1897-ல் அர்ச்சியசிஷ்டதனத்தின் நறுமணத்தோடு மரித் தவளாகிய, திருச்சிலுவையின் தோமினிக்கா க்ளாரா என்ற கன்னிகைக்கு அடிக்கடி உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் காட்சியளித்து வந்தார்கள். இந்த ஆனமாக்களில் ஒன்று இந்த தேவ பணிப்பெண்ணிடம், மரியாயின் வியாகுலங்களின் மீது தனக்கிருந்த பக்தி மட்டுமே தனக்கு இரட்சணியத்தைப் பெற்றுத் தந்ததாகக் கூறியது. அவளுடைய வாழ்வு எவ்வளவு கெட்டதாக இருந்தது என்றால், கடவுளின் ஒரு விசேஷ வரப்பிரசாதத்தால் அன்றி, அவள் இரட்சிக்கப்பட சாத்தியமே இல்லாதிருந்தது. ஆனால் மாமரி தன் மகிமைக்காக செய்யப் படும் எந்த ஒரு காரியத்திற்கும் சம்பாவனை கொடுக்காமல் இருப்பதில்லை என்ற சத்தியம் மட்டுமே அந்த ஆன்மாவைக் காப்பாற்றியது.
மரித்த இந்தப் பெண் மாதாவின் வியாகுலத்தின் மீது ஒரு கனிந்த தயவிரக்கத்தைக் கொண்டிருந்தாள். வியாகுல அன்னையின் படத்தைத் தான் பார்க்கும்போதெல்லாம் இவள் மாதாவுக்குத் தோத்திரமாக 7 அருள்நிறை மந்திரங்கள் சொல்லும் பழக்கத்தை அனுசரித்து வந்தாள். இதை ஒரு பழக்கமாக மட்டுமே தான் கொண்டிருந்ததாகவும், அதை ஓர் உள்ளார்ந்த பக்தியாகத் தான் கொள்ளவில்லை என்றும் அவள் ஒப்புக்கொண்டாள். அவளுடைய உலக நாட்டங்கள் மிகுந்த வாழ்வையும் மீறி, அவளுடைய பக்தியுள்ள தாய் இந்த பக்தியை அவளுடைய இருதயத்தில் எவ்வளவு ஆழமாகப் பதித்து விட்டிருந்தாள் என்றால், இந்தப் பெண் அதற்கு எப்போதும் பிரமாணிக்கமாக நிலைத்திருந்தாள். அவளுடைய அந்த மேலோட்டமான பக்திக்குக்கும் கூட சம்பாவனையாக, சர்வேசுரனுடைய திருமாதா அவளுடைய மரண நேரத்தில் தன் தாய்மையுள்ள நேச அக்கறையைக் காண்பித்தார்கள். தேவ அன்னை தன் ஏழு வியாகுலங் களையும் எவ்வளவு உயிரோட்டமுள்ள, தத்ரூபமான முறையில் அவளுடைய நினைவுக்குக் கொண்டு வந்தார்கள் என்றால், அவள் தனது கடைசி நிமிடங்களில் தன் பாவ கரமான வாழ்விற்காக ஒரு மிக ஆழ்ந்த உத்தம மனஸ்தாபத் தால் தூண்டப்பட்டாள். இதே காரணத்தால் அவள் தனது எல்லாப் பாவங்களுக்கும் மன்னிப்பைப் பெற்றுக் கொண் டாள்.
இந்த ஆன்மா வெளியிட்ட தகவலின்படி, வியாகுல மாதாவின் மன்றாட்டின் வழியாக, தன் பாவங்களின் பேரில் அவள் உணர்ந்ததுக்கம் எவ்வளவு பெரிதாயிருந்தது என்றால், அது அவளது பாவங்களை மட்டுமின்றி, அவற்றிற்கான அநித்திய தண்டனையின் ஒரு பெரும் பாகத்தையும்கூட பரிகரித்து விட்டது! இந்த ஒப்பற்ற பெரும் வரப்பிரசாதத் தோடு சேர்த்து, அந்த ஆத்துமம், உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தபோது, அடிக்கடி பரலோக இராக்கினியின் சந்திப்பு களால் பெரும் ஆறுதலைப் பெற்றுக் கொண்டது. இந்த தேவமாதா சந்திப்புகளில் ஒவ்வொன்றும் அவளுடைய துன்பங்களை வெகுவாகத் தணித்தன. தேவ கன்னிகை உத்தரிக்கிற ஸ்தலத்திற்குள் இறங்கி அவளோடு இருக்கும் நேரம் முழுவதும் அவள் எல்லா வித வேதனைகளிலிருந்தும் முற்றிலுமாக விடுபட்டிருப்பாள்.
இந்தப் பெண் தான் செய்த பாவங்களில் இருபதில் ஒரு பங்கு பாவத்தைக்கூட செய்யாத பல்லாயிரக்கணக்கான ஆன்மாக்கள், நித்திய நரகத்தில் விழுந்து விட்டன என்று அவள் உறுதிப்படுத்தினாள். “ஆ, என் வாழ்வின் இறுதி கணங் களில் நம் பிரியமுள்ள பரலோக அன்னை எனக்குச் செய்த நன்மையை நான் நினைவுகூரும்போது, என்னில் தோன்றும் நன்றியுணர்வுகள் எவ்வளவு உயிரோட்டமுள்ளவையாக இருக்கின்றன! சபிக்கப்பட்டு விட்ட ஆன்மாக்களின் கதிதான் எனக்கும் கிடைத்திருக்க வேண்டியது. இந்த மதுரமான திவ்விய கன்னிகையின் நேசத்தையும், நன்மைத்தனத்தையும், கருணையையும் என் நாவு நித்தியத்திற்கும் அறிக்கையிட்டுக் கொண்டிருக்கும்; ஸ்துதிப் பாடல்களாலும், நன்றியறிந்த கீதங்களாலும் என் குரல் அவர்களை இடைவிடாமல் மகிமைப்படுத்திக் கொண்டேயிருக்கும்” என அவள் அக்களிப் போடு கூறினாள்.
வியாகுல மாதாவின் பேரில் விசேஷ பக்தி கொண்டுள்ள அநேகர் உத்தரிக்கிற ஸ்தலத்தில் சிறை வைக்கப்படுவதும் கூட மிகவும் அரிது. அல்லது அவர்கள் ஒரு மிகக் குறுகிய காலம் மட்டுமே தேவ காட்சியின் பரலோக பாக்கியத் திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்று திருச் சிலுவையின் தோமினிக்கா க்ளாரா மேலும் எழுதுகிறாள்.