இன்று ஒருசந்தி, சுத்தபோசனம், ஒறுத்தல் முயற்சிகள் செய்வது நம் கடமை. இன்று துக்க தேவ இரகசியங்களை தியானித்து ஜெபமாலை ஒப்புக்கொடுத்தல்; சிலுவைப்பாதை செய்தல், இயேசுவின் திருஇருதய ஜெபமாலை ஜெபித்தல் போன்ற பக்தி முயற்சிகள் செய்தல் வேண்டும். இதோடு நம் இன்றைய சிலுவைகளை (துன்பங்களை) இயேசுவின் திருஇருதயத்திற்கு பரிகாரமாக ஒப்புக்கொடுக்க வேண்டும்..
இன்று முழுவதும் நம் இயேசு தெய்வம் நமக்காக அனுபவித்த சிலுவைப் பாடுகளை தியானித்தல் மிகப்பெரிய புண்ணியமாகும். ஜெபம், தவம், பரிகாரம் நம் வாழ்வில் இன்றியமைததாக இருத்தல் வேண்டும். ஏனென்றால் உலக வாழ்க்கை எப்போதுமே ஆபத்து நிறைந்தது. இது போன்ற பக்தி முயற்சிகள்தான் நம்மை பாவத்திலிருந்து பாதுகாக்கும்.
ஆகையால் மாதத்தின் முதல் வெள்ளியான தலைவெள்ளியில் நாம் நம் இயேசு நாதருடன் தங்கி இருப்போம்; அவரோடு பேசுவோம்; உரையாடுவோம்; உறவாடுவோம்; அவரிடம் பேசிக்கொண்டே நம் ஆன்மாவின் இன்றைய நிலையை ஆராய்வோம். மேலும் மேலும் நம் இயேசுவின் அருகில் செல்வோம். அப்போதுதான் நாம் இயேசுவின் மேல் வைத்துள்ள அன்பு கூடும்.
இயேசுவில்.. இயேசுவோடு... இயேசுவாய் வாழ்வோம்.. நாம் இயேசுவைப்போல் வாழ்வதே நம் வாழ்க்கையில் லட்சியமாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் முழுமை அடைய முடியும்.. முயற்சி செய்வோம்...
குறிப்பு : நாளை முதல் சனி அதற்கும் நாம் நம்மை தயாரிக்க கடமைப்பட்டுள்ளோம்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க
நன்றி பிரதர் : சந்தியாகு