ஆங்காரம் , திமிர், காய்மகாரம், கோபம், மற்றும் இந்த வேர்களில் இருந்து முளைத்து வளர்கிற எண்ணற்ற மற்ற பாவங்களுக்குறிய சோதனைகளை நம்மில் தூண்டுவது பிசாசுதான் என்று இதே எழுத்தாளர் கூறுகிறார் ஏனென்றால் துர்குணங்களின் பாவங்கள் குறிப்பாக மனத்தின் பாவங்களாக அல்லது ஆன்ம பாவங்களாக இருக்கின்றன அவை தங்களில் மற்ற பாவங்களை விட அதிக கொடியவைகளாக இருக்கின்றன
நம் உடலானது மோகம் , போசனபிரியம் ( சாப்பாட்டு பிரியம்) ஆத்துமத்தின் குளிர்ந்த நிலை , சுயப்பற்றுதல் ஆகியவற்றை நோக்கி இயல்பாக நம்மை ஈர்க்கிறது இவை சரீரப் பாவங்களாக இருக்கின்றன மனிதருடைய பார்வையில் இவை மிகக் கேவலமாகவும் அவமானம் வருவிப்பவையாக இருக்கின்றன
இறுதியாக சொத்துக்கள், செல்வச் செழிப்பு, தற்புகழ்ச்சி , தன்னைப் பற்றி அடுத்தவர் பெருமையாக பேசவேண்டும் என்ற ஆவல் , மற்றும் இன்னபிற ( உலக சிற்றினங்கள்) திருப்திகளின் மீது பேராசை கொள்ளும் படி உலகம் நம்மைக் கட்டாயப்படுத்துகிறது ஆனால் இவை வெறும் மாயத்தோற்றம் மட்டுமே நிழலானவைகளை நிஜமெனக் கருதி நாம் அவற்றை நேசிக்கும் படி இவை நம்மை வஞ்சிக்கின்றன அசுத்த அரூபி ஒன்று ஒரு மனிதனை விட்டு வெளியேறி வனாந்தரங்களில் தான் தங்குவதற்கு ஓர் இடம் தேடிச் சுற்றியலைந்து அப்படியொன்றும் காணாமல் தன்னைவிடக் கொடிய வேறு ஏழு பேய்களைச் சேர்த்துக் கொண்டு அந்த மனிதனிடமே திரும்பி வந்த உவமையை ( மத்: 12:45) இயேசு சுவாமி கூறியபோது அவர் இந்த ஏழு தலையான தீமைகளையே மறைமுகமாகக் குறித்துக் காட்டினார்
சுபாவத்தில், எவ்வளவு அடிக்கடி இந்தப் பாவங்களின் ஏதாவது ஒரு பாவத்தின் சோதனைக்கு நாம் சம்மதிக்கிறோமோ அவ்வளவுக்கு ஆழமாக அந்த பாவம் நம்மில் வேரூன்றுகிறது காலம் செல்ல செல்ல பாவ பழக்கங்கள் நம்மில் அதிகமாக தோன்றுகின்றன அவற்றிலிருந்து தப்பிப்பது வெகு கடினமாகின்றது நாம் தொடுக்க வேண்டிய பெரிய போராட்டங்கள் வெற்றி பெற வேண்டுமானால் சிறிய பாவங்களுக்கு எதிராக போராடுவதில் எப்போதும் நாம் விழிப்பாயிருக்க வேண்டும்