அன்பான கத்தோலிக்க மக்களே ! நமக்கு எல்லாம் மறந்து விட்டதா?
புனிதமாக்கப்பட்டிருந்த உடன்படிக்கைப் பேழையை கடவுள் தங்கியிருந்த உடன்படிக்கை பேழையைத் தொடத்துணிந்த ஓசாவின் மேல் கடவுளின் சினம் மூண்டது. பேழையின் பக்கத்திலேயே அவன் விழுந்து இறந்தான் ( 2 சாமுவேல் 6 :7).
அடுத்ததாக கடவுள் கார்மேல் மூலம் சீனாய் மலையில் இறங்கினார். (யாத்திராகமம்19: 10-15). அதில் மோயிசன் மூலமாக மக்களிடம் கடவுள் சொல்லிய சுத்தச்சடங்குகள் எத்தனை.. எத்தனை.. அதில் 15-ம் வசனத்தையும் சேர்த்து படியுங்கள். அத்தனை சுத்தப்படுத்தலையும் சொல்லிவிட்டு யாரும் சீனாய் மலையைத் தொடதுணிய வேண்டாம் என்றும். எல்லைக் கல்லைத் தாண்டி யாரும் வரவேண்டாம் என்றும் கண்டிப்பாட கட்டளையிட்டார்...
மேலே சொல்லப்பட்ட இரண்டு சம்பவங்களும் எல்லாருக்கும் நன்கு தெரிந்தவையே.. இரண்டிலும் கடவுளின் பிரசன்னம், கடவுள் தங்கியிருந்ததையும் பார்க்கிறோம். அதில் 16-ம் வசனத்திலிருந்து பார்த்துக்கொண்டே வரும்போது மோயிசனோடு ஆண்டவர் திருமுன்னிலையில் வர குருக்களுக்கு மட்டும் அதிகாரம் இருந்ததைப் பார்க்க முடிகிறது (19: 22). மக்களுக்கு எல்லைக் கல். குருக்களுக்கு ஆண்டவர் திருமுன்னிலை..
அன்றிலிருந்து இன்றுவரை அதையேதான் கடவுள் செய்கிறார்.. அதற்காகத்தானே கடவுள் குருத்துவத்தைப் படைத்தார்.. பழைய ஏற்பாட்டில் குருக்கள்.. புதிய ஏற்பாட்டில் ஆண்டவர் ஏற்படுத்திய குருக்கள், குருத்துவம், திவ்யபலி பூசை குருக்களுக்கு மட்டுமே ஆண்டவர் வழங்கிய உரிமை, அதிகாரம்.. ஆண்டவர் இயேசு பெரிய தலைமைக்குரு, சீடர்கள் குருக்கள்.. அதன் தொடர்ச்சியாக வந்த குருக்கள்.. நாம் கண்ணில் காணும் குருக்கள் எல்லாம் அவர்களின் வழித்தோன்றலகள். . நம் இயேசு என்னும் பெரிய தலைமைக்குருக்களைப் பிரதிபலிப்பவர்கள்..
குருக்கள் வாழ்க ! தேவ அழைத்தல்கள் வாழ்க !
எப்படிப்பார்த்தாலும் மூவொரு கடவுள் நேற்றும் இன்றும் என்றும் மாறாத கடவுளாகவே இருக்கிறார். அதனால்தான் அவர் பழைய ஏற்பாடு தொடங்கி புதிய ஏற்பாடுவரை அவருக்காக பணி செய்ய.. அவரை நெருங்க.. புதிய ஏற்பாட்டில் அவரைத் தொட உரிமை.. அதிகாரம் எல்லாம் குருக்கள்… குருக்களுக்கு மட்டுமே…
நேற்றும், இன்றும், என்றும் மாறாத கடவுள் மட்டும் அப்படியே இருக்கிறார்..
நாம் மட்டும் எல்லாவற்றிலும் மாற்றம், இஷ்ட்டம்போல, சமரசம், விட்டுக்கொடுத்தல் என்று.. ஏதேதோ.. செய்கிறோம்.. அதற்கு எதேதோ காரணங்களைத் தேடுகிறோம்.. சொல்கிறோம்..
உடன்படிக்கை பேழையில் எழுந்தருளிய.. சீனாய் மலையில் இறங்கிய அதே கடவுளின் வல்லமைதான்.. வார்த்தையாகி இருந்து மனுவுருவாகிய இயேசு கிறிஸ்து சுவாமிக்குள்ளும்.. அதாவது திவ்ய நற்கருணை நாதருக்குள்ளும் இருக்கிறது..மறைந்திருக்கிறது.. என்பதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது.
அவராலும் அணைக்கவும் முடியும், அடிக்கவும் முடியும் ஏன் இடியைப்போல் இடிக்கவும்.. அடித்து நொறுக்கவும் முடியும்..
அன்பான கத்தோலிக்க மக்களே ! நமக்கு எதுவுமே மறக்க கூடாது.. எல்லாம் சாதாரணம் அல்ல.. எல்லாவற்றிலும் சமரசம் செய்ய முடியாது கூடாது..
நம் குழந்தைகளை வேண்டுமானால் குருக்களாக்கலாம்.. நாம் ஒருபோதும் குருக்களாக முடியாது..
ஆண்டவரை சர்வசாதாரனமாக கரங்களில் தொடுவது.. நொட்டாங்கையில் தொடுவது.. என்று பயபக்தியில்லாமல் நடந்து கொள்வது நல்லதல்ல. முதலில் நம்முடைய தகுதியைப் பார்க்க வேண்டும்.. யோசிக்க வேண்டும்.. சிந்திக்க வேண்டும்..
“ஆதியிலே வார்த்தை இருந்தார்: அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார், அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்.
அவர் ஆதியிலே கடவுளோடு இருந்தார்.
அவர்வழியாகவே அனைத்தும் உண்டாயின; உண்டானதெதுவும் அவராலேயன்றி உண்டாகவில்லை.
வார்த்தை உலகில் இருந்தார்; அவர்வழியாகத்தான் உலகம் உண்டானது; உலகமோ அவரை அறிந்துகொள்ளவில்லை.
தமக்குரிய இடத்திற்கு வந்தார்; அவருக்குரியவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. (அருளப்பர் 1 : 1-3, 10-11)
ஆம் உலகம் இன்னும் அப்படித்தான் அவரை அவரை அறிந்துகொள்ளாமல் ஏற்றுக்கொள்ளாமல்தான் இருக்கிறது..
“ஆனால், அவர் தமது பெயரிலே விசுவாசம் வைத்துத் தம்மை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் கடவுளின் மக்களாகும் உரிமை அளித்தார்.
வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.” (அருளப்பர் 1: 12 & 14).
அதுவும் திவ்ய நற்கருணை ஆண்டவராக.. இன்னும் அவரை அறிந்துகொள்ளாமல்… நம்பாமல்தான் இருக்கப் போகிறோமா? சிந்திப்போம்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !