அமல உற்பவியின் உதயம்...
கடவுள் மனிதனின் காவியத்திலிருந்து..
“பிறக்கும் முன்னே பலிப்பொருள்”
"பிறக்கும் முன்னே தாய் "
“ பிறக்கும் முன்னே கடவுளுக்காக அர்ப்பணத்திட்டம் "
சமுத்திரத்தின் நட்சத்திரம்.. நம் தேவ மாதாவின் அமல உற்பவம்..
புனித சுவக்கீன் : (அன்னம்மாளை நோக்கி) அக்டோபர் மாதத்தில் நீ ஜெருசலேமில் வாங்கிய லினன் அல்லவா இது?
புனித அன்னம்மாள் : ஆம், நான் நம்பிக் காத்திருந்த நாள்களில் அதை நூற்றேன். நான் நம்பியிருந்தேன், ஏனென்றால், இறுதி தினத்தில், தேவனுடைய இல்லத்தில், ஸ்திரிகள் எவ்வளவு பக்கத்தில் போகமுடியுமோ, அதுவரையிலும் நான் சென்று ஜெபிக்கும்போது, ஏற்கனவே மாலையாகிவிட்டது.... உங்களுக்கு நினைவிருக்கிறதா? நான் இன்னும் கொஞ்சநேரம், கூடக்கொஞ்ச நேரம் “ என்று சொன்னது? அந்த வரப்பிரசாதத்தைப் பெற்றுக்கொள்ளாமல் அந்த இடத்தைவிட்டு என்னால் வரக்கூடவில்லை.
அவ்விருள் கூடும் வேளையில் நித்திய பிரசன்னரான கடவுளிடமிருந்து சம்மதம் பெற நான் என் ஆன்மாவின் அடி ஆழத்திலிருந்து காத்துக்கொண்டிருந்த அந்த புனித இடத்தில், பரிசுத்த ஸ்தலத்தின் உள்ளிலிருந்து ஓர் ஒளி, ஓர் அழகிய ஒளியின் பொறி புறப்படுவதை நான் கண்டேன். அது நிலாவைப்போல் வெண்மையாயிருந்தது. ஆயினும் உலகத்தில் உள்ள, எல்லா முத்துக்கள், இரத்தினங்களின் பிரகாசங்களையெல்லாம் தன்னிடத்தில் கொண்டிருந்தது.
புதிய திரையின் விலையேறப்பெற்ற நட்சத்திரங்களில் ஒன்று, கெருபீம்களின் பாதங்களின் கீழ் வைக்கப்பட்டிருக்கின்ற நட்சத்திரங்களில் ஒன்று அங்கிருந்து விடுபட்டு பிரகாசமான சுபாவத்திற்கு மேற்பட்ட ஒளியோடு... அது புனித திரைக்கும் அப்பாலுள்ள தேவ மகிமையிலிருந்தே ஒரு நெருப்பு புறப்பட்டது போலிருந்தது. அது வேகமாக என்னை நோக்கி வந்தது. அது காற்றைக் கடந்து வந்தபோது ஒரு மோட்ச குரலில்:
“ நீ கேட்டது உனக்கு வரக்கடவது” என்று பாடியது.
அதனாலேயே நான் “ ஒரு நட்சத்திரம் உனக்கு வரும்” என பாடுகிறேன். தேவாலயத்தின் ஒரு நட்சத்திர ஒளியாக தன்னை வெளிப்படுத்துகிற, தீபங்களின் திருவிழாவில்,
“ இதோ நான் “
என்கிற நம் பிள்ளை என்ன பிள்ளையாக இருக்கும்? நான் ஒரு புதிய எல்கானாவின் அன்னாளாக இருப்பேன் என்று நீங்கள் நினைத்த போது சரியாகவே முன்னறிந்தீர்களோ? அது என் உதிரத்திலிருந்து என்னோடு பேசியதாகத் தெறிகிறது. நீர்களின் ராகங்கள் போல் அது இனிமையாயிருந்தது.
கையில் ஏந்தும் காட்டுப்புறாவின் இதயத்தைப்போல் அந்த சின்ன இருதயம் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்த பிள்ளைக்கு என்ன பெயரிடலாம்.
சுவக்கின் : பையனாக இருந்தால் சாமுவேல் என்றழைப்போம். பெண்ணாக இருந்தால் "நட்சத்திரம்" என்போம். இந்த வார்த்தைதான் உன் பாடலை நிறுத்தியது; நான் தந்தையானேன் என்ற மகிழ்ச்சியை எனக்குத் தந்தது. அந்த வடிவத்தில்தானே தேவாலத்தின் புனித நிழலில் அது தன்னை அறிவித்தது.
அன்னம்மாள் : நட்சத்திரம்- நம் நட்சத்திரம். ஏனென்று எனக்குத் தெறியவில்லை. ஆனால் அது ஒரு பெண்ணாகத்தான் இருக்குமென நினைக்கிறேன். இத்தகைய அன்பின் சீராட்டல்கள் ஒரு இனிய மகளிடமிருந்துதான் வர முடியும். அவளை நான் சுமக்கவில்லை. அதனால் எனக்கு வேதனை இல்லை. அவள்தான் என்னை ஒரு நீல மலர்ப்பாதையில் நடத்திச்செல்கிறாள். புனித சம்மனசுக்களால் ஏந்தப்பட்டது போல் இருக்கிறது. பூமியும் தூரத்திலிருப்பதாகத் தோன்றுகிறது... கர்ப்பம் கொள்வதும் சுமப்பதும் வேதனையானது என்று ஸ்திரிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஆனால் எனக்கு எந்த வேதனையுமில்லை. என் தூர கால இளைமையில் இருந்ததைவிட... கூடுதல் பலத்தோடும், அதிக இளமையோடும், புதியதாகவும் இருப்பதாக உணர்கிறேன்.
இவள் கடவுளின் மகள். ஏனென்றால் மலடியிடம் பிறப்பதால் நம்முடையவள் என்பதை விட கூடுதலாக கடவுளின் பிள்ளையாயிருக்கிறாள். இவள் தன் தாய்க்கு ஒரு வேதனையும் தரவில்லை. தன் சமாதானத்தையும், ஆசீர்வாதங்களையுமே கொண்டு வருகிறாள். அவை இவளுடைய உண்மையான தந்தையாகிய சர்வேசுவரனின் கனிகளாம்.
சுவக்கீன் : அப்படியானால் நாம் அவளை “ மரியாள் “ என்றழைப்போம். நம் சமுத்திரத்தின் நட்சத்திரம், முத்து, மகிழ்ச்சி! இது இஸ்ராயேலின் முதல் பெரிய ஸ்திரியின் பெயர். ஆனால் நம் மரியாள் ஒருபோதும் கடவுளுக்கெதிராக பாவம் செய்யமாட்டாள். அவர் ஒருவருக்கே தன் பாடல்களைப் பாடுவாள். ஏனென்றால் அவருக்கே அவள் அர்ப்பணிக்கப்படுகிறாள். பிறக்குமுன்னே பலிப்பொருள்”
அன்னம்மாள் : ஆம். அவருக்கே இவள் அர்ப்பணிக்கப்படுகிறாள். ஆணோ, பெண்ணோ அது இருக்கிறதுபோல். மூன்று ஆண்டுகள் நம் பிள்ளை மீது நாம் மகிழ்ச்சியடைந்த பிறகு ஆண்டவருக்குக் கொடுப்போம். நம்மையும் கடவுளின் மகிமைக்காக அவளுடன் பலிப்பொருளாக!
நன்றி : கடவுள் மனிதனின் காவியம், கிடைக்கும் இடம் மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி 9487609983, 9487257479, 9894398144.
தேவ மாதாவின் 720 கோடி பிள்ளைகளுக்கும் தேவ மாதாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நம் நேச பிதா வாழ்த்தப்பெறுவாராக !
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !