கடவுளால் மட்டுமே இத்தீமையிலிருந்து நம்மைக் காப்பாற்ற முடியும் :
“ஏனெனில் கடவுளால் ஆகாததது ஒன்றுமில்லை “ – லூக்காஸ் 1:37
நாம் ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவோம். அவர் நம்மை அனைத்து தீமைகளிலிருந்தும் காப்பாற்றுவார்…
“என் பெயரால் நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன் “
“கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்; தேடுங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்…” மத்தேயு 7 :7
இதைபோல் பழைய ஏற்பாட்டிலும் சரி.. புதிய ஏற்பாட்டிலும் சரி.. எத்தனையோ நம்பிக்கையான வல்லமையான ஆறுதலான தேற்றலான வார்த்தைகள் நம் கடவுள் தந்துள்ளார்..
திடீரென்று ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது… ஒரு தீமை உலகையே சூழ்ந்துள்ளது.. அங்கு நடந்தது… இங்கு நடந்தது.. இப்போது நம் அருகில் நடக்கிறது… நாளை என்ன நடக்குமோ தெறியாது.. இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன ?
முதலில் நம் பரிசுத்த தேவனை முழுமையான விசுவசிக்க வேண்டும்… முழுமையாக நம்ப வேண்டும்.. “ எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என்று உதட்டில் பேசக்கூடாது… நமக்காக யாவையும் செய்து முடிப்பார் என்று உள்ளத்தில் விசுவசிக்க வேண்டும்…
ஆலயங்களை பூட்டி வைக்கக் கூடாது… எல்லாக் கதவுகளையும் திறந்து வைக்க வேண்டும்..
நற்கருணை ஆண்டவரை இறைமக்கள் அனைவரும் தேடிச்செல்ல வேண்டும்… கரங்களில் ஜெபமாலை எடுக்க வேண்டும்.. நேரே ஆலயத்திற்கு நற்கருணை ஆண்டவர் முன்பாக ஜெபமாலை ஜெபிக்க வேண்டும் ( முடிந்தவர்கள் முழங்காலில் நின்று)…
நற்கருணை ஆண்டவரும் நம் தேவமாதாவும்தான் நம் கதி …
நற்கருணை ஆண்டவர் முன்னால் ஜெபமாலை சொல்ல வேண்டிய நேரம் இது… கத்தோலிக்கர்கள் ஒன்று சேர்ந்து ஜெபமாலை ஜெபித்தால் இந்த வைரஸை உலகை விட்டே அனுப்பி விடலாம்..
ஆகையால் திவ்ய நற்கருணை ஆண்டவர் முன்னால் மண்டியிடுவோம்.. முடியாதவர்கள் வீட்டில் இருந்தாவாறே.. எங்கு இருக்கிறோமோ… அங்கு ஜெபமாலையைக் கையில் எடுப்போம்… ஜெபமாலை எத்தனையோ அற்புதங்களை…புதுமைகளை செய்கிறது… இக்கொடிய வைரஸிலிருந்து நம்மைக் காக்க திருப்பலிக்கு அடுத்தபடியாக இருக்கும் ஒரே ஆயுதம்… ஒரே பாதுகாப்பு கருவி..ஜெபமாலைதான்..
இந்த இக்கட்டான வேளையில் நம் அன்புத் தாயை கூவி அழைப்போம்…கடவுளுக்கு மட்டுமே தாயாக இருந்த மாதாவை.. சிலுவை அடியில் நம் ஆண்டவர் நம் எல்லோருக்கும் தாயாக கொடுத்துவிட்டார்..
இந்த வல்லமையுள்ள அம்மாவுக்கு தன் பிள்ளைகளை எப்படிக் காப்பாற்றுவது என்பது தெறியும் என்பதை விட எப்படியும் காப்பாற்றிவிடுவார் என்பது தெறியும் என்பதே உண்மை.. கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட ஞானத்திற்கு தெறியாததா? அந்த அன்புத்தாயை நோக்கி பிள்ளைகளாகிய நாம் கெஞ்சுவோம்…இறைஞ்சுவோம்..
இது முடங்க வேண்டிய நேரம் அல்ல ஜெபமாலை முழங்க வேண்டிய நேரம்.. கிறிஸ்தவன்(ள்) சும்மா இருக்க முடியாது… கூடாது… சோம்பேரியாக இருக்கக் கூடாது.. நாம் போர் வீரர்கள்.. எப்போதுமே போர்க்களத்தில்தான் இருக்க வேண்டும்… அதுவும் அலகைக்கு எதிராக போர் புரிந்து கொண்டே இருக்க வேண்டும்…
“என் ஓட்டத்தை முடித்து விட்டேன்.. “ என்று சொன்னார் புனித சின்னப்பர் ( பவுல்). அப்படியானால் அவர் கடவுளுக்காக வாழ் நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருந்தார்.. நம் அன்னைத் தெரசா 95 வயது வரை ஓடிக்கொண்டே இருந்தார்..
முடங்குதல் கிறிஸ்தவனுக்கு அழகு அல்ல… ஆண்டவருடைய பிள்ளைகள்… எப்போதும் சுறு சுறுப்பாக நன்மைக்காக… பிறருக்காக… நம் பரிசுத்த தேவனுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.. நம் கரங்கள் பரிசுத்த தமத்திருத்துவத்தை நோக்கி எப்போதும் குவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.. மக்களைத் தீமைகளிலிருந்து பாதுகாக்க, ஆன்மாக்களை இரட்சிக்க ஆண்டவர் இயேசுவோம், திருமாதாவும் இனைந்து செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்..
திவ்ய நற்கருணை ஆண்டவரே நம் தஞ்சம்.. ஜெபமாலையே…. நமக்கு ஜெயம்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !