அணிந்துரை

புறத்தில் எதிரிகளையும் அகத்தில் தீய எண்ண ங்களையும் எதிர்த்துப் போரிட்டு மண்ணுலகில் மகத்தான மாவீரராய்த் திகழ்ந்த தூய இஞ்ஞாசியாரின் வாழ்க்கைப் பயணம் மனிதர் யாவரும் கற்று உணர, பின்பற்றிய வேண்டிய பாடமாகும்.

இடர்கள் துயர்கள் எது வரினும் எறிக்குதித்தோடும் கோழைத்தனம் அவமானத்தின் அடையாளம், ஆனால் அவற்றைத் துணிச்சலோடு எதிர்த்து நின்று வெல்லக்கூடிய வீரமே பெருமையின் அடையாளம். அத்தகைய பெருமைமிகு அடையாளமாகத் திகழ்ந்த தூய இஞ்ஞாசியாரின் வாழ்வும் பணியும் துவண்டுகிடப்போரையும் துயரில் வாடிக் கிடப்போரையும் தூக்கி நிறுத்தி வெற்றிப் பாதையில் செல்ல வைக்கும்; வாகைசூட்டி வெல்லவைக்கும்.

'நெருப்பு' என்னும் பொருள்கொண்ட பெயரையுடைய இனிகோவின் காலில் பட்ட குண்டு அவரது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி விட்டது. போர்க்காயம்படும் முன், போரில்காயம்பட்ட பின் என இருவேறு வாழ்வை, பயணத்தை, எண்ணங்களை இஞ்ஞாசியாரின் வரலாற்றில் காணமுடிகிறது. காயமுற்று ஓய்வாயிருந்த வேளையில் இனிகோ படித்த இரு புத்தகங்கள்தான் அவரது வாழ்க்கையைத் திசைமாற்றி அவரை ஆன்மீகவீரனாய் மாற்றியது. கத்தோலிக்க கிறித்தவ உலக வரலாற்றையும் மாற்றியது. அ ஏற்கனவே தமிழக இயேசுசபையின் யூபிலி ஆண்டைக் கொண்டாடும் வகையில் "உளிகள் வடித்த துளிகள்" என்னும் நூலை வெளியிட்ட எம் பள்ளியின் வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் இஞ்ஞாசியார் மனம்மாறிய 500ஆவது ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் இந்நூலை வெளியிடுவதில் பெருமகிழ்வும் பெருமிதமும் அடைகிறேன். அனைவரும் இவ் வினா விடை நூலைப் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன்.

அன்புடன். ப வே அருட்பணி.பெ.ஆரோக்கிய சாமி சே.ச,

(தலைவர், வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம்)

தலைமையாசிரியர், தே பிரித்தோ மேனிலைப்பள்ளி, தேவகோட்டை.