“ அந்நாட்களில் அவர் ஜெபிக்கும்படி மலைக்குச் சென்று, கடவுளை வேண்டுவதில் இரவெல்லாம் கழித்தார்” லூக்காஸ் 6 : 12
“ அவர் பகலிலோ கோயிலில் போதிப்பார். இரவிலோ ஒலிவத்தோப்பு மலைக்குச் போய் வெட்டவெளியில் தங்குவார்” லூக்காஸ் 21 : 37
தவம் ஏன் நமக்குத் தேவை?
ஆண்டவரும் சர்வேசுவரனுமான கடவுளுக்கே தவம் ஏன் தேவைப்பட்டது என்றும் பார்த்தோம்..
முதலில்..
பிசாசை ஜெயிக்க நமக்குத் கட்டாயம் தவம் தேவை..
அவன் நம்மை பாவத்தில் தள்ள நிறைய சந்தர்ப்ப சூழ்நிலைகளை நமக்கு அமைத்துக் கொடுப்பான்..
நம்மை மோசம் போகச் செய்வதுதான் அவர் ஒரே வேலை..
அவன் எப்போதும் அவன் சகாக்களான நரகக் கூலிகளோடும், நரகக்கண்ணிகளோடும்தான் (வலை) நம்மை சுற்றி அலைவான் என்கிறது பரிசுத்த வேதாகமம்.
“ உங்கள் எதிரியாகிய அலகை, கர்ஜிக்கும் சிங்கம் போல யாரை விழுங்கலாமனெத் தேடித்திரிகிறது” 1 இராயப்பர் 5: 8
“ நம் கடவுளின் முன்னிலையில் இரவும் பகலும் அவர்களைக் குற்றம் சாட்டியவன் ஒழிந்தான் “ திருவெளிப்பாடு 12 : 10
ஆதியாகமம் முதல் திருவெளிப்பாடு வரை பார்த்தால் அவனுடைய வேலை ஒன்றே ஒன்றுதான்..
ஆன்மாக்களை நரகத்திற்கு கூட்டிச் செல்வது.. அதற்காக அவன் நம் வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்வான்.. நம் வாழ்க்கையின் இறுதி நொடிவரை..
கடவுளின் சாயலும், பாவனையுமாக படைக்கப்பட்ட நம்மை கடவுளுக்கு எதிராக பாவத்தால் துரோகம் செய்ய வைத்து நம்மை நரகத்தில் தள்ளி கடவுளைப் பழிவாங்குவதுதான் அவன் வேலை..
நாம் எவ்வளவு ஸ்டாங்காக இருந்தாலும் எப்போதாவது.. ஏன் ஒரு சில நொடிகளாவது நாம் பலவீனமாக இருப்போம்.. அப்போதுதான் அவன் அந்த நேரத்தை அவன் சாதகமாக பயன்படுத்தி நம்மை வீழ்த்துவான்..
எல்லாருக்குமே வாழ்க்கையில் ஒரு பலவீனமான தருணம், பகுதி கடந்து போகும்..
இப்போதும் நாம் பார்க்கலாம்.. எவ்வளவோ நல்லவர்கள், தலை சிறந்தவர்கள் என்று நினைக்கப்பட்டவர்கள் கூட ஒரு நேரத்தில் விழுந்து… வீழ்ந்து.. அழிந்து போவதை நாம் பார்க்கிறோம்..
அது பணமாக இருக்கலாம், சொத்துசுகங்களாக இருக்கலாம், சுகபோகங்கலாக இருக்கலாம், போதை வஸ்துக்கலாக இருக்கலாம், பெருமை புகழ்ச்சியாக இருக்கலாம், இனக்கவர்ச்சி பலவீனமாக இருக்கலாம்..
அதே போல எதிர்மறையான சூழ்நிலைகளும் உண்டு..
வறுமை, பசி-பட்டினி, கடன் தொல்லை, மற்றவர் தொல்லை, அமைதியில்லாத சூழல், பிரச்சனைகள், நோய் நொடிகள், மனக் கவலை, இழப்பு இதுபோன்றவைகளும் உண்டு..
சுக போக போதைகள், இல்லாமைககள் இரண்டுமே பலவீனமான தருணங்கள்தான்..
இதுபோன்ற சோதனைகளை ஜெயிப்பதற்குத்தான் தவங்கள் தேவைப்படுகிறது..
அதோடு ஜெபங்களும், பரிகாரங்களும் சேர்ந்து..
குறைந்தது மாதம் ஒருமுறையாவது தவம் இருக்கவேண்டும்..
மாதத்தின் தலைவெள்ளி அன்றாவது ஒருசந்தி-சுத்தபோசனம் கடைப்பிடிக்க வேண்டும்..
இதுபோன்ற நாட்களையும், மேலும் நமக்கு பலம் சேர்க்க தவக்காலத்தையும் நம் தாய்திருச்சபை நமக்காக வைத்துள்ளது..
சுருக்கமாக தவம் நமக்கு ஏன் தேவையென்றால் முதலில் பிசாசை ஜெயிக்கவும், அப்புறம் கடவுளோடு இணைந்து ஒரு ஐக்கிய வாழ்க்கை வாழவும் தவம் கண்டிப்பாக தேவை..
வாழ்க்கையில் தவம் செய்யாதவர்கள் இப்போது எத்தகைய உயர்ந்த அருள் நிலையில் இருந்தாலும், ஆன்மீகத்தில் மிகப்பெரிய அளவில் முன்னெறியிருந்தாலும், மிகப்பெரிய போதகர்களாக வாழ்ந்தாலும், ஏன் இப்போது புனிதர்களாக வாழ்ந்தாலும் கூட தவம் இல்லையென்றால் அவர்கள் வீழ்வது உறுதி..
இதையும் ட்புள் அண்டர்லைன் செய்து கொள்க..
தவம் இல்லாத வாழ்க்கை.. சமதளமில்லாத பாதையில் அல்லது சறுக்கு நிறைந்த பாதையில் நாம் நடப்பதற்கு சமம்..
எதுவெல்லாம் தவம்..?
மேலே உள்ள ஆண்டவர் குறித்த இரண்டு இறைவசனங்களிலும் தவம் இருக்கிறது..
அந்த சிந்தனைகளோடு கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..
நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக !
பரிசுத்த ஆவியானவர் போற்றி !
சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !
மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !