இது தன் திருச்சுதனின் மரணத்தின்போது மாதா அனுபவித்த துன்பங்கள் அவர்களுடைய இருதயத்தைக் கிழித்து விட்டன.
இதனாலேயே நமதாண்டவர் அர்ச். மெற்றில்டா அம்மாளிடம் இவ்வாறு கூறினார்: “இருதயங்களில் எல்லாம் மகா பொறுமையுள்ள என் திருமாதாவின் இருதயத்தைத் துதித்து வணங்கு.
ஏனெனில் அந்த இருதயம் என் பாடுகள் மற்றும் மரணத்தின் போதும், அதன்பின் இந்த பயங்கரமுள்ள வாதைகளைப் பற்றி அவர்கள் நினைவுகூர்ந்த ஒவ்வொரு வேளையிலும் ஆயிரக்கணக்கான வாள்களால் ஊடுருவப்பட்டது.”
பரிசுத்த கன்னிகை தனது திவ்விய குமாரனின் மரணத் திற்குப் பின், தானும் மோட்சத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்ட அந்த பாக்கியமான நாள் வரையிலும், நமது ஆண்ட வரின் திருப்பாடுகள் திரும்பத் திரும்ப அவர்களுடைய மாசற்ற இருதயத்தில் புதுப்பிக்கப்பட்டன.
ஆகிர்தா மேரிக்கு வெளிப்படுத்தப்பட்டபடி, தன் திருமகனின் பரலோக ஆரோகணத்திற்குப் பிறகு, பாக்கியமான ஆன்மாக்கள் ஐந்து காய வரம் பெற்றுள்ளதுபோல, மாதாவும் ஒவ்வொரு வெள்ளியன்றும் விவரிக்க முடியாத வியாகுலத்தை அனுபவித்தார்கள்.
இத்தகைய எல்லா வியாகுலங்களையும், நம்மீது கொண்ட நேசத்திற்காக மாதா தாங்கிக் கொண் டார்கள்.