1) ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் முழுப் பூசை காண்கிறது.
2) : வருத்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்கிறது.
3) : பாஸ்குக் காலத்தில் பாவ சங்கீர்த்தனம் செய்து, தேவநற்கருணை உட்கொள்கிறது.
4) : வெள்ளிக் கிழமை முதலிய சுத்த போசன நாட்களில் சுத்த போசனமும், ஒரு சந்தி நாட்களில் ஒருசந்தியும் அனுசரிக்கிறது.
5): விலக்கப்பட்ட காலத்திலும், குறைந்த வயதிலும் விக்கினமுள்ள உறவு முறையாரோடு கலியாணஞ் செய்யாதிருக்கிறது.
6) : நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்கிறது.
சட்டங்கள் இயற்றுவதற்குத் திருச்சபைக்கு அதிகாரம் உண்டு என்பதால், அவற்றுக்குக் கீழ்ப்படிய அதன் உறுப்பினர்களுக்குத் தீவிர கடமையுண்டு. திருச்சபையின் கட்டளை ஒன்றுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பது சாவான பாவம். “உங்களை நிந்திக்கிறவன் என்னை நிந்திக்கிறான்” என்று நம் திவ்ய ஆண்டவர் அறிவித்திருக்கிறார். அவரே மீளவும், “அவன் திருச்சபைக்கு காதுகொடா விட்டால், அவன் உனக்கு அஞ்ஞானியைப் போலவும், ஆயக்காரனைப் போலவும் இருக்கக் கடவான்” என்றும் மொழிந்திருக்கிறார்.