Super & Suprime Boss is our God only.
உலகை ஆட்சி செய்வது எந்த வல்லரசும் அல்ல. அந்த வல்லரசுகளின் அதிபர்களும் அல்ல. தங்களை வல்லரசுகள் என்று கூறிக்கொண்டு உண்மையான சுய நலமான காரணத்தை மறைத்துக் கொண்டு வேறு பொதுக்காரணங்களை சொல்லிக்கொண்டு எத்தனை சிறிய நாடுகளை ஆயுதங்களாலும், குண்டுகளாலும் அச்சுருத்தி பிடித்து நசுக்கி என்னவெல்லாமோ செய்தன.
தங்கள் நாடுகள்தான் வல்லரசுகளாக வேண்டும் என்று அடுத்த நாட்டில் மூக்கை நுழைத்து அந்த நாடுகளை முன்னேற விடாமல் மறைமுகமாக தடுத்துள்ளன..
இப்போது என்னவானது.. எல்லாவற்றுக்கும் ஒரு அளவு உண்டு.. மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும்.. அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவனானும் அவனை நேசிக்க வேண்டும்.. தன்னைத்தானே நேசிப்பது போல பிறரையும் நேசி என்றார். அதற்கு முன்னதாக “ எப்போதுமே நான்தான் பெரியவன் “ என்ற தலைக்கணம் யாருக்கும் வரக்கூடாது என்று என்ன சொன்னார். எல்லாவற்றிக்கும் மேலாக கடவுளை நேசிப்பது என்றார். ஆனால் மனிதர்களும் வல்லரசுகளும் கடவுளையும் நேசிக்கவில்லை.. மனிதனையும் நேசிக்கவில்லை.. தன் நாடு... தன் மக்கள் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும். இந்த எண்ணம் தவறானது அல்ல என்றாலும். நான் வாழ அடுத்தவனை சாகடிக்கனும் என்ற எண்ணம் எத்தனை பெரிய அபத்தம். எத்தனை பெரிய பாதகச் செயல் அதை எத்தனை வல்லரசுகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் நாடுகள் செய்தன..
எத்தனையோ நாடுகள் பொருளாரத்தில் பின் தங்கியுள்ள.. மக்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பசியால் சாகிறார்கள்.. ஆப்ரிக்கா நாடுகள் ( உ.ம் சோமாலியா) அவர்களைப் போன்றவர்களுக்கு உதவ சக்தியிருந்தும் அவர்களுக்கு உதவாமல்.. நான் செவ்வாய்க்கு ராக்கெட் விடுவேன்; நிலாவுக்கு ராக்கெட் விடுவேன், புதனில் நீர் இருக்கிறதா என்று ஆராட்சி செய்வேன்.. நான் அந்த ஏவுகனை, இந்த ஏவுகனை அனுகுண்டு எல்லாம் தயாரிப்பதில் ஆயிரக்கணக்கன மில்லியன் கோடிகளை செலவழிப்பேன்.. ஆனால் பக்கத்து நாடு கஷ்ட்டப்பட்டால் உதவி செய்ய மாட்டேன்..
உலகம் முழுவதும் பணக்கார நாடுகள் உள்ளது.. பணக்காரர்கள் இருக்கிறார்கள்.. பணம் இருக்கிறது... பங்களா இருக்கிறது கார் இருக்கிறது.. வசதி சொகுசு எல்லாம் இருக்கிறது.. ஆனால் அவர்கள் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறது. கலாச்சாரம் எப்படி இருக்கிறது, வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது.. ஒழுங்காக இருக்கிறதா? ஒழுக்கம் நிறைந்ததாக இருக்கிறதா? இதோடு நம் நாட்டையும் கூட சேர்த்துக்கொள்வோம்.. எங்கும் ஒழுக்கக் கேடு.. நேர்மையின்மை... துரோகம்..அராஜகம்.. பணத்தால் எல்லாம் செய்யலாம்... எதுவும் செய்யாலாம்.. ஊர் உலகம் பணத்திற்கும்.. உல்லாச வாழ்க்கைக்கும் அடிமையாகிவிட்டது..
உலகப்போர் வரும் சூழ்நிலை கூட ஏற்பட்டது .. எல்லாருக்கும் என்ன நினைப்பு என்றால் நான்தான் பெரியவன் நான் வைத்ததுதான் சட்டம்.. இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் கூட என்ன நடந்துகொண்டிருந்தது..
இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது.. மனிதனை மனிதன் நேசிக்காததால் தனிமை... இடைவெளி... உள்ளத்தில் கடைபிடித்ததை ஊரறிய கடைபிடிக்கவைத்துவிட்டார்.. கெட்டு குட்டிச்சுவராகி நரகம் போவதைவிட மோட்சமோ உத்தரிக்கும் ஸ்தலமோ வந்து சேர்ந்துவிடு என்று முடிவு செய்து விட்டார்..
பெரிய பெரிய நாடுகளெல்லாம் எல்லாருக்கும் பெரியவரான கடவுளை காப்பாற்ற அழைக்கிறது.. தான்தான் பெரியவன் என்று நினைத்தவர்கள் எல்லாம் நம்மை விட ஒரு பெரியவர் இருக்கிறார் என்று நினைக்கத் துவங்கிவிட்டனர்.
சமுதாய சீரழிவுகள் ஆண்-ஆண், பெண்-பெண், ஆண் துணை இல்லாமல் கருத்தரிப்பு, குளோனிங் படைப்புகள், அபார்ஷன் செய்வதற்கு உரிமை கேட்டு போராட்டம், சமுதாய வலைத்தலங்களை பயன்படுத்தி குடும்ப கட்டுக்கோப்பு சீரழிவு, விபச்சாரம், இன்னும் எத்தனையோ தீமைகளின் கூடாரமாக உலகம் மாறிக்கொண்டிருந்த போது..
நம் வேதாகத்தில் வரும் பணக்காரன் “ களஞ்சியத்தை இடித்துப் பெரிசாக்குவேன்..அங்கு என் உடமை கோதுமை எல்லாம் சேர்த்து வைத்து நெஞ்சே ! பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு வேண்டிய பொருள் உனக்கு ஏராளமாய் உள்ளது. உண்டு குடித்து விருந்தாடு என்று சொல்லிக்கொள்வேன் “ என்று சொல்லிய பணக்காரனுக்கு “ முட்டாப்பயலே ! இன்றிரவே உன் உயிரை வாங்கப்போகிறார்கள்.. நீ தேடி வைத்தது யாருக்கு கிடைக்குமோ?” என்றார் ( லூக்காஸ் 12: 16-21).
இதுதானே நடந்தது.. நீ உயிரோடு இருந்தால்தானே பாவம் செய்வாய்... பாவம் செய்ய திட்டமிடுவாய்.. இப்போது உயிரைப்பற்றிய பயத்தோடு வாழ்.. என்று சொல்லிவிட்டார்.. எல்லாக் களியாட்டங்களுக்கும் ஒரு வழியாக மூடு விழா நடத்திவிட்டார்..
இப்போது நாம் கடவுளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால்தான் உயிர் பிழைக்க முடியும்...
எது வல்லரசு... யார் பெரியவர் என்றார்.. மோட்சமே வல்லரசு கடவுளே பெரியவர்... அவரே உலகத்தின் தலைவர்..அவரால் மட்டுமே உலகைக் காப்பாற்ற முடியும்.. அன்று இஸ்ராயேல் மக்களுக்கு செய்த வல்ல செயல்களை இப்போதும் அவரால் மட்டுமே செய்ய முடியும்.. அனைவரையும் ஆண்டவரை நோக்கி திரும்ப வைத்துவிட்டார்.. அவர் நினைத்தால் இந்த உலகத்தை ஒரு நொடியில் இல்லாமல் போக செய்ய முடியும் என்று நிரூபித்துவிட்டார்..
நாமே... உன்.. கடவுள்.. அவர் நம் தந்தையாகவும் இருக்கிறார்... அரசன் முதல் ஆண்டி வரை நம் பரிசுத்த கடவுளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு ‘இனிமேல் இப்பேற்பட்ட பாவங்களை செய்வதில்லை என்று உறுதியான பிரதிக்கினை செய்கிறேன் ‘ என்று நாம் மன்றாடினால் நாம் உயிர் பிழைப்போம்... அவர் ஊதினால்தான் இந்த வைரஸ் உலகை விட்டு வெளியேறும்..
எல்லாரும் நம்மை படைத்த பிதாவின் பாதத்தில் முகம் குப்புற விழுந்து சரணாகதி ஆவதுதான் ஒரே வழி.. இப்போது நமக்கு தேவையான ஒரே வரப்பிரசாதம் பாவசங்கீர்த்தனம் மட்டும்தான்.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !