விசுவாசப் பிரமாணம்

6. கிறீஸ்தவன் விசுவசிக்க வேண்டிய பிரதான வேத சத்தியங்கள் எதிலே அடங்கியிருக்கின்றன?

விசுவாசப் பிரமாணத்தில் சுருக்கமாயும், ஞான உபதேசத்தில் விரிவாயும் அடங்கியிருக்கின்றன.


1. விசுவாசப் பிரமாணம் என்றால் என்ன?

நாம் விசுவசிக்க வேண்டிய அநேக வேதசத்தியங்கள் சுருக்கமாய் அடங்கியிருக்கும் மந்திரம்.

2. “அநேகம்” என்று சொல்லுவது ஏன்?

ஏனெனில், விசுவாசப் பிரமாணத்தில் இல்லாத வேறு சத்தியங்களும் உண்டு.

3. ஞான உபதேசம் என்றால் என்ன?

ஞான உபதேசமாவது என்னவென்றால், கேள்வி மறுமொழியினால் வேதசத்தியங்களைக் கற்றுக் கொடுக்கும் எளிதான போதகமாம்.