அந்தோணியார் கடல் ஓரத்திலே நின்று மீன்களை பார்த்து ஓ பாக்கியம் பெற்ற மீன்களே கடவுளின் வார்த்தை களை கேட்க வாருங்கள் என்று சொன்னார். சிறுது நேரத்தில் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை வரிசையாக நின்று அந்தோணியார் சொல்லுவதை கேட்டு கொண்டு இருந்தன.பிரசங்கம் முடிந்த பிறகு அவைகளுக்கு அவர் ஆசீர் வழங்கி அவைகளை அனுப்பி விட்டார்.
2.தேவ நற்கருணையை கழுதை வணங்குதல்
ஒரு முறை பதிதன் ஒருவன் அந்தோணியாரிடம் வந்து திவ்ய நற்கருணையில் சேசுநாதர் இல்லை என்று வாதித்தான். அவன் அந்தோணியாரிடம் ஒரு போட்டி வைத்தான். தான் ஒரு கழுதையை மூன்று நாள் உணவு எதுவும் கொடுக்காமல் பட்டிணி போடுவேன். மூன்றவது நாள் நான் கழுதையை தெருவில் நிறுத்தி அதற்கு முன் நான் புல்லு மற்றும் தண்ணிர் வைப்பேன். நீர் நற்கருணையை கொண்டுவாரும். கழுதை முதலில் புல்லு திண்றால் நற்கருணையில் சேசுநாதர் இல்லை என்று அர்த்தம். மாறாக நற்கருணை முன் வணங்கினால் நான் ஒரு கிறிஸ்தவனாக மாறுவேன். என்றான். அதற்கு அந்தோணியார் சம்மதித்தார்.
மூன்று நாட்களுக்கு பிறகு அந்த வீதியில் மக்கள் பலர் கூடினர். அதில் கிறிஸ்தவர்களும் பதிதர்களும் இருந்தனர். கழுதை கொண்டு வரப்பட்டது அதற்கு முன் புல் போடப்பட்டது. அந்தோணியார் கையில் திவ்ய நற்கருணையுடன் பவணியாக வந்தார். என்ன ஆச்சரியம் மூன்று நாள் பசியாக இருந்த கழுதை தனக்கு முன் வைக்க பட்டு இருந்த புல்லு கட்டுகளை பாராமல் அந்தோணியார் வரும் திசையை நோக்கி முன்னங்கால்களை மடக்கி திவ்ய நற்கருணையை ஆராதித்தது. அந்த பதிதனும் மனம் திரும்பினான்.
3. விஷம் சாப்பிடுதல்
அந்தோணியார் செய்கிற அற்புதங்களை பார்த்த Rimini நாட்டு பதிதர்கள் அந்தோணியாரை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று முடிவு செய்தனர். எனவே அவர்கள் அவரை கொலை செய்ய திட்டம் போட்டனர். முடிவில் அவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்ய முடிவு செய்தனர். அந்தோணியார் அந்த வழியாக செல்லும் போது அவர்கள் அவரை நல்லவர்கள் போல் தங்களுடன் உணவு அருந்த அழைத்தனர். அனால் ஆண்டவர் அவருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்திருப்பதை அவருக்கு தெரியப்படுத்தினார். அந்தோணியாரும் ஒன்றும் தெரியாதது போல அவர்களுன் உணவு அருந்த சென்றார்.
ஆனால் உணவு அருந்தும் முன் அவர்களிடம் உணவில் விஷம் இருப்பதை அவர்களிடம் சொன்னார். ஆனால் அவர்கள் அவரை பார்த்து ஏளனமாக சிரித்தனர். அந்தோணியார் அவர்களுக்கு ஆண்டவருடைய வாக்கியத்தை அவர்களுக்கு நினைவு படுத்தினார். "என்னை பின்செல்கிறவர்கள் யாரவது கொடிய விஷத்தை குடித்தாலும் அவர்களை அது ஒன்றும் செய்யாது"
அப்போம் நீர் இதை குடித்து உமக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் நாங்கள் சேசுவை நம்புவோம் என்று பதில் அளித்தனர். அவர் அவர்கள் முன்பாக அந்த உணவை சிலுவை அடையலாம் அறைந்து பின் சாப்பிட்டார். அந்த விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. அங்கு இருந்தவர்கள் அனைவரும் மனம் திரும்பி நல்ல கிறிஸ்தவர்களாக வாழ ஆரம்பித்தனர்.