பொதுவாக, உங்கள் சுபாவம் தேவையற்ற விதமாக, உங்களிடம் கேட்பதை எப்படி மறுப்பது என்று அறிந்திருங்கள் எந்தக் காரணமுமின்றி உங்களுக்கு அது தர மறுப்பதை உங்களுக்குத் தரும்படி செய்வதெப்படி என்று அறிந்திருங்கள். உங்களை நீங்கள் பலவந்தப்படுத்துவதில் எவ்வளவுக்கு வெற்றி பெறுகிறீர்களோ, அந்த அளவுக்குத்தான் புண்ணியத்தில் நீங்கள் வளர்ச்சியடைவீர்கள் " என்று கிறீஸ்துநாதர் அநுசாரத்தின் ஆசிரியர் கூறுகிறார்.
கடவுளின் முன்னிலையில், அர்ச் சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதிய இந்த அழகான வார்த்தைகளை நமக்கு நாமே பொருத்திக் கூற நாம் உரிமையுள்ளவர்களாக இருக்கிறோம். "'நாங்கள் எவ்விதத்திலும் நெருக்கப்படுகிறோம்... சேசுவின் ஜீவியம் எங்கள் சரீரங்களில் தோன்றும்படி எங்கள் சரீரங்களைச் சுற்றிலும் சேசுவின் மரணப்பாடுகளைப் பதித்துக் கொண்டிருக்கிறோம்" (2கொரி.4:8-10)