https://play.google.com/store/apps/details...
*அன்பான கத்தோலிக்க திருச்சபையின் உடன் பிறப்புகளுக்கும், மரியாதைக்குரிய ஆன்ம மேய்ப்பர்களுக்கும், துறவற அருட்சகோதரிகளுக்கும் எங்கள் பணிவான வணக்கம்.*
அன்பான கத்தோலிக்க சொந்தங்களே,
நாம் இன்று நல்ல கத்தோலிக்கர்களாக இருப்பதற்கு நமது பெற்றோரும் அவர்களது பெற்றோர்களுமே காரணம். அவர்கள் நமக்கு தந்துவிட்டு சென்ற கத்தோலிக்க பாரம்பரியங்களும் வேதசத்தியங்களுமே நம்மை இன்றளவும் நமது கத்தோலிக்க விசுவாசத்தில் நிலைத்து நிற்க உறுதுணையாக இருந்து வருகிறது.
பழைய காலத்தில் இருந்த அருமையான கத்தோலிக்க நூல்கள், செபப் புத்தகங்கள், பக்தி இலக்கியங்கள், தியான உரைகள், ஞான நூல்கள், பாடல்கள், போன்றவற்றை பத்திரமாக பாதுகாத்து நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் அருமையான சேவையை செய்து வருகிறோம்.
நமது இணையதளத்தில் *முன்னூறு ஆண்டுகள் பழைமையான நூல்கள் கூட வரி வடிவமாக மாற்றப்பட்டு அடுத்த தலைமுறை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுபோல் முதன்முதல் தமிழில் வெளியான பைபிள் உட்பட மூன்று வகையான மிகப்பழைய தமிழ் பைபிள்* நமது இணையதளத்தில் உள்ளது. இதுபோன்ற மிக மிக பழைமையான நூல்கள் நமது இணையதளத்தில் அடுத்த தலைமுறையினரின் பயன்பாட்டுக்காக பாதுகாக்கப்பட்டுள்ளது. அழிந்து போகும் நிலையிலுள்ள மிகப் பழைய பல கத்தோலிக்க நூல்கள் நமது சீரிய முயற்சியால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இன்னும் இது போல் உலகம் அறியாத பல அழிந்துவிடும் நிலையிலுள்ள மிகப் பழைய கத்தோலிக்க தமிழ் நூல்களை நாம் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் கத்தோலிக்க திருச்சபையின் பாரம்பரியங்கள் அடுத்த தலைமுறையால் அறிந்து கொள்ளப்பட முடியும்.
*இந்த எங்களின் முயற்சிகளை உலகறிய செய்ததோடு இன்றும் எங்களுக்கு ஆலோசனை, ஜெபங்கள் மற்றும் ஆசீரால் வழிநடத்தி வருகின்ற எமது பங்குத்தந்தை, ஆன்ம வழிகாட்டி அருட்தந்தை M.W.பிரவீன் அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.*
*மத்திய தமிழ்நாட்டில் இருக்கும் நமது அட்மின்களுக்கு ஆன்ம வழிகாட்டியாக இருந்து இணையதளத்திற்காகவும் அதன் உபகாரிகளுக்காகவும் தினமும் வேளாங்கண்ணியிலிருந்து திருப்பலி ஒப்புக்கொடுக்கும் அருட்தந்தை செபஸ்டியன் அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.*
*தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருக்கும் நமது அட்மின்களுக்கு ஆன்ம வழிகாட்டியாக திருநெல்வேலியில் இருந்து வழிநடத்தும் அருட்தந்தை அல்போன்ஸ் அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.*
கத்தோலிக்க புத்தகங்கள் App உங்கள் மொபைல் போனில்.. (Mobile Books App). *ஒரு சிறிய கத்தோலிக்க நூலகம் உங்கள் போனில்..* தற்போது சுமார் 100 புத்தகங்களோடு வெளிப்படுகின்றது. விரைவில் சுமார் 500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேர்க்கப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறன.
*புத்தக அலமாரிகள் (Library Book Racks) 😘
1. திவ்ய பலி பூசை
2. திவ்ய நற்கருணை
3. சேசு நாதர்
4. தேவமாதா
5. ஜெப புத்தகங்கள்
6. வணக்க மாதம்
7. ஞான உபதேசம்
8. தியான புத்தகங்கள்
9. பிரசங்கங்கள்
10. தேவ மாதா காட்சிகள்
11. குடும்பத்தினருக்கு..
12. மாதா பரிகார மலர்
13. கத்தோலிக்க வரலாற்றுப் புத்தகங்கள்
14. தவக்காலம்
15. அர்ச்சியசிஷ்டவர்கள் (புனிதர்கள் வரலாறுகள்)
16. இறுதிகாலம், பாவம், மரணம், நித்திய தீர்வை
17. கிறிஸ்தவ இலக்கியங்கள்
18. இயேசு சுவாமியின் புதுமைகள்
19. கத்தோலிக்க திருச்சபை
20. சாத்தான், நரகம்
புனிதர்கள் எழுதிய புத்தகங்கள், பல அரிய புத்தகங்கள், பாரம்பரிய புத்தகங்கள், ஜெபங்கள் என்று தனித்தனி ரேக்கில்..
படிக்க எளிதாக, வசதியாக, சுலபமாக, விரைவாக.. புத்தகங்களை கையில் வைத்து படிப்பது போன்ற உணர்வுடன் படிக்கலாம்..
*இலவசமாக படிக்க.. உங்களுக்காக..*
கத்தோலிக்க பாரம்பரிய பக்தியை வளர்ப்பதும், ஆன்மீகத்தில் மேலும் வளர உதவுவதும், கத்தோலிக்க விசுவாசத்தை பாதுகாப்பதுமே எங்கள் நோக்கம்.. இந்த App-ன் நோக்கம்..
*உங்களோடு நடமாடும், பயணம் செய்யும், உங்களோடு இருக்கும் இந்த கத்தோலிக்க புத்தக நூலகம்...*
பயன்படுத்துவீர்… பயன்பெறுவீர்.. பிறருக்கும் அறிமுகம் செய்வீர்.. இதுவும் ஒரு நற்செய்திப் பணியே..
Web site link : https://www.catholictamil.com/
Radio link : https://www.radio.catholictamil.com/
Book Library Link : https://play.google.com/store/apps/details...
இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!!