மாதாவிற்கு ஏன் இவ்வல்லமை? யார் கொடுத்தது? ஏன் கொடுக்கப்பட்டது? மாதாவின் குரலுக்கு விண்ணகத்தில் ஏன் எதுவுமே மறுக்கப்படுவதில்லை.. மாதா அப்படி என்ன செய்துவிட்டார்கள்…
எல்லாவற்றுக்கும் ஒரே விடை : மாதா கடவுளின் தாயானார்கள். கடவுள் எந்த கஷ்ட்டமும் படாமல், தொந்தரவும் இல்லாமல் அகில உலகத்தைப் படைத்திருந்தாலும் ஒரு சிறு குழந்தையாக மாதாவின் வயிற்றில் வந்து அடங்கிவிட்டார். சந்தோசமாக சரண்டராகிவிட்டார். வளரும் போதும், வளர்ந்த பின்பும் சிலுவை வரை தன் தாயின் நேசத்தில் அரவனைப்பில் சுதந்திரமாக, சந்தோசமாக இருந்தார். கடவுளுக்கு மாதா எந்த கஷ்ட்டமும் எப்போதும் கொடுத்ததில்லை. இறைத்திட்டத்திற்கு முழுவதும் ஒத்துழைத்தார்கள்.. பிரிய மகனையும் தன்னோடு வைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.. நேரம் வரவில்லை என்று சொன்னபோதும் நேரம் உனக்கு வந்துவிட்டது மகனே என்று சொல்லி இந்த தரணிக்கு தாரை வார்க்கவும் தயங்கவில்லை..
மகன் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார்..
தாய் கடவுளிடம் எப்படி வாங்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்..
எல்லாவற்றிக்கும் மேலாக விசுவாசத்தின் தாயாக இருந்தார்கள்.. மாதா ஒருவர்தான் தன் மகன் கடவுள் என்று கடைசிவரை விசுவசித்தார்கள்.. ஆண்டவரோடு வாழ்ந்த சீடர்கள் ஓடிப்போனார்கள்… பெண் சீடர்கள் வாசனைத்திரவியங்களோடு கல்லறைக்கு சென்றார்கள். மாதா ஒருவர் மட்டும்தான் தன் மகன் சொன்னபடி உயிர்தெழுவான் என்று அவருக்காக காத்திருந்தார்கள்…
மாதாவை அடித்துக்கொள்ள எந்த பெரிய சம்மனசுக்கள் கூட இல்லை…பெரிய புனிதர்களும் இல்லை.. மாதாவுக்கு நிகர் மாதாதான்.. ஒரு பழத்தைக் கொடுத்து ஏவாள் பாவத்தை வரவழைத்தாள்… மாதா இன்னொரு பழத்தைக் கொடுத்து நம்மை வாழ வைக்கிறார்கள்.. உயிர் வாழ்வோர் அனைவருக்கும் தாயாக இருந்த ஏவாள் தன் தகுதி இழந்ததால் உயிர் வாழ்வோர் எல்லாருக்கும் தாயாக மாதா வந்தார்கள் தகுதி பெற்றார்கள்.. நாம் இழந்த மோட்சத்தை நமக்கு திருப்பித் தந்தார்கள்.. பொறாமையோடு பாவத்தைக் கொண்டுவந்து நம்மை மோட்சத்திற்கும் போகவிடாமல் நம்மை எப்படியவது சிக்க வைத்து நரகம் கொண்ட் போகத்துடிக்கும் சாத்தானை எதிர்த்து நிற்கும் தளபதியாக (ஆதி 3:15) அவர் பிள்ளைகளுக்காக.. அவரகளை மோட்சம் கொண்டுபோய் சேர்க்க எதிரியோடு போர் புரிகிறார்கள்.. புரியாத அவள் பிள்ளைகள் தங்கள் தாய்க்கு ஜெபமாலை சொல்லி சக்தியளிக்காமல்..
டிவிக்கும், போதைக்கும், இந்த உலகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு தாயைத் தவிக்க விடுகிறார்கள்.. அவன் சிரிக்கிறான்.. தாய் அழுகிறார்கள்..
மாதாவின் தூய்மை; கீழ்படிதல்; அர்ப்பணம் ; கடவுளின் திட்டத்திற்கு முழுவதும் ஒத்துழைத்தார்கள்.. கடவுளின் பிரமாணிக்கத்திற்கு 100 சாட்சியாய் இருந்தார்கள். பிதாவின் பிரிய மகளாக, சுதனின் தாயாக, பரிசுத்த ஆவியின் கன்னிமை குன்றா பத்தினியாக இருக்கும்போது இத்தகைய வல்லமையை கடவுள் கொடுக்கமாட்டாரா என்ன?
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !