கிறிஸ்தவர்களாகிய நாம் ஆண்டவருக்கு சாட்சியாய் வாழ வேண்டிய தருணம் இது… பயந்து ஓட வேண்டிய தருணம் அல்ல…
நாம் பத்தோடு சேர்ந்து பதினொன்று அல்ல… நாம் தணித்துவம் மிக்கவர்கள்.. உண்மைக் கடவுளை வழிபடுவர்கள்.. உயிருள்ள கடவுளை வழிபடுபவர்கள்… சொல் ஒன்று செயல் ஒன்று அல்ல.. செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம்.. ஆண்டவரை பறைசாற்ற நம் கடவுளை உலகெமெங்கும் அறிக்கையிட இதை விட பெரிய சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காது… ஆண்டவருக்கு சாட்சி சொல்ல கத்தோலிக்க திருச்சபைக்கு மட்டுமல்ல ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்கும் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பு மற்றும் அழைப்பு…
“ திருப்பலி என்றால் என்ன… திவ்ய நற்கருணை யார்… திவ்ய நற்கருணை எத்தகைய அற்புதங்கள் செய்யும்… ஜெபமாலை எத்தகைய அற்புதங்களை செய்துள்ளது… ( இரண்டாம் உலகப்போரில் அனுகுண்டு வீசப்பட்டபோது ஆலயத்தில் ஜெபமாலை சொல்லிக்கொண்டிருந்த ஏழு இயேசு சபைக்குருக்களுக்கு அனுகுண்டின் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனுகுண்டால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.. அவர்களை பரிசோதனை செய்த நாஸ்தீக டாக்டர்களாலும் அந்த அற்புதத்திய ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை).
விசுவாசத்தை அறிக்கையிடவேண்டிய நாமே உயிருக்கு பயந்து பதுங்கலாமா?
“ ஆண்டவர் நம்மை அனைத்து தீங்கிருந்தும் காப்பாற்றுவார் ஆனால் கோவிலுக்கு வராதீர்கள்… திவ்ய நற்கருணை நாதரை கரங்களில்தான் கொடுப்போம்… அந்த தியானம் ரத்து இந்த தியானம் ரத்து… வீட்டுக்குள்ளேயே இருங்கள்… வெளியே வராதீர்கள்…. “ எத்தகைய கோழைத்தனம் இதற்காகவா… நாம் அழைக்கப்பட்டோம்.. formality கிறிஸ்தவர்களா…. Formality வழிபாடுகளா?? உண்மை தேவனை… என்றும் வாழும் தேவனை.. எல்லாம் செய்த… எல்லாம் செய்கின்ற கடவுளை வழிபடுகிறவர்களா நாம்..?
முதல் முன்னூறு ஆண்டுகள் வேதக் கலாபனை நடந்த போது ஆதிக்கிறிஸ்தவர்கள் உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்திருந்தால் நாம் காலரை தூக்கிக் கொண்டு கிறிஸ்தவர்கள் என்று இப்போது சொல்ல முடியுமா?
மன்னனை பார்த்து பயந்தார்களா? கொடிய மரணத்தைப் பார்த்து பயந்தார்களா? கொதிக்கின்ற தார் எண்ணைக்கு பயந்தார்களா? வாளுக்கு பயந்தார்களா? சிங்கத்திற்கு பயந்தார்களா? நெருப்புக்கு பயந்தார்களா? பல வகையான கொடிய கொடூர வாதைகளுக்கு பயந்தார்களா? மொத்தத்தில் அவர்கள் உயிருக்கு பயந்தார்களா? அவர்கள் பயந்தது கடவுளுக்கு மட்டும்தான்… மேலும் உள்ளத்தில் இருந்தது நாம் எப்படியாவது மோட்சம் சேரவேண்டும்… முடிவில்லா வாழ்வு பெற வேண்டும் என்பதுதான்.. அன்று இரத்த ஆறு ஓடியது… அவர்கள் எதுக்கும் அஞ்சவில்லை… யாருக்கும் அஞ்சவில்லை..
அந்த இரத்த ஆற்றில் கட்டப்பட்ட திருச்சபை இப்போது பயந்து ஓடுகிறது.. மக்களையும் பயமூட்டுகிறது… ஆண்டவர் கேள்வி கேட்பார்.. கண்டிப்பாக கேட்பார்.. ஒவ்வொருவருவரையும் பார்த்து கேட்பார்..
“ ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களாய் உடலைல் கொல்லுவோருக்கு அஞ்சாதீர்கள் உடலையும், ஆன்மாவையும் நரகத்தில் தள்ள வல்லருக்கே அஞ்சுங்கள் “ என்றார்…மத்தேயு 10: 28 .
எல்லாம் வல்ல கடவுள் இஸ்ராயேல் மக்களுக்கு செய்த அற்புதங்கள் எத்தனை… வெட்டுக்கிளிகள், தவளைகள், கொள்ளை நோய்கள், தலைமகன்கள் பழிவாங்கப்படுதல், செங்கடலைப் பிளந்தது, பாறையிலிருந்து நீர் வரவழைத்தது… அதைப்போல் ஆண்டவர் செய்த அற்புதங்களையும் நினைவில் கொள்ளுங்கள் தொழு நோயாளியை குணமாக்கியது முதல் இறந்தவர்களை உயிரோடு எழுப்பியது முதல் எத்தனை அற்புதங்கள் செய்துள்ளாள் எல்லாம் மறந்து விட்டதா? உயிர்ப்பயம் ஒன்றே நம் கண்முன் நிற்கிறது என்றால் நன்றாக நினைவில் கொள்ளுங்கள் “ நாம் கிறிஸ்தவர்கள் அல்ல “ இதுதான் உண்மை.
கிறிஸ்தவர்கள் என்றால் உயிர்பயத்தை தூக்கி எறிந்துவிட்டு ஆண்டவருக்கு சாட்சி சொல்ல வரவேண்டும்..
ஒன்றும் இல்லாததிலிருந்து அனைத்தையும் உண்டாக்கிய கடவுளை மறந்து அவர் வல்லமையை மறந்து அவர் நம்மைக் காப்பாற்றுவார் என்பதை மறந்து ஓடி ஒளிந்து நாமும் பத்தோடு சேர்ந்து பதினொன்று என்று இருந்தால் நாம் கிறிஸ்தவளே அல்ல…
திவ்ய நற்கருணையும், திருச்ஜெபமாலையும் இருக்கும் போது ஏன் பயம்…? மாதாவின் மாசற்ற இருதயத்திடம் நம்மையும் நம் குடும்பத்தையும் ஒப்புக்கொடுப்போம்..
ஒன்றே ஒன்றுதான் நம் மூச்சாக இருக்க வேண்டும்…
“ தேவ பாதுகாப்பு, தேவ பராமரிப்பு, தேவ சித்தம் “ இவற்றிக்கு நம்மை கையளித்துவிட்டால்… நம்மிடம் பயம் என்பதே இருக்காது..
நாம் வெறும் உதட்டளவு கிறிஸ்தவர்களா.. அல்லது முழு உள்ளத்தோடும்.. முழு ஆன்மாவோடும், முழு வலிமையோடும் உயிருள்ள என்றும் நம்மை ஆட்சி செய்கின்ற உயிருள்ள உன்னத வல்லமையான கடவுளின் மக்களா?”
நம்மை நாமே கேள்வி கேட்போம்… நம் ஆண்டவருக்கு சாட்சி சொல்வோம்..
எந்த வேத கலாபனையிலும் ( இதுவும் வேத கலாபனைதான்) ஆண்டவரின் சாட்சிகளாக வாழ்வோம்..
இயேசுவுக்கு புகழ் ! மரியாயே வாழ்க !