1. உங்கள் அயலானின் குறைகளை கல்வியில் குறைபாடு, மனக்குறைபாடு, குணத்தில் குறைபாடு ஆகியவற்றைப் பொறுத்துக் கொள்ளுங்கள். உங்களை எரிச்சல் படுத்துகிற அவனுடைய நடையுடை பாவனை, அவனது உடலின் இருத்தல் நிலை, அவனுடைய குரலின் தொனி, உச்சரிக்கும் விதம் அல்லது வேறு எதுவானாலும் அதைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
2. எல்லோரிலும், எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளுங்கள். இறுதி வரையும், ஒரு கிறீஸ்தவ உணர்வோடும் அதை சகித்துக் கொள்ளுங்கள். இன்னானோடு நான் என்ன செய்வது? அவன் சொல்வது என்னை எப்படிப் பாதிக்கிறது? எந்த சிருஷ்டியினுடையவும், குறிப்பாக அந்த மனிதனுடையவும் பாசத்திற்கோ, கருணைக்கோ, அல்லது மரியாதையுள்ள பணிவிற்கோகூட எனக்கு என்ன தேவையிருக்கிறது? என்று ஒருவன் சொல்லும்படி செய்கிற அந்தப் பெருமையுள்ள பொறுமையோடு ஒருபோதும் இராதீர்கள். இந்த அகம்பாவமுள்ள கவலையற்ற தன்மையைவிட, இந்த நிந்தையான அலட்சிய மனநிலையைவிட, கடவுளின் சித்தத்திற்குக் குறைவான இணக்கமுள்ளது வேறெதுவுமில்லை. அது உண்மையில் பொறுமையற்றதனத்தைவிட அதிக மோசமானது.
3. கோபமாயிருக்கும்படி சோதிக்கப்படுகிறீர்களோ? சேசுவின் நேசத்திற்காக, சாந்தமாயிருங்கள்
4 பழிக்குப்பழி வாங்கும்படி சோதிக்கப்படுகிறீர்களா? தீமைக்குப் பதிலாக நன்மை செய்யுங்கள், அர்ச் தெரேசம்மாளின் இருதயத்தைத் தொடுவதற்கான மாபெரும் இரகசியம் அவளுக்கு ஏதாவது ஒரு தீமையைச் செய்வதுதான் என்று சொல்லப்படுகிறது.
யாரையாவது கோபத்தோடு பார்க்கும்படி சோதிக்கப்படுகிறீர்களா? நல்ல சுபாவத்தோடு அவனை நோக்கிப் புன்னகை புரியுங்கள்.
அவனைச் சந்திப்பதைத் தவிர்க்கும்படி சோதிக்கப்படுகிறீர்களா? மன உவப்போடு அவனைத் தேடுங்கள்.
அவனைப் பற்றி மோசமாகப் பேசும்படி சோதிக்கப்படுகிறீர்களா? அவனைப் பற்றி நல்ல விதமாகப் பேசுங்கள்.
அவனிடம் கடுமையாகப் பேசும்படி சோதிக்கப்படுகிறீர்களா? மிகுந்த மென்மையோடும், இதமாகவும் அவனிடம் பேசுங்கள்
உங்கள் தோழர்களை, விசேஷமாக, சுபாவமாக, மிகக் கூடுதலாக உங்கள் பொறாமைக்குரியவர்களாக இருப்பவர்களையும் புகழ்ந்து பேசுங்கள்.
5. பிறர் சிநேகத்திற்கு எதிரான சாதூர்யப் பேச்சை விலக்குங்கள்
6. உங்கள் முன் இருக்கிற யாராவது மற்றவர்களைப் பற்றி முறையற்ற விதமாகப் பேசும் உரிமையை எடுத்துக் கொண்டால், அல்லது, யாராவது ஒருவன் தன் அயலானின் நற்பெயரைக் கெடுக்கக்கூடிய உரையாடல்களில் ஈடுபடுகிறான் என்றால். சில சமயங்களில் அப்படிப் பேசுபவனை நீங்கள் மென்மையாகக் கடிந்து கொள்ளலாம். அல்லது மிக அடிக்கடி, திறமையாக அந்தப் பேச்சைத் திசைதிருப்பி விடுவது, அல்லது துயரமான சமிக்ஞை, அல்லது வேண்டுமென்றே கவனமில்லாதிருத்தல் ஆகியவற்றைக் கொண்டு, சொல்லப்படுகிற காரியம் உங்களுக்கு வெறுப்பூட்டுகிறது என்பதைக் குறிப்பாகக் காட்டுவது அதிக நல்லதாயிருக்கும்.
7. ஒரு சிறு ஊழியத்தைச் செய்ய நீங்கள் ஒரு பெரும் முயற்சி செய்ய வேண்டியிருந்தால், அதைச் செய்ய உங்களையே ஒப்புக்கொடுங்கள். இரு மடங்கு பேறுபலன்களைப் பெற்றுக் கொள்வீர்கள்.
8. உங்கள் சொந்தக் கண்களிலோ, மற்றவர்களின் கண்களிலோ ஒரு பலிப்பொருளாகத் தோன்றுவதை ஒரு பயங்கர உணர்வோடு தவிர்த்துவிடுங்கள் உங்கள் சுமைகளை அதீதமாக்கிக் காட்டுவது உங்களிடமிருந்து தொலைவாயிருப்பதாக அவற்றை பாரமற்றவையாகக் காணப்பாடுபடுங்கள். உண்மையில் மிக அடிக்கடி, தங்கள் தோற்றத்திற்கு மாறாக, அவை பாரமற்றவையாகத்தான் இருக்கின்றன. நீங்கள் அதிகப் புண்ணியமுள்ளவர்களாக இருந்தால், அவை எப்போதுமே அப்படித்தான் இருக்கும்.