இந்த இரண்டாவது வேதபோதகப் பயணத்தின் தொடக்கம் மாற்கு தொடர்பாக எழுந்த சற்று கடுமையான விவாதத்தால் குறித்துக் காட்டப்படுகிறது. இந்த முறை சின்னப்பர் மாற்குவை தமது பயணத் தோழராக ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். இதன் காரணமாக பர்னபாஸ் மாற்கோடு சைப்ரஸுக்குப் புறப்பட, சின்னப்பர் தம்மைப் போலவே ஒரு உரோமைக் குடிமகனாகவும், ஜெருசலேம் சபையில் ஒரு செல்வாக்குள்ள உறுப்பினராகவும் இருந்த சீலா அல்லது சில்வானுஸ் என்பவரைத் தேர்ந்து கொண்டார். அப்போஸ்தலிக்க பொதுச் சங்கத்தின் ஆணைகளை அந்தியோக்கியாவுக்குத் தருவதற்காக ஜெருசலேம் சபையால் அவர்கள் அங்கு அனுப்பப்பட்டார்கள். அதன்பின் அவர்கள் தார்சுஸிலிருந்து சிசிலிய வாயில்களையும், தார்சுஸின் ஒடுக்கமான மலையிடுக்கு களையும், லிக்காவோனியாவின் சமவெளிகளையும் கடந்து தெர்பேக்குப் போனார்கள். அவருடைய முதல் வேதபோதகப் பயணத்தின் போது ஸ்தாபிக்கப்பட்ட சபைகளுக்கு அவர்கள் மேற்கொண்ட விஜயங்கள், திமோத்தேயுவைத் தேர்ந்து கொண்டதைத் தவிர வேறு குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் எதுவும் இன்றிக் கழிந்தன. நம் அப்போஸ்தலர் லிஸ்திராவில் இருந்தபோது திமோத்தேயுவைத் தம்மோடு வரும்படி வற்புறுத்தினார். அந்த இடங்களில் ஏராளமாயிருந்த யூதர்களை எளிதாக அணுக வசதியாக திமோத்தேயுவுக்கு அவர் விருத்தசேதனம் செய்வித்தார்.
பிஸிதியாவின் அந்தியோக்கை அப்போஸ்தலருடைய நடபடியாகமம் குறிப்பிடவில்லை என்றாலும், இஸ்பிரீத்துசாந்துவானவரின் தலையீட்டினால், இந்த வேதபோதகப் பயணத் திட்டம் அநேகமாக இந்த நகரத்தில்தான் மாற்றப்பட்டது. வெறும் மூன்று நாள் பயணத்தால் மட்டுமே ஆசிய மாகாணத்தைப் பிரித்து வைத்திருந்த மியாண்டர் பள்ளத்தாக்கு வழியாக ஆசியாவுக்குள் பிரவேசிக்க சின்னப்பர் நினைத்திருந்தார். ஆனால் அவர்கள் ஆசியாவில் தேவ வார்த்தையைப் போதிக்காதபடி இஸ்பிரீத்துசாந்துவினால் தடுக்கப்பட்டு, பிரிஜியா, கலாத்திய நாடு ஆகியவற்றின் வழியாகக் கடந்து சென்றார்கள் (அப். 16:6). இந்த வார்த்தைகளுக்கு (மிeஐ ஸ்ரீஜுrதீஆஷ்ழிஐ வழிஷ் றூழியிழிமிஷ்வeஐ உஜுலிrழிஐ) வடக்குக் கலாத்தியர்கள் அல்லது தெற்குக் கலாத்தியர்கள் என்று நாம் பொருள் தருவதைப் பொறுத்து, இந்த வார்த்தைகள் வெவ்வேறு விதமாக அர்த்தப்படுத்தப்படுகின்றன (கலாத்திய நிருபம் காண்க.). இந்த வாதங்களுக்கு அடிப்படை ஆதாரம் எதுவாக இருந்தாலும், நம் வேதபோதகர்கள் முறையான விதத்தில் கலாத்தியா என்று அழைக்கப்படும் பகுதியில் அவர்கள் வடக்கு நோக்கிப் பயணம் செய்திருந்தார்கள். கலாத்திய நாட்டுக்கு பெஸ்ஸிமோந்த் தலைநகரமாயிருந்தது. அங்கே அவர்கள் வேதம் போதித்தார்களா இல்லையா என்பதுதான் கேள்விக்குறிதான். அங்கே போதிக்க அவர்கள் எண்ணவில்லை. ஆனாலும் ஏற்கெனவே அறியப்பட்டுள்ளது போல, சின்னப்பர் நோய்வாய்ப்பட்டார் என்ற ஒரு எதிர்பாராத காரணத்தினாலேயே கலாத்தியருக்கு வேதம் போதிக்கப்பட்டது (கலாத். 4:13). இது வடக்குப் பகுதியிலுள்ள கலாத்தியருக்கு மிக நன்றாகப் பொருந்துகிறது. எது எப்படியிருந்தாலும் நம் வேதபோதகர்கள் மீசியாவின் மேட்டுப் பகுதியை அடைந்து (வழிமிழி னிதீவிஷ்ழிஐ) தங்களுக்கு முன் இருந்த செழிப்புள்ள பிரதேசமாகிய பித்தினியாவுக்குள் நுழைய எத்தனித்தார்கள். ஆனால் இஸ்பிரீத்து சாந்துவானவர் அவர்களைத் தடுத்து விட்டார் (அப். 16:7). ஆகவே, அவர்கள் போதிக்கும்படி (ஸ்ரீழிreயிமிஜுலிஐமிeவி) அங்கு தங்காமல் மீசியா வழியாகக் கடந்து சென்று துரோவாவின் அலெக்சாந்திரியாவை அடைந்தார்கள். அங்கே தன் நாட்டுக்கு வந்து, அதற்கு உதவும்படி தங்களை ஒரு மக்கதோனியன் அழைப்பதாக அவர்கள் கண்ட காட்சியின் மூலம் கடவுளின் சித்தம் மீண்டும் அவர்களுக்கு வெளிப் படுத்தப்பட்டது (அப். 16:9-10).
ஐரோப்பிய மண்ணில், தொடக்கத்திலிருந்து தாம் பயன்படுத்தி வந்த போதக முறையை சின்னப்பர் தொடர்ந்து கடைப்பிடித்தார். தம்மால் முடிந்தவரை, அவர் எப்போதும் ஒரு நாட்டின் தலைநகரத்து மக்களை மனந்திருப்புவதில்தான் அவர் குறியாயிருந்தார். அங்கிருந்து இரண்டாந்தர பட்டணங்களுக்கும், நாட்டுப்புறப் பிரதேசங்களுக்கும் விசுவாசம் எளிதாகப் பரவும் என்று அவர் நம்பினார். எங்கெல்லாம் யூதர்களின் ஜெப ஆலயங்கள் இருந்தனவோ, அங்கெல்லாம் அவர் தம் பயணத்தை நிறுத்தி, தம் போதனையைக் கேட்க சம்மதித்த யூதர்களுக்கும், யூத மதத்திற்கு மனந்திரும் பியவர்களுக்கும் போதித்தார். யூதர்களுடன் விளையும் தகராறு சரிசெய்யப்பட முடியாத அளவுக்குப் போகும் போது--எப்படியும் கொஞ்ச காலத்தில் இத்தகைய தகராறுகள் எப்போதும் நிகழ்ந்தன--அவர் தம் புதுக்கிறீஸ்தவர்களைக் கருவாகக் கொண்டு ஒரு புதுச் சபையை ஸ்தாபித்தார். பொதுவாக யூதர்களின் சதிமானங்களால் தூண்டப்பட்ட கலாபனை ஒரு குறிப்பிட்ட நகரத்திலிருந்து புறப்படும்படி கட்டாயப்படுத்தும் வரை, அவர் அதே நகரத்தில் தங்கியிருந்தார். ஆனாலும், இந்தத் திட்டத்தில் மாறுபாடுகள் இருந்தன. ஜெப ஆலயம் எதுவும் இல்லாதிருந்த பிலிப்பியில், முதல் வேதபோதனை ப்ரோஸ்யூச் என்னும் பேருள்ள ஒரு திறப்பான ஜெப ஸ்தலத்தில் நடந்தது. ஒரு கலாபனையைத் தூண்ட புறஜாதியார் இந்தப் போதகத்தை ஒரு காரணமாக்கிக் கொண்டார்கள். சின்னப்பரும், சீலாவும் பொது ஒழுங்கிற்கு சேதம் விளைவிப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, மிலாறுகளால் அடிக்கப்பட்டு, சிறைப் படுத்தப்பட்டு, இறுதியாக நாடுகடத்தப்பட்டார்கள். ஆனாலும் பிலிப்பியிலிருந்து வெளியேறிய பிறகு, தெசலோனிக்காவுக்கும், பெரேயாவுக்கும் அவர்கள் வெற்றிகரமாகப் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே அவர்கள் அநேகமாக அவர்கள் திட்டமிட்டிருந்தபடியே காரியங்கள் நிகழத் தொடங்கின.
ஏதென்ஸ் அப்போஸ்தலப் பணி மற்றவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இங்கே யூதர்களோ, ஜெப ஆலயமோ அவர்களுக்குப் பிரச்சினையாக இருக்கவில்லை. சின்னப்பர் தம் வழக்கத்துக்கு மாறாக, அங்கு தனியாயிருந்தார் (1 தெச. 3:1). இங்கேயிருந்த அரையொப்பாகு என்ற சங்கத்தில் அவர் விசேஷமான தயாரிப்போடு உரையாற்றினார். இதன் சுருக்கம், அதன் வகைக்கு ஒரு மாதிரியாக, அப். 17:23-31 வேதாகமப் பகுதியால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த முறை கலாபனையால் துரத்தப்படாமல், இந்த நகரத்தை விட்டு அவர் தாமாகவே வெளியேறினார் என்று தோன்றுகிறது. மறுபுறத்தில் அவர் கொரிந்துவில் தமக்கேயுரிய முறையில் போதித்தார். சின்னப்பர் ஒவ்வொரு சாபத் ஓய்வு நாளன்றும் ஜெப ஆலயத்தில் போதித்து வந்தார். யூதர்களின் வன்மையான எதிர்ப்பு அங்கே நுழைய முடியாமல் அவரைத் தடுத்த போது, அவர் ஜெப ஆலயத்தை அடுத்திருந்த தீத்து யுஸ்துஸ் என்னும் பெயருள்ள ஒரு யூத மதத்தைத் தழுவிய ஒருவரின் சொத்தான ஒரு வீட்டுக்குப் போனார். இந்த முறையில் அவர் பதினெட்டு மாதங்கள் தம் அப்போஸ்தல அலுவலைத் தொடர்ந்தார். இக்கால கட்டத்தில் யூதர்கள் வீணான முறையில் அவரை எதிர்த்து நின்றார்கள். சாதகமாக இல்லாவிட்டாலும், பாரபட்சமானதாக இருந்த ஆளுனனாகிய கால்லியோவின் மனநிலையின் காரணமாக அவரால் அவர்களை எதிர்த்து நிற்க முடிந்தது. இறுதியாக, அநேகமாக ஓர் ஆபத்து வேளையில் செய்து கொள்ளப்பட்ட ஒரு பொருத்தனையை நிறைவேற்றும்படி அவர் ஜெருசலேமுக்குத் திரும்பிச் செல்ல முடிவு செய்தார். ஜெருசலேமிலிருந்து, தமது வழக்கப்படி அவர் அந்தியோக்கிற்குத் திரும்பினார். கொரிந்துவில் அவர் தங்கியிருந்த தொடக்க மாதங்களின் போது தெசலோனிக்கேயர்களுக்கு அவர் எழுதிய இரண்டு நிருபங்களும் எழுதப்பட்டன. இந்த நிருபங்களின் சந்தர்ப்பம், சூழ்நிலைகள், மற்றும் நுண்ணிய ஆராய்ச்சிகளை அறிய தெசலோனிக்கேயருக்கு எழுதப்பட்ட நிருபங்கள் காண்க.