இரண்டாவது அம்சம்
22. எச்சரிக்கையைப் பற்றி உணர்ந்த பின்னர் இப்பொழுது நாம் அதனோடு இணைந்த நம் அன்னையின் வேண்டுகோளைப் பற்றி சிந்திப்போம். ஆபத்தைப் பற்றிய எந்த எச்சரிக்கையையும் தொடர்ந்து, அதிலிருந்து மீள வழியும் கூறப்படுவது இயயே மத்தியஸ்தம் செய்கிறார். அப்படியானால் கிறீஸ்துவிடமிருந்து பிரியாமல் கிறீஸ்துவுக்குள்ளேயே ஒரு குருவானவர் மத்தியஸ்தராக இருக்கிறார்! கிறீஸ்துவின் ஒரே மத்தியஸ்தர் தவிர கூடுதலாக மற்றொரு மத்தியஸ்தத்தை ஏற்படுத்தாமலே கிறீஸ்துவின் ஒப்பற்ற மத்தியஸ்தத்தின் வலிமையைக் கொண்டே குருவானவரும் மத்தியஸ்தராக இருக்கிறார்!! தனியாக இருந்தாலும் வேறாக இல்லாமல் பணிக் குருத்துவத்தையும், மற்ற தேவ திரவிய அனுமானங்களையும் நிறைவேற்றும் குருவானவர் கிறீஸ்துவுக்கும் மக்களுக்குமிடையில் மத்தியஸ்தராக இருக்கிறார்! ஆகையால் கிறீஸ்துவின் ஒரே மத்தியஸ்தத்திற்கு உட்பட்ட துணை மத்தியஸ்தர்கள் உண்டு என்பது சர்ச்சைக்குரிய விஷயமல்ல. துணை மத்தியஸ்தம் உண்டு என்பது ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய உண்மை ஆகும். ஒரே ஒரு மத்தியஸ்தர்தான் உண்டு என்பதும், மற்ற துணை மத்தியஸ்தர்கள் அவருடைய மத்தியஸ்தத்தின் செழிப்பில் பங்கு கொள்பவர்கள் என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மையாகும். ஆகவே கிறீஸ்துவின் ஒரே மத்தியஸ்தம் மரியாயின் மத்தியஸ்தத்தைத் தடுக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மாமரிதான் கிறீஸ்துவின் மத்தியஸ்தத்திற்கு அஸ்திவாரமும், பிறப்பிடமுமாக இருக்கிறார்கள். அதற்கு உணவூட்டும் உட்கரு மாமரியே. ஆகையால் ஒரே ஒரு மத்தியஸ்தரா அல்லது பல மத்தியஸ்தர்களா என்ற குழப்பத்திற்கு இடமே இல்லை. கிறீஸ்துவின் ஒரே மத்தியஸ்தத்திலிருந்து பெறப்படும் பல துணை மத்தியஸ்தங்கள் உள்ளன என அழுத்தம் திருத்தமாகக் கூறலாம். இவ்விதம், தனது திருக்குமாரனின் மத்தியஸ்தம் என்ற செல்வத்தை நமக்குக் கிடைக்கச் செய்யும் மத்தியஸ்தி மாமரி ஆவார்கள். தன்னிடத்தில் மாமிசமாகிய தேவ வார்த்தையான கிறீஸ்துவின் ஒப்பற்ற மத்தியஸ்த செல்வத்தை, நமக்குக் கிடைக்கச் செய்யும் ஒரே மத்தியஸ்தி மாதாவே ஆவார்கள். இந்த மத்தியஸ்தம் நமக்கு இவ்வன்னை விரும்பிய வகையில்தான் கிடைக்கும்.
2. பூர்த்தி செய்யும் பங்கு மாதாவுடையது (Complementary role of Mary)
24. நாம் நினைவில் கொள்ள வேண்டிய இன்னொரு கருத்து: தேவதாய் தன்னை கிறீஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையே காண்கிறார்கள் என்பதாகும். தேவ அன்னை எந்த விதத்திலும் பாப்பரசர், ஆயர்கள், மற்ற தேவதிரவிய அனுமானங்கள் ஆகிய திருச்சபையின் மத்தியஸ்தங்களைக் குறைக்கவில்லை. மாறாக திருச்சபையை மாதா நமக்குச் சுட்டிக் காட்டுகிறார்கள். மாதாவின் பாகம் பூர்த்தி செய்யும், அல்லது பூரணமாக்கும் செயல் ஆகும். ஆன்மாக்களின் இரட்சண்யத்திற்காக திருச்சபையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பற்பல ஆன்மீக நல அமைப்புகளுக்கு முழுமை அளிக்கக் கூடியவர்கள் மாதாதான். இதிலே திவ்விய நற்கருணைக்கு முதன்மையான மகிமையான ஸ்தானம் இருக்கிறது. பாத்திமாவிலும், லூர்து ஸ்தலத்திலும், வேறு எங்கு காட்சியளித்தாலும், நமது அன்னை முதற்காரியமாகச் செய்வது மக்களைத் திவ்விய நற்கருணையிடம் நடத்திச் செல்வதே.
25. இந்த இரண்டு கருத்துக்களின் அடிப்படையில் தான் “என்னால் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும்” என்ற நமது அன்னையின் வார்த்தைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தேவதாய் கிறீஸ்துவுக்குப் பதில் ஆளாக தன்னை வைக்கவில்லை. கிறீஸ்துவை விலக்கி விட்டு அவருடைய ஸ்தானத்தில் தன்னை வைத்துக் கொள்ளவுமில்லை. மேலும் திருச்சபையையும், அதன் தேவதிரவிய அனுமானங்களையும் அதற்குப் பதிலாகத் தன்னைக் கொண்டு வரவும் இல்லை. ஆனால் மாதா கூறுவதென்ன வெனில்: கிறீஸ்துநாதர் தமது வரப்பிரசாத வல்லமையை மரியாயின் மாசற்ற இருதயத்தின் வழியாக வெளிப்படுத்தச் சித்தங்கொண்டிருக்கிறார் என்பதே. மேலும் திருச்சபையானது தன்னை முழுவதும் மரியாயின் மாசற்ற இருதயத்திடம் ஒப்படைக்காவிட்டால், அதனுடைய அலுவலை நிறைவேற்ற முடியாது என்றும் கூறுகிறார்கள்.
பாத்திமா செய்தியின் இருதயம்:
சேசுகிறீஸ்து--மாமரி அன்னை --திருச்சபை
26. இந்த வரிசை முறைதான் பாத்திமா காட்சிகளின் இருதயமாகக் காட்டப்படுகிறது. ஆன்மாக்கள் இரட்சிக்கப்படுவதற்கும், உலக சமாதானத்திற்கும், தேவ மகிமைக்கும் ஏற்ற வழி இந்த வரிசை முறையேயாகும். முழு சுவிசேஷமும் இதுதான்: வேதசாஸ்திரத்தின் மிக நிச்சயமான போதனையும் இதுவே. இவ்வாறு பாத்திமா செய்தியின் இருதயமாக விளங்குவதும், மாதா கேட்டுள்ள அர்ப்பணத்தின்பேரிலும் நாம் கைக்கொள்ள வேண்டுமென மாதா விரும்பும் மாசற்ற இருதய பக்தியின் அடித்தளத்திலும், இன்று வெற்றிபெற வேண்டுமென கடவுள் விரும்பும் சத்தியமாகவும் காணப்படுவது: "மாதா சகல வரப்பிரசாதங்களுக்கும் மத்தியஸ்தி.” அதாவது "கன்னிமாமரி அனைத்திற்கும் மத்தியஸ்தியாக இருக்கிறார்கள்” என்பதே. இதையே சுருக்கமாக "மாமரி அகில உலகின் தாய்” எனக் கூறிவிடலாம். மத்தியஸ்தம் என்பதும், தாய்மை என்பதும் ஒரே உண்மைதான். கிறீஸ்து தம் உயிரை மரியாயின் வழியாகவே நமக்குக் கொடுக்கிறார். வேத சாஸ்திர நிபுணர்கள் இச்சத்தியத்தை வெளிக்கொணர உழைத்து வருகிறார்கள். "மரியாயின் அனைத்துலக மத்தியஸ்தம்” என்ற உண்மை தான் பாத்திமா செய்தியின் சாரம். இக்கருத்தோடு பாத்திமா குழந்தைகளிடம் மாதா பேசிய வார்த்தைகளைச் சிந்தித்தால், இந்த அசாதாரணமான உண்மை பளிச்சென்று புலப்படும்.