ஆர்ஸின் பங்குக் குருவான அர்ச். வியான்னி அருளப்பர் தமது அவசரத் தேவைகளின்போது, இரத்தத்தாலும், காயங்களாலும் முழுவதுமாக மூடப்பட்ட நமது திவ்விய இரட்சகரை, மரியாயின் திருக்கரங்களின் வழியாக, நித்திய பிதாவுக்கு ஒப்புக்கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மிக விலையேறப்பெற்ற வரப்பிரசாதங் களைத் தவறாமல் பெற்றுக் கொள்வதற்கான வழி இது என்று அவர் கூறினார். இதற்காக பின்வரும் ஜெபத்தைப் பயன்படுத்தலாம். கப
வியாகுல மாதாவாகிய அர்ச். மரியாயே, உமது திருக் குமாரனின் திருமரணத்தின்போது நீர் அனுபவித்த சொல்லிலடங்காத கொடிய வாதைகளின் வழியாக, . . . (தேவையான வரத்தைக் குறிப்பிடவும்) என்னும் வரத்தை எனக்குப் பெற்றுத் தரும்படியாக, இரத்தத்தினாலும் காயங்களினாலும் முழுவதுமாய் மூடப்பட்ட உமது நேசப் பிரிய குமாரனை என் நிமித்தமாக நித்திய பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தருளும். ஆமென்.