அதற்குண்டான நேரம் வந்துவிட்டது.. ஆம்.. சாட்சி சொல்ல நேரம் வந்துவிட்டது.. நம் விசுவாசத்தைக் காத்துக் கொள்ள நேரம் வந்துவிட்டது. அங்கொன்றும், இங்கொன்றும் நம் அருகிலேயே பார்த்தவற்றை அனைவரும் செய்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் நேரம் வந்திருக்கிறது. எதிரிக்கு ஒரே வேலைதான். கத்தோலிக்கர்களை விசுவாசத்தை மறுதலிக்க செய்ய வேண்டும். அதற்காக அவன் எதை வேண்டுமானாலும் பயன்படுத்துவான்… யாரை வேண்டுமானாலும் பயன்படுத்துவான். இப்போது அவன் கொரோனோ வைரஸை பயன்படுத்தி நம் கத்தோலிக்க ஆயர்களை வைத்தே அறிக்கை விட வைக்கிறான்… பயம்.. பயம்… நோய்க்கு பயம்… உயிருக்கு பயம்… அதனால் உண்மையான கத்தோலிக்க விசுவாசத்தில் நடுக்கம்… அசைவு…
நீங்கள் கரங்களில் கொடுத்தாலும் நாங்கள் வாங்க மாட்டோம்… என்ன செய்வீர்கள்… நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.. நாம் வழக்கம் போல் திருவிருந்து பவனிக்கு செல்வோம்… முழங்காலில் இருப்போம். நாக்கை நீட்டுவோம்.. கொடுத்தால் வாங்குவோம்… இல்லையென்றால் ஆண்டவரை வாங்காமல் திரும்பி விடுவோம்.. அவமானம் நமக்கல்ல அது கொடுக்க மறுத்தவருக்குத்தான். அருகில் இருந்தவர் கரங்களில் வாங்கினால் வாங்கட்டும்… நமக்கு மறுக்கப்பட்டால் அது அவமானம் அல்ல. அதை நீங்கள் அவமானமாக நினைத்தால்ம் அந்த அவமானத்தை நம் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்போம்.. இதுவும் வேத சாட்சியம்தான். ஆண்டவருக்கு நாம் கொடுக்கும் விசுவாச சாட்சியம்.. கொடுக்கும் கரங்களில் நோய் பரவும் என்று அவர்கள் நினைத்தாலும் வாங்கும் நாவில் வருபவம் எங்கள் கடவுள் அவர் நோயைப் பரப்புவர் அல்ல. குணமாக்குபவர் என்று நாம் சாட்சியாய் வாழ்வோம்…
எத்தனை முறை மக்களுக்கு கொடுக்க வந்துவிட்டு மொத்த நற்கருணையோடு குருவானவர்கள் திரும்பி செல்வார்கள்.. சென்றாலும் செல்லட்டும்.. நாம் ஒருக் காலும் விசுவாச மறுதலிப்பு அணியில் சேரக் கூடாது. இந்த மாதிரி சமையத்தில் நம் ஆயர்கள் இப்பேர்பட்ட முடிவை எடுக்காமல் இருந்தால் கத்தோலிக்க கிறிஸ்தவத்திற்கு இதை விட ஆண்டவரை அறிக்கை விட சாட்சி சொல்ல வாய்ப்பு கிடைக்காது. அனைவரையும் நம்மைப் பார்த்து வியக்க வைத்திருக்கும். கிறிஸ்தவம் வளரும் கிறிஸ்துவை அனைவரும் ஏற்றுக்கொள்ள இது நல்ல வாய்ப்பாக இருந்திருக்கும். அவர்களுக்கு அந்த வாய்ப்பு நழுவிப்போகிறது..
நாம் ஏன் இந்த வாய்ப்பை விட வேண்டும்… உங்களுக்கு விசுவாசமில்லை என்றால் அதை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக எங்கள் விசுவாசத்தை நாங்கள் இழக்க தயாராக இல்லை.. எங்களுக்கு விசுவாசம் இருக்கிறது.. எங்கள் உயிர் ஒருவேளை போனாலும் கவலை இல்லை.
திவ்ய நற்கருணை விசுவாசம் மறுக்கப்பட்டால் அதை விட பெரிய ஆபத்து இல்லை… திவ்ய நற்கருணை ஆண்டவராலும், ஜெபமாலையாலும் கொரோவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். ஆனால் திவ்ய நற்கருணை நாதர் மறுதலிக்கப்பட்டால் கொரோவை விட பெரிய வைரஸ் வரும்.. ஏன் பூகம்பம் கூட வரும்…
கொரோனை கை கழுவி… அதாவது ஆண்டவரை கை கழுவி உங்களைப் பாதுக்காக்க முயற்சி செய்கிறீர்கள்… பூகம்பம் வந்தால் என்ன செய்வீர்கள்.. பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் சுனாமி வந்தது.. அதைப் போல் பூகம்பமே வராது என்று சொல்லும் ஊர்களிலும் பூகம்பம் வரும்…
ஆனால் அப்போது ஆண்டவர் நம்மைக் காப்பாற்ற மாட்டார்… நம் விசுவாசத்தையையே காப்பாற்ற முடியாத நம்மை ஆண்டவர் எப்படிக் காப்பாற்றுவார்…
இப்போதும் சரி… எப்போதும் சரி… எங்கு ஓடினாலும்…உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும்… ஏன் செத்தாலும் கடைசியில் ஆண்டவர் முன் தான் நாம் போய் நிற்க வேண்டும் என்பதை யாரும் மறக்கக் கூடாது…
கத்தோலிக் திருச்சபை முதல் மூன்று நூற்றாண்டுகள் வேத கலாபனையில்தான் வளர்ந்தது… கிட்டத்தட்ட 60 லட்சம் கிறிஸ்தவர்கள் வேத சாட்சிகளாக் மாறித்தான் திருச்சபையை வளர்த்தார்கள்… நாமும் வேதசாட்சிகளாக மாறுவோம்… ஆனால் அப்போது கிறிஸ்தவர்களைக் கொன்றவர்கள் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள்…
நாம் நம்முடைய கத்தோலிக்க விசுவாசத்தைக் காத்துக்கொள்வோம்.. கரங்களில் வாங்காமல்… நாம் ஆண்டவருக்காக உண்ணாவிரதம் இருப்போம்… ஆண்டவரை உண்ணாதிருப்பதும் உண்ணாவிரதம்தானே… ஆண்டவருக்கே நம் மேல் கருணை வந்து ஏதாவது செய்வார்…
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !