தனது வேதசாட்சியத்தின் நிமித்தம் மாதா விசேஷ விதமாக கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவர்களது வியாகுலத்தின் சொந்த அனுபவத்தால் பிறர் மீது தயவிரக்கம் கொள்வது மாதாவுக்குக் கற்பிக்கப்பட்டது. அது அவர்களுடைய பிள்ளைகளை அவர்களுடைய எல்லாத் துன்பங்களிலும் நேசித்துத் தேற்ற அவர்களுக்கு உதவுகிறது. இந்த மாபெரும் அலுவலுக்காக கடவுள் மாதாவுக்கு இரக்கம் நிறைந்த, வலிமையான ஓர் இருதயத்தைக் கொடுத்துள்ளார்.
கடவுளுடைய பிள்ளைகள் அனைவருக்கும் மோட்சம் செல்வதற்கான வழி கல்வாரி மலை வழியாகச் செல்கிறது. இது வேதனைகள், சோதனைகள் ஆகியவை நிறைந்த வழி யாகும். மாதாவுடன் இருந்தால் நம்மால் எளிதாக நடக்க முடியும், அதிக தைரியத்துடன் போரிட முடியும், அதிக பொறுமையுடனும், நிலையாகவும், மகிழ்ச்சியோடும் துன்பங் களைத் தாங்க முடியும். ஏனென்றால் மாமரி தன் திவ்விய சுதனின் துன்பங்கள் மற்றும் சாவின் மாதிரிகையை மட்டு மின்றி, தமது துன்பங்களின் வழியாக அவர் பெற்ற வெற்றி யையும், மகிழ்ச்சியையும், மகிமையையும்கூட நம் கண்களுக்கு முன்பாக காட்சிக்கு வைக்கிறார்கள். ப - எவ்வளவு அடிக்கடி நமது துன்பங்களுக்கு மத்தியில் நாம் பொறுமையற்றவர்களாகவும், பலவீன இருதயமுள்ளவர் களாகவும், நம்பிக்கை இழந்தவர்களாகவும், நிலையற்றவர் களாகவும் நடந்து கொள்கிறோம். . . எவ்வளவு அடிக்கடி தாங்கும் சக்தியற்றவர்களாய், அமைந்த மனது இல்லாதவர் களாய், முறையிடுகிறோம், முறுமுறுக்கிறோம்! ஓ, நாம் நம் இருதயங்களில் மாதாவின் வியாகுலங்களை ஆழமாய்ப் பதிப்போமாக! நம் வியாகுல மாதாவாகிய அவர்களே நம் துன்பங்களிலும், துன்ப சோதனைகளைப் பொறுமையோடு தாங்குவதிலும், துன்ப துயரங்களை அமைந்த மனதோடு ஏற்றுக்கொள்வதிலும் நமக்கு முன்மாதிரிகையாக இருப்பார் களாக. கடவுளின் திருக்கரங்கள் நம் தோள்களின்மீது பார மான சிலுவையைச் சுமத்தும்போது, நாம் துயரப்படும் நம் அன்னையிடம் திரும்புவோம். அப்போது, நம் சிலுவையைப் பொறுமையோடும், பேறுபலனுள்ள முறையிலும் சுமக்கத் தேவையான ஆறுதலையும், பலத்தையும் பெற்றுக்கொள் வோம்.