சலேத் மலையில் மாடு மேய்த்த மெலானி என்ற சிறுமிக்கும் மாக்ஸிமின் என்ற சிறுவனுக்கும் மாதா காட்சி தந்த முறையே வேறு! தன் மக்கள் கடவுளைப் புறக்கணித்தும், தன் அன்பையும் வார்த்தைகளையும் சட்டை பண்ணாமலும் இருப்பதைக் கண்டு, மாதா மனம் நொந்து அழுதபடியே காணப்பட்டார்கள். உயிருள்ள பாடுபட்ட சுரூபம் அவர்களின் கழுத்தில் தொங்கியது. அதிலே சேசு வேதனைப்பட்டார். தாம் நேசித்த மக்களின் அசட்டை துரோகங்களால் தன் திருக்குமாரன் படும் அவஸ்தையைத் தாங்க மாட்டாமல் மாதா கண்ணீர் சிந்தி அழுதார்கள். ஒரு தாயின் கண்ணீரும் அழுகையும் யாரையும் மனந்திருப்பும். -
"என் பிள்ளைகளே! உங்கள் பாவங்களை விட்டு விட்டு என் திருக்குமாரனை நேசியுங்கள்” என்று மாதாவின் கண்ணீர்கள் நம்மை அழைக்கின்றன. மாதாவின் வேதனை கண்டு தாங்காத சேசுவும் அந்தப் பாடுபட்ட சுரூபத்தில் இருந்தபடி: என் மக்களே! மாசற்ற என் தாயின் வேதனைகளையும், கண்ணீர்களையும், அழுகையையும் பாருங்கள். உங்கள் இரட்சண்யத்திற்காக நாங்கள் அனுபவிக்கிற வேதனைகள் உங்கள் இருதயங்களை இளக்கி மனந்திருப்பட்டும். பாவத்தை விடுங்கள். பரம பிதாவை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய நித்திய இரட்சண்யத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.
கண்ணீரின் விசேஷ காரணம்:
சலேத் காட்சியில் மாதா கண்ணீர் சிந்தியழுததின் விசேஷ காரணம், விசுவாசிகளின் பாவங்கள் மட்டுமல்ல, விசேஷமாக தேவ ஊழியர்களாக தங்களை அர்ப்பணித்துள்ள குருக்கள் கன்னியர்களின் பாவங்களும் ஆகும். தேவ ஊழியர்கள் எவ்வளவு பரிசுத்தமாயிருக்க வேண்டும் என்று சலேத் காட்சி எடுத்துக் கூறியது. அதிலே மாதா அருளிய இரகசியம் அதை மிகத் துல்லியமாகக் காட்டியது.
சலேத் மலை காட்சியில் மெலானியிடம் மாதா ஒரு பாவப் பரிகார துறவற மடம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்கள். அதாவது, சேசுவையும் மாதாவையும் நேசிப்பதற்காக மட்டுமே தங்களை அர்ப்பணிக்கிறவர்கள் சேர்ந்து வாழும் குடும்பம். அதற்கான ஒழுங்குகளையும் கொடுத்தார்கள். சலேத் காட்சியும் அற்புத சுரூப காட்சிகளைப் போல் பாப்பரசர்களால் முழு அங்கீகாரம் பெற்றிருந்தபோதிலும், அதை எதிர்த்த சில ஆயர்களாலும் குருக்களாலும் மாதா விரும்பிய பரிகார சபையின் ஒழுங்குகள் மறைக்கப்பட்டு விட்டன. அச்சபையும் இது வரையிலும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் நமதாண்டவரும் மாதாவும் மிகவும் வருந்தி அப்படிப்பட்ட நேசிக்கும் ஆன்மாக்களுக்காக இன்னும் காத்திருக்கிறார்கள். 200
சலேத் மாதாவின் செய்திகளில் ஒரு தீர்க்கதரிசன வாக்கியம் வருகிறது. இன்று திருச்சபையெங்கும் ஏற்பட் டுள்ள ஞானக் கலாபனையின் காரணம் அதில் காணப்படுகிறது: -
"உரோமாபுரி விசுவாசத்தை இழக்கும்; அது அந்திக் கிறீஸ்துவின் ஆசனம் ஆகும்!”
என்பதே அந்த வாக்கியம். எத்தகைய பயங்கர ஆபத்து இது!
இப்பெரும் ஆபத்தைத் தவிர்க்க மாதா திருச்சபையை ஜெபத்தாலும் தவத்தாலும் ஜெபமாலையாலும் ஆயத்தப்படுத்தினார்கள். லூர்துபதியில் லூர்து மாதாவாகக் காட்சி தந்து அதைச் செய்தார்கள்.