மனிதனுடைய கதி என்ன?
மனிதன் சர்வேசுரனால் படைக்கப்பட்டிருப்பதால், அவரை விட வேறு கதி மனிதனுக்கு இல்லை.
37. சர்வேசுரன் மனுஷர்களை எதற்காக உண்டாக்கினார்?
தம்மை அறிந்து சிநேகித்துச் சேவிக்கவும், அதனால் மோட்சத்தை அடையவும் உண்டாக்கினார்.
1. சர்வேசுரனை அறிகிறது என்பதற்கு அர்த்தமென்ன?
அவரது சுபாவத்தையும், இலட்சணங்களையும், மனித னின் இரட்சிப்பு, போன்ற வேத சத்தியங்களையும் அறிவதுதான்.
2. மனிதன் சர்வேசுரனை எப்படி அறியலாம்?
அவரே மனிதருக்கு அறிவித்திருக்கிற சத்தியங்களைக் கொண்டு அவரை அறியலாம்.
3. சர்வேசுரன் வேத சத்தியங்களை யாருக்கு அறிவித்திருக் கிறார்?
(1) முதன்முதல் ஆதித்தாய் தகப்பனுக்கும்,
(2) முற்காலத்திலிருந்த பிதாப்பிதாக்கள், தீர்க்க தரிசிகள் முதலிய புண்ணியவான்களுக்கும்,
(3) கடைசியாய் மனுஷாவதாரம் எடுத்த தமது ஏக சுதன் மூலமாய் அப்போஸ்தலர்களுக்கும் அவைகளையெல்லாம் அறிவித்திருக்கிறார்.
4. சுவாமி அறிவித்திருக்கிற சத்தியங்களை நாம் எப்படி அறியலாம்?
திருச்சபையின் வழியாய் அவைகளை அறியலாம்.
5. சர்வேசுரனைச் சிநேகிக்கிறது என்றால் என்ன?
பணத்தையும், பேர் கீர்த்தியையும், சுகத்தையும் விட அவரைப் பெரிதாக எண்ணுவதும், மதிப்பதும், மற்றதெல்லாம் போனாலும் போகட்டும், சுவாமியைக் கைவிடமாட்டேன் என்று மனதாயிருக்கிறதும் ஆகிய இவைகள் சுவாமியைச் சிநேகிக்கிற தென்று சொல்லப்படும்.
6. எப்படிச் சர்வேசுரனைச் சிநேகிக்க வேண்டும்?
அவர்மேல் நேசம் கொண்டு, அவரை மனநோகப் பண்ணக் கூடிய யாவையும் விலக்கி, அவருக்குப் பிரியப்பட்ட எதையும் தேடுவதினால் அவரைச் சிநேகிக்க வேண்டும்.
7. சர்வேசுரனை நாம் சிநேகிக்க வேண்டும் என்பதற்கு காரண மென்ன?
சர்வேசுரன் தம்மிலே அளவில்லாத நல்லவராயிருப் பதாலும், அவர் கடமை ஒன்றுமில்லாமல், நம்மேல் வைத்த அளவில்லாத நேசத்தைப் பற்றி நம்மை ஒன்றுமில்லாமையிலிருந்து உண்டாக்கிக் காப்பாற்றுவதாலும், அவருடைய ஏக சுதன் மனிதாவதாரம் செய்து சகலவித துன்ப துரிதங்களுக்கும் உள்ளாகி, கடினமான பாடுபட்டு மரித்ததாலும், நாம் அவரைச் சிநேகிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
8. சர்வேசுரனை சேவிக்கிறது என்றால் அர்த்தமென்ன?
சர்வேசுரனுக்குப் பயந்து, அவரை ஆராதித்து வணங்கி, நமக்குத் தேவையானதை அவரிடம் மன்றாடி, அவருடைய கட்டளைகளை அனுசரித்து அவருடைய சித்தத்தின் படி நடந்து வருவதே அவரைச் சேவிப்பதாகும்.
9. சர்வேசுரனை அறிவதும், சிநேகிப்பதும், சேவிப்பதும் ஆகிய இம்மூன்றையும் அனுசரித்து நடந்தால் என்ன சம்பாவனை கிடைக்கும்?
இவ்விதம் நடப்போமேயாகில் நமக்கு நித்திய பேரின்ப மோட்ச பாக்கியம் கிடைக்கும்.