“மிகப்பயங்கரமான நோய்களும் மிகப்பெரிய நிகழ்வுகளும் நடக்கப்போகும் தருவாயில் சமூகம் இருக்கின்றது. இரும்புக்கோலால் ஆளப்படவும், கடவுளின் கோபமாகிய பாத்திரத்தைப் பருகவும் எதிர்பார்க்க வேண்டும்.”
“கடவுளுடைய வாளின் முதல் மின்னல் தாக்குதலிலே மலைகளும் எல்லா இயற்கையும் அச்சத்தால் நடு நடுங்கும் “
“ஒப்புமை எதுமில்லாத அளவு கடவுள் அடிப்பார். பூமியில் வாசம் பண்ணுகிறவர்களுக்கு ஐயோ கேடாம். கடவுள் தம் கோபத்தைத் தீர்த்துக்கொள்வார். ஒரே நேரத்தில் அத்தனை கேடுகளிலிருந்தும் தப்புவதற்கு யாருமிருக்க மாட்டார்கள் “
“என் மக்கள் எனக்குக் கட்டுப்பட்டு நடக்க விரும்பாவிட்டால், என் குமாரனின் கரங்களை நான் விட்டுவிட வேண்டி வரும். அவை எவ்வளவு பாரமாயிருந்து என்னை அழுத்துகின்றன என்றால் இனிமேலும் அவற்றை என்னால் தாங்கிப் பிடிக்க முடியவில்லை “
எப்போதும் முழு நேரமும் நான் உங்களுக்காகக் கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என் குமாரன் உங்களைக் கைவிட்டு விடாதிருக்க வேண்டுமானால், அதற்காக இடைவிடாமல் ஜெபிப்பதை என் பொறுப்பாக நான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. நீங்களோ இதைப் பற்றி சிந்திப்பதேயில்லை. உங்கள் சார்பாக நான் ஏற்றுக் கொண்டிருக்கிற கஷ்ட்டங்களுக்கு, உங்கள் ஜெபங்களோ செயல்பாடுகளோ ஒரு போதும் ஈடாகாது.
நீங்கள் உழைப்பதற்கு நான் 6 நாட்களை கொடுத்து 7-ம் நாளை எனக்கென வைத்துள்ளேன். அதை யாரும் எனக்குத் தர நினைக்கவில்லை. இதுவே என் குமாரனின் கரம் பாரமாய் இறங்கச் செய்கிறது.
“சர்வேசுவரனுடைய மக்களின் தலைவர்கள் ஜெபத்தையும், தவத்தையும் கைவிட்டார்கள். அவர்களுடைய மனங்களை பசாசு இருளச் செய்துள்ளது. பழைய பசாசு தன் வாளால் அழிவுக்கு இழுத்துச் செல்கிற அலையும் நட்சத்திரங்களாக அவர்கள் ஆகிவிட்டார்கள். எல்லா சமூகங்களிலும், எல்லாக் குடும்பங்களிலும், ஆட்சியாளர்கள் நடுவிலும் பிரிவினையை விதைக்க பழைய சர்ப்பத்திற்கு கடவுள் அனுமதியளிப்பார். கடவுள் மனிதர்களை அவர்கள் பாட்டிற்கே விட்டுவிடுவார். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக தண்டனைகளை ஒன்றுக்குப் பின் ஒன்றாக அனுப்புவார்.”
“உண்மையான விசுவாசம் அவிக்கப்பட்டு பொய்யான ஒளி உலகத்தில் வீசுகிறது “
“சர்வேசுவரனின் ஊழியத்தின் மட்டில் மொத்தமான தளர்ச்சியை எல்லா இடங்களிலும், எல்லா அம்சங்களிலும் இருளின் ஆவிகள் பரப்பும்.”
“உண்மை மதத்திலிருந்து தங்களைப் பிரித்துக் கொள்கிற ………., ………களின் தொகை பெரிதாக இருக்கும். அவர்களுள் …….. இருப்பார்கள்.
“…………………… ஏனென்றால், ஜனங்களுக்காக இரக்கத்தையும், மன்னிப்பையும் மன்றாடுவார் யாருமில்லை. தாராளமனமுள்ள ஆன்மாக்கள் யாருமில்லை. உலகத்தின் சார்பாக நித்தியருக்கு மறுவில்லாத பலிப்பொருளை ஒப்புக்கொடுக்கத் தகுதியுள்ளோர் இப்போது யாருமில்லை…”
“கடவுளின் புனித விசுவாசம் மறக்கப்பட, ஒவ்வொருவனும் தன்னையே வழிநடத்த விரும்புவான். தன் சக மனிதருக்கு மேலாக எழும்ப ஆசிப்பான். சமுதாய அதிகாரமும், திருச்சபை அதிகாரமும் அழிக்கப்படும். எல்லா ஒழுங்கும் நீதியும் காலின் மேல் மிதிக்கப்படும். கொலைகளும், பகையும், பொறாமையும், பொய்யும், முரன்பாடுமே காணப்படும். நாட்டுப்பற்றோ குடும்ப பாசமோ இராது. பரிசுத்த தந்தை அதிகம் துன்புறுவார். அவருடைய பலியை ஏற்றுக் கொள்ள நான் அவருடன் இறுதிவரைக்கும் இருப்பேன். “
“என் குமாரனின் பிரதிநிதி அதிக துன்பப்பட வேண்டியிருக்கும். ஏனென்றால் ஒரு காலத்திற்கு திருச்சபை பெரிய கலாபனைகளுக்குக் கையளிக்கப்படும். அது இருளின் நேரமாயிருக்கும். அது ஒரு பயங்கர நெருக்கிடையில் இருக்கும்
“கெட்டவர்கள் அவருடைய உயிர்மேல் அநேக முயற்சிகளைச் செய்வார்கள். அவருடைய நாட்களைக் குறைக்க அவர்களுக்கு முடியாது. ஆனால் அவரோ, அவருக்குப் பின் வருபவரோ கடவுளின் திருச்சபையின் வெற்றியைக் காணமாட்டார்கள்
“……….செல்வத்திற்கு மேல் செல்வத்தைக் குவிப்பதிலேயே ஈடுபட்டு அதோடு தங்கள் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொண்டு கர்வத்தால் அதட்டிக் கொண்டு திரிகிறவர்களுக்கு ஐயோ கேடு
“அற்புதங்களை செய்கிறவர்களைப் பற்றி பாப்பானவர் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். ஏனென்றால் பூமியிலும் ஆகாயத்திலும் மகா அதிசயமான ஆச்சரியங்கள் நடைபெறும் காலம் வந்துள்ளது “
எதற்காவது… யாருக்காவது நாம் காது கொடுக்கிறோமா?
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !