு, விண்ணகம், மோட்சம், என் தந்தையின் வீடு, அங்கு உறைவிடங்கள் பல உண்டு என்று மோட்சத்தைப் பற்றியோ எவ்வளவோ சொன்னார்..
எரி நெருப்பு, அவியா நெருப்பு, முடிவில்லா நெருப்பு, பதர்கள் சுட்டெரிக்கப்படும், கனிதரா கிளைகள் வெட்டி எரியப்படும், பலன் தராமல் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும் மரத்தை வெட்டிவிடுவேன் என்று நரகத்தை காட்டி மிரட்டியும் பார்த்தார்.. நாம்தாம் எதற்குமே அசருவதில்லையே.. அதை அப்புறம் பார்த்துக்கலாம்.. கடைசி காலம் பார்த்துக்கலாம்.. அது எங்கே இப்ப வரப்போவுது.. நம்மை என்ன செய்யும்..??
அவர் சொன்ன மாதிரியே திடீரென்று வந்ததல்லவா… இப்போதும் நாம் விழிக்கவில்லை.. நாங்க அப்படியேதான் இருப்போம்னா..( இப்போது குடும்பங்களில் ஜெபமாலைகள் ஜெபிக்கப்படுகிறது.. ஆனால் காணாது..)
இன்னும் நாம் இப்போது இருக்கும் சூழ்நிலையை நாம் சரியாக உணரவில்லை.. ஜாலியாகத்தான் இருக்கிறோம்..
முதலில் இரண்டு அடி.. மூன்று அடி.. இப்போது பதினாறு அடி என்கிறார்கள்.. காற்றிலேயே கலந்துள்ளது என்கிறார்கள்..
ஜெபங்கள் எழும்ப வேண்டும்… ஜெபமாலைகள் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்க வேண்டும்.. நம் ஜெபங்கள் காற்றில் கலந்து காற்றில் இருக்கும் வைரஸை அழிக்க வேண்டும்..
நாம் எவ்வளவு அதிகமாக ஜெபம், தவம், பரிகாரம் செய்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் நம் ஆண்டவர் மனமிரங்குவார்.. அதை தன் ஒரே மூச்சில் இல்லாமல் செய்துவிடுவார்.. நம் ஜெபத்தால் அவர் செய்வார்..
ஆனால் இப்போது நாம் சில உறுதி மொழிகள் எடுக்க வேண்டும்..
1. நாங்கள் கடவுள் விஷத்தில் விளையாட மாட்டோம். விளையாடவே மாட்டோம்.
2. நாங்கள் வழிபாட்டு காரியங்களில் (குறிப்பாக திருப்பலி) பக்தியோடும், தகுதியான உள்ளத்தோடும் பங்கேற்போம்.
3. தினமும் குடும்பத்தோடு உட்கார்ந்து குடும்ப ஜெபமாலை சொல்லுவோம்..
4. மேலும் நல்லவர்களாக வாழ்வோம்..
இதைச் செய்தால் அறிக்கையிட்டால்.. சீக்கிரம் பலன் கிடைக்கும்..
அரசாங்கம் சொல்லும் பாதுகாப்புகளைக் கடைப்பிடித்து… இப்போது கடவுள் கொடுத்திருக்கும் இந்த நேரத்தை.. அதுவும் தவக்காலத்தின் இறுதி காலத்தை ( அவர்தான் தேர்ந்தெடுத்திருப்பாரோ.?.) நாம் பக்தியோடும்..பரிசுத்தத்தோடும்..ஜெபத்தோடும்.. தவத்தோடும் செலவிட்டால்.. அதைக் கடந்தால் விரைவிலேயே நல்லது நடக்கும்… எல்லாம் சரியாகும்..
ஆம்.. நாம் சரியானால் எல்லாம் சரியாகும்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !