இந்த இக்கட்டான நேரத்தில் செய்யப்படும் ஈடில்லா சேவைகளுக்கு நன்றி சொல்வோம்.. அவர்களுக்காக அதிகமாக ஜெபிப்போம்…
1. மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டை கவனிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள், மெடிக்கலில் வேலை செய்வோர், இறந்தவர்களை உரிய இடத்தில் சேர்ப்போம் இன்னும் யாராவது விடப்பட்டிருந்தால் அவர்களுக்காகவும்,
2. காவல் துறையில் பணி புரியும் அனைத்து துறைக் காவலர்கள்..
3. சுகாதார மையத்தில் பணி புரியும் மேல் மட்ட அதிகாரிகள் முதல் கடைக்கோடி ஊழியர்கள் வரை
4. அரசுத்துறையினர் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர் முதல் கடைக் கோடி அரசாங்க ஊழியர்கள் வரை..
5. செய்தித் துறையில் பணி செய்யும் அத்தனை மீடியாக்காரர்கள் குறிப்பாக ஸ்பாட்டில் இருப்பவர்கள்..
6. இந்த நேரத்திலும் மக்களுக்கு பால், மளிகை, காய்கறி, உணவு மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவோருக்காகவும்,
7. உணவின்றி தவிக்கும் அன்றாட கூலி தொழிலாளர்களைத் தேடிச் சென்று உணவு வழங்குவோர்களுக்காகவும்,
8. ஆங்காங்கே ஊர் போய் சேர முடியாமல் தவிக்கும் தொழிலாளர்கள் குறிப்பாக வட இந்திய தொழிலாளர்களுக்கு போக்குவரத்து ஏற்படுத்திக்கொடுக்கும் அரசு துறையினர் மற்றும் தனியார் துறையினருக்கு,
9. தாராளமாக நிதி வழங்கும் தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்காகவும்
10. இதில் இல்லாமல் பல வேறு உதவிகளைச் செய்பவர்களுக்கும், இதில் விடுபட்டவர்களுக்கும்
நெஞ்சார்ந்த நன்றி சொல்வோம்; அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம்.. நாம் அவர்களுக்காக அதிகமாக ஜெபிப்போம். அவர்களுக்காக கடவுளின் உதவியைக் நாடுவோம். நம் ஜெபமாலையில் ஒரு பத்துமணிகளாவது ஒப்புக்கொடுப்போம்.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் மக்களின் சூழ்நிலையை ஒப்புக்கொடுத்து அவர்கள் சீக்கிரம் குணம் பெற் அதிகமாக ஜெபிப்போம்.. மேலும் இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்க ஜெபிப்போம்.. உலகனைத்திலும் இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் ஜெபிப்போம்..
விரைவில் கடவுளின் கோபம் தணிந்து இரக்கம் பிறக்கவும் உலகத்தில் உள்ள அத்தனை மக்களுக்கும் ஆன்ம சரீர நன்மைகள் கிடைக்க தொடர்ந்து ஜெபிப்போம்.. குறிப்பாக நம் நற்கருணை ஆண்டவரிடமும், நம் தாய் மரியிடம் ஜெபமாலையின் மூலமாகவும் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்…
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !